வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையனை காப்பாற்ற வேண்டும்-உடனடியாக விடுதலை செய்ய தமிழக முதலமைச்சர் ஆணையிட வேண்டும்! - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் இன்று ட்விட்டர் வாயிலாக வலியுறுத்தல்.
34 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் மூத்த சகோதரர் மாரடைப்பு காரணமாக சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி கவலையளிக்கிறது. அவருக்கு சிறப்பான சிகிச்சை அளித்துக் காப்பாற்ற வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்!(1/3)
பொய்வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாதையன் 34 ஆண்டுகளாக கர்நாடக மற்றும் தமிழக சிறைகளில் வாடி வருகிறார். முதுமையாலும், நோயாலும் பாதிக்கப்பட்டுள்ள மாதையனை தொடர்ந்து சிறையில் அடைத்து வைப்பது நியாயமல்ல... மனிதாபிமானமும் அல்ல!(2/3)
மாதையனின் விடுதலை தொடர்பாக பா.ம.க. பொதுக்குழுவில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். மாதையனின் முதுமை மற்றும் நோயைக் கருதி, சிறப்பு நேர்வாக, அவரை உடனடியாக விடுதலை செய்ய தமிழக முதலமைச்சர் ஆணையிட வேண்டும்!(3/3)
No comments:
Post a Comment