அக்னிப்புரட்சி இன்றைய (13.12.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* நாயகியாய் எழுந்தருளிய நம்பெருமாள்:
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுந்த ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 10ம் திருநாள்: ஸ்ரீ நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் எனும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவின் சகோதரரும் மூத்த எழுத்தாளருமான என்.ராமகிருஷ்ணன் மதுரையில் காலமானார்.
82 வயதான என்.ராமகிருஷ்ணன், 80க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார்.
* இந்தியாவை சேர்ந்த மாடல் அழகியான ஹர்னாஸ் சாந்து, 2021-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் சாந்து, பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார்.
இந்தியாவில் சுஷ்மிதா சென், லாரா தத்தா ஆகியோரை தொடர்ந்து மகுடம் சூடினார், ஹர்னாஸ் சாந்து.
21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து பிரபஞ்ச அழகி தேர்வு.
* அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அலுவலகத்திற்கு இல்லத்தில் இருந்து நடந்து சென்று பணிகளை கவனித்தார்.
சுற்று சூழலை பாதுகாக்க வாரத்திற்கு ஒரு நாள் பொது ஊர்தியில் வர மாசு காட்டுப்பாட்டு வாரிய தலைமை அதிகாரி வேண்டுகோள் விடுத்த நிலையில் ஆட்சியர் நடந்து வந்தார்.
* ஹெலிகாப்டர் விபத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விரைந்து செயல்பட்டது - லெப்டினண்ட் ஜெனரல் அருண்.
விபத்தில் காயமடைந்துள்ள குரூப் கேப்டன் வருண் சிங் ஆபத்தான நிலையை இன்னும் கடக்கவில்லை - அருண்.
* தமிழக சட்டப்பேரவை ஜனவரி 5-ம் தேதி ஆளுநர் உரையுடன் ஜார்ஜ் கோட்டையில் தொடங்குகிறது - சபாநாயகர் அப்பாவு.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம்.
4 நாள் பயணமாக இன்று முதல் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தூத்துக்குடி, நெல்லை, மதுரை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் கலந்து கொள்கிறார்.
* சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத் தேர்வில் பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி நீக்கம்- சிபிஎஸ்இ.
* தமிழக வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டிக்கு பதில் சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
பணீந்திர ரெட்டியை வணிக வரித்துறை ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
* ஒமிக்ரான் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு:
ஒமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் முதன்முதலாக பிரிட்டனில் ஒருவர் உயிரிழப்பு - அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்.
* ரோகித் சர்மா விலகல்:
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகினார் ரோகித் சர்மா.
அவருக்கு பதிலாக அணியில் இடம் பிடித்துள்ளார் பிரியங்க் பஞ்சல்.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் டிச .26 - ல் தொடக்கம்.
* தமிழகத்தில் ஊரடங்கு டிச. 31 வரை நீட்டிப்பு:
சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 31.12.2021 மற்றும் 1.1.2022 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், 03.01.2022 முதல் அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் ( 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மட்டும் ) , அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்.
அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்.
அனைத்து கடைகளும் , குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு . கடைகளில் , சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது , ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும் .
No comments:
Post a Comment