அக்னிப்புரட்சி இன்றைய (28.12.2021) முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (28.12.2021) முக்கிய செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (28.12.2021) முக்கிய செய்திகள்

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரபிரதேசம் செல்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு.

அடுத்தாண்டு உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் 28 ஆம் தேதி முதல் 3 நாள் பயணம்.

* திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இடிந்த வீடுகளுக்கு அருகில் உள்ள 24 வீடுகளை காலி செய்ய உத்தரவு.

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருக்கக்கூடிய வீடுகளை அண்ணா பல்கலைக்கழக வல்லுநர் குழு இன்று ஆய்வு செய்யவுள்ள நிலையில் உத்தரவு.

* ஆஷஸ் 3வது டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி:

இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில்  இங்கிலாந்தை வீழ்த்தியது.

இங்கிலாந்து அணி 2 வது இன்னிங்சில் 68 ரன்களுக்கு சுருண்டது.

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது ஆஸ்திரேலியா.

* இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 653 ஆக அதிகரிப்பு.

நேற்று 578 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 653 ஆக அதிகரிப்பு.

* சவுரவ் கங்குலிக்கு கொரோனா பாதிப்பு.

பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கொல்கத்தா உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதி.

* தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று 100க்கும் கீழ் உள்ளது; சென்னையில் மட்டும் தினசரி பாதிப்பு 100க்கும் அதிகமாக உள்ளது - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

* பெண் சாமியார் அன்னபூரணியை கைது செய்யக்கோரி செங்கல்பட்டு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு.

இந்து மத நம்பிக்கையை அவமதிக்கும் விதமாக போலி சாமியார் அன்னபூரணி செயல்பட்டு வருவதாக மனுவில் குற்றச்சாட்டு.

* இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி.

இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி கோர்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் ஆகிய தடுப்பூசிகளுக்கும், மால்நுபிரவிர் என்ற மாத்திரைக்கும் ஒப்புதல்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.

* புதுச்சேரிக்கும் வந்தது ஒமிக்ரான்:
புதுச்சேரியில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

80 வயது முதியவர் மற்றும் 20 வயது பெண்ணுக்கு பாதிப்பு உறுதி என சுகாதாரத்துறை தகவல்.

* டெல்லியில் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு.

அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது டெல்லி அரசு.

டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகள்  உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடம், யோகா மையங்கள், கேளிக்கை பூங்காக்கள் மீண்டும் மூடப்படுகின்றன.

பொதுப்போக்குவரத்தில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.

திருமணம், மரணம் தொடர்பான நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.

* தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு முதற்கட்ட திருப்புதல் தேர்வு அறிவிப்பு

12ஆம் வகுப்புக்கு ஜனவரி 20 முதல் 28ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது

10ஆம் வகுப்புக்கு ஜனவரி 19 முதல் 27ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் - தேர்வுத்துறை

* தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் உறுதி

வெளிநாடுகளில் இருந்து வந்த 7 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் பாதிப்பு

ஒமிக்ரான் உறுதியானவர்களில் 6 பேர் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதி தமிழகத்தில் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 45ஆக உயர்வு

ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்

* தமிழ்நாடு அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 17%ல் இருந்து 31% சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

* பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகளில் மாற்றம் செய்ய திட்டம் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

* தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு முதற்கட்ட திருப்புதல் தேர்வு அறிவிப்பு,

12ஆம் வகுப்புக்கு ஜனவரி 20 முதல் 28ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

10ஆம் வகுப்புக்கு ஜனவரி 19 முதல் 27ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் - தேர்வுத்துறை.

* வேலூர்: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

வேலூர் கற்பகம் சூப்பர் மார்க்கெட் இணைப்பதிவாளர்/ மேலாண் இயக்குனர் ரேணுகாம்பாள் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை.

வேலூரில் உள்ள கற்பக சூப்பர் மார்க்கெட்டின் மாடியில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனையிட்டதில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 45 பறிமுதல் செய்து விசாரணை.

* பல்கலைக்கழக வேந்தர்களாக மாநில ஆளுநர் செயல்படும் அதிகாரங்களை குறைத்து மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றம்.

துணை வேந்தர்களை ஆளுநர் நியமிப்பதற்கான அதிகாரமும் இந்த சட்ட மசோதாவால் பறிபோகிறது.

* புத்தாண்டு கொண்டாட புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

விடுதிகள், தனி நிகழ்ச்சிகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபான விற்பனை கூடாது - புதுச்சேரி அரசு அறிவிப்பு.

* செஞ்சுரியன் டெஸ்ட் 3ம் நாள் ஆட்ட நேர முடிவு - இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 16/1 ரன்கள் எடுத்து 146 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்க அணி 197 ரன்களில் ஆட்டமிழந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages