சுனாமி (ஆழிப்பேரலை) 17 ஆம் ஆண்டு நினைவு தினம் - பாமக தலைவர் ஜி.கே.மணி அஞ்சலி - Agnipuratchi

சுனாமி (ஆழிப்பேரலை) 17 ஆம் ஆண்டு நினைவு தினம் - பாமக தலைவர் ஜி.கே.மணி அஞ்சலி

Share This

சுனாமி (ஆழிப்பேரலை) 17 ஆம் ஆண்டு நினைவு தினம் - பாமக தலைவர் ஜி.கே.மணி அஞ்சலி
             
2004 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26 ஆம் நாள் சுனாமி (ஆழிப்பேரலை ) யின் கோரத் தாண்டவத்தின் கொடூரத்தால் சென்னை மெரினாக் கடற்கரையிலிருந்து கன்னியாகுமரியின் கொட்டில்பாடு கிராமம் வரை பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழப்பு, வீடுகள் - உடமைகள் எல்லாம் இழப்பு என சொல்லி மாளா சோகக் கதை நடந்த நாள். நாகை மாவட்டம் நாகை, வேளாங்கன்னி, பூம்புகார் ஆகிய இடங்களில் மட்டும் 6,065 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்லாயிரம் பேர் உயிரிழப்பு ஒரே நாளில் அந்த நாளை நினைவு கூறும்போது பேரதிர்ச்சியும் வேதனையும் கவலைகொள்ளச் செய்கிறது. அந்தக் கொடூர சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு இன்று நினைவஞ்சலி செலுத்துகிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages