வன்னிய இளைஞர்களே, வன்னிய மக்களே திரண்டு வாரீர் இந்த முதியவன் நான் அழைக்கிறேன்!.. வன்னியர் சங்கம் தலைவர் பு.தா. அருள்மொழி அழைப்பு
அன்பு சொந்தங்களே!.....
(12/12/2021) அன்று நண்பகல் தர்மபுரி சென்று தர்மபுரி மாவட்ட செயலாளர் செந்தில் அவர்களின் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டேன்!.. அதன்பிறகு டாக்டர் அய்யா தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர்களை சந்தித்தேன், மிகுந்த அக்கறையோடு என் உடல் நலம் பற்றி விசாரித்தார்!.,
பிறகு சங்க செயல்பாடுகள் வலிமையாக இருக வேண்டும் என்பதைப் பற்றி அறிவுறுத்தி தினந்தோறும் அரை மணி நேரம் என்னோடு பேசுங்கள் என்று அறிவுறுத்தினார்!. பின்னர் அவர்கள் சேலம் மாவட்ட பொதுக்குழுவில் கலந்து கொள்ள சென்றார்கள், நான் அங்கிருந்து விடைபெற்று சிதம்பரம் வந்துவிட்டேன்.
இடையில் நம்முடைய நம்பிக்கை நட்சத்திரம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் நான் முன்பே அவரிடத்தில் கேட்டிருந்த படி என்னை நாளை(13/12/2021) வந்து சந்திக்கும்படி அறிவுறுத்தினார். நான் மறுநாள் காலை எங்கள் பகுதி ஒன்றிய செயலாளர் திருமணம் மற்றும் இரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு சென்னை வந்தேன். மாலை (6.15) மணி அளவில் திலக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன்.
கட்சியினுடைய செயல்பாடுகள் பற்றியும், சங்கத்தை எப்படி நடத்துவது? என்பது பற்றியும் அவருடன் விவாதித்தேன்.
தேர்தலில் தொய்வடைந்து போன கட்சிகள் தங்களுடைய பிரச்சார வேகத்தால் எப்படி எல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தன என்பது பற்றியும், நாம் எப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது பற்றியும் பேசினோம் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தீவிரமாக செயல்படுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன கட்சி முனைப்பாக வேலை செய்யும் என்றும் ஜனவரி மாதத்தில் டாக்டர் அன்புமணி அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக கிராமந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதையும் ஆர்வத்தோடு வெளியிட்டார்.
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு டாக்டர் அய்யாவையும் டாக்டர் அன்புமணி அவர்ளையும் நேரடியாக சந்தித்து பேசியது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது.
வன்னியர் சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஊரிலும் மக்களை சந்தித்து நாம் பெற்ற 10.5% சதவிகித உள் ஒதுக்கீடு வஞ்சகமாக ரத்து செய்யப்படுகின்ற சதி வேலையை மக்கள் திறள் மூலம் முறியடிக்க வேண்டும் என்று உறுதி கூறிவிட்டு அந்த வேலையை நான் செய்கிறேன் என்று அவரிடம் இருந்து விடை பெற்றேன்.
நாம் வன்னியர் சங்கத்தை மிகவும் வலிமையான இயக்கமாக மாற்ற வேண்டும் நம்முடைய மக்கள் சக்தியை ஒருங்கிணைப்பது மட்டுமே வலிமையான வன்னியர் சங்கத்தை? உருவாக்கும் 1952இல் நேருவுக்கு அடுத்தபடியாக அதிக ஓட்டுகளைப் பெற்றவர் நம்முடைய உழைப்பாளர் கட்சியின் வேட்பாளர் கிடங்கல் சம்பந்தம் அவர்கள் . அதே தேர்தலில் நம்முடைய வேட்பாளர் திருக்குறள் முனுசாமி ராம்நாத் கோயங்கா அவர்களையே தோற்கடித்தார்.இப்படி பல வெற்றிகளைக் குவித்த நம்முடைய சமுதாயம் அரசியல் அலை காற்றில் சிக்கி தன்னைத் தானே இழுந்து விட்டது!..
இன்றைக்கு அது தன்னை மீண்டும் வலுப்படுத்தி கொள்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழகம் என்றால் திமுகவும் அண்ணா திமுக வும் மட்டும்தான் அரசியல் இயக்கங்கள் மற்றவர்கள் எல்லாம் அவர்கள் துணையோடு இயங்குகிற சக்திகள் எந்த நிலையை மாற்ற
காலம் நமக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறது!...
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைவர்களுக்கு இடையே இருக்கிற "ஈகோ" பிரச்சனையால் தடுமாறி விழுந்து கொண்டிருக்கின்றது திமுக ஆளுங்கட்சியாக வந்திருந்தாலும் அது அடுத்த முறை மக்களை கவர்ந்து ஆட்சியை பிடிக்குமா என்ற ஒரு சிந்தனை அனைவருக்கும் உருவாகி உள்ளது அதற்கு ஒரு வலுவான மாற்று கட்சி தேவை என்ற மனநிலை தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது!.....
இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை வன்னியர் சங்கம் வன்னியர்கள் வாழ்கின்ற பகுதியிலே ஒரு கட்டுப்பாட்டோடு இந்த சமுதாயத்தை ஒருங்கிணைக்க வேண்டும் வன்னியர்களின் கட்சியாக திகழ்கின்ற பாட்டாளி மக்கள் கட்சியை மற்ற சமுதாயத்தினர் வாக்குகளை பெறக்கூடிய வகையில் வலிமையானதாக மாற்ற வேண்டும், இதற்கான செயல் திட்டங்களை டாக்டர் அய்யா அவர்களும் இளவல் அன்புமணி அவர்களும் தயாரித்திருக்கிறார்கள் இதை செயல்படுத்த முனைப்போடு இந்த ஆண்டு நாம் செயலில் இறங்க வேண்டும் அப்படி செய்வதால் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
வன்னியர்களை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக இந்த நாட்டின் பெரிய சாதிகள் இருக்கின்ற நிலையில் அவர்களையெல்லாம் ஒருங்கிணைப்பது போன்ற நடவடிக்கைகளை நாம் செய்ய இருக்கிறோம் எனவே புதிய நம்பிக்கையோடு புத்துணர்ச்சியோடு புதியதோர் தமிழகம் காண இளைஞர்கள் அனைவரும் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும், இது என்னை போன்றவர்களுடைய வேண்டுகோள்!....
(1883) இல் இந்தியாவில் இருந்த ஆங்கிலேயரான ஆலன் ஆக்டேவியன் ஹீயும் என்பவர்(An old man's hope) என்று ஒரு அறிக்கை விடுத்து கல்கத்தா பல்கலைக் கழகத்து மாணவர்களை அழைத்து இந்தியாவில் ஆங்கிலேய அரசிடம் இருந்து உரிமைகளை பெறுவதற்கு இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்!...
அந்த கோரிக்கையின் படி 1885 இல் உருவானது தான் இந்திய தேசிய காங்கிரஸ் இந்த காங்கிரஸ் உருவாவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே வன்னியர்களுக்கு உரிமை கோரி (வன்னிய குல சத்திரியர் சங்கம்) இந்த தமிழ்நாட்டில் உருவாகியது!.. கிருஷ்ணன் நாயகரும் கோபால் நாயகரும் போன்ற தலைவர்கள் இந்த சங்கத்தை உருவாக்கினார்கள், அதன்பிறகு எழுச்சி பெற்று (1952)இல் தமிழ்நாட்டில் ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்தது பின்னர் அரசியல் அணுகுமுறைகளில் ஏற்பட்ட தவறுகள் அதை பின்னுக்குத் தள்ளியது அதன் பிறகு இந்த சமுதாயத்தை உயர்த்துவதற்காக (1980)இல் டாக்டர் அய்யா அவர்களால் அவர்களோடு சேர்ந்து உணர்வுள்ள வன்னியர் பெருமக்களால் வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்டது வன்னியர் வாழ்வு மலர 20 சதவீத இட ஒதுக்கீடு தேவை என்று போராட்டம் நடத்தியது அதில் ஒரே நாளில் இருபத்தி ஒரு பேர் மரணமடைந்தார்கள் அதன் தொடர்ச்சியாக இதுவரை அந்தப் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முப்பத்தி ஏழை தாண்டியுள்ளது அந்த சங்கம் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக பாட்டாளிமக்கள் கட்சியை உருவாக்கியது
அந்த அணுகுமுறைகளை நமது சமுதாயத்திலுள்ள மக்கள் சரியான புரிதல் இல்லாததால் பல்வேறு அரசியல் கட்சிகளை நம்பி செல்கிற ஒரு நிலை இன்று நிலவுகிறது!..
எனவே 70 வயது நிரம்பிய நான் 83வயது நிறைந்த டாக்டர் அய்யா அவர்களோடு இணைந்து வன்னியர் இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம் அதை ஏற்று வன்னிய இளைஞர்கள் களம் இறங்க வேண்டும்!...
ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும்!.. நம் மக்கள் அனைவருக்கும் உரிய வருவாயையும் தகுதியும் பெற வேண்டும் தமிழகத்தில் ஒரு சமநிலை ஏற்படுத்தப்பட வேண்டும் அதற்கான முயற்சிகளில் இறங்குவோம் !..வன்னிய இளைஞர்களே,வன்னிய பொதுமக்களே திரண்டு வாரீர் என்று முதியவன் நான் அழைக்கிறேன்!.. அய்யாவின் பெயரால் அழைக்கிறேன் வாருங்கள்!..... வணக்கம்.
No comments:
Post a Comment