திருப்பாவை மார்கழி 15ம் நாள்
பாடல் விளக்கம்.
(1) தூங்கும் பெண்ணை எழுப்ப வந்த கூட்டத்தினருக்கும்,
(2) எழுந்து வந்த பெண்ணிற்கும் இடையே நடைபெறும் உரையாடல்.,
(1)இளமையான கிளி போன்றவளே, என்ன இது? இவ்வளவு பெண்கள் எழுந்து வந்த பின்பும் நீ உறங்குகின்றாயே;
(2) பெண்களே, இப்போதே புறப்பட்டு விட்டேன். உள்ளம் உறையும்படி கோபத்துடன் அழைக்க வேண்டாம்.
(1) நீ பேசுவதில் வல்லவள். உன் கடுமையான சொற்களையும், வாயையும் நெடுநாட்களாக நாங்கள் அறிவோம்.
(2) இவ்வாறு பேசும் நீங்கள்தான் பேச்சில் வல்லவர்கள். நானே ஏமாற்றுக்காரியாக இருக்கிறேன். நீங்கள் வேண்டுவது யாது?என்னை எதற்காக அழைத்தீர்கள்?
(1) நீ விரைந்து எழுந்து வா. எங்களிடம் இல்லாத தனிச்சிறப்பு உனக்கு என்ன உள்ளது?.
(2)எல்லோரும் வந்து விட்டனரா?
(1)நீயே வந்து எல்லோரையும் எண்ணிப்பார்த்துக் கொள்
(1) குவாலயபீடம் என்ற யானையைக்கொன்றவனும், கம்சன் முதலான பகைவர்களின் மிடுக்கினை அழித்தவனுமாகிய மாயனான கண்ணனைப்பாடுவதற்காகத்தான் அழைக்கின்றோம்...
No comments:
Post a Comment