அக்னிப்புரட்சி இன்றைய (25.12.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (25.12.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (25.12.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு பிரார்த்தனை.

இயேசு கிறிஸ்து பிறந்தநாளான இன்று உலகெங்கும் கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனை மற்றும் திருப்பலிகள் நடைபெற்றன.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய வளாகத்தில் உள்ள சேவியர் திடலில் கிருஸ்துமஸ் விழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.

இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ் குழந்தை இயேசு சொருபத்தை பக்தர்களுக்குக் காண்பித்தார்.

* நீச்சல் போட்டியில் 3 தங்கம்!

310 பல்கலைக்கழகங்கள் பங்குபெற்றுள்ள இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்ட்டியூட் ஆப் சோஷியல் ஸ்டடீஸில் நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் இறுதியாண்டு பயிலும் தனுஷ் 50 மீ, 100மீ மற்றும் 200மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் 3 தங்க பதக்கங்களும், 4×100 மெட்லி ரிலே பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்றார்.

* கோயில்களில் ஆவின் நெய் பயன்படுத்த அறிவுரை:

ஜனவரி 1 ஆம் தேதி முதல் கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்களில் ஆவின் நெய், வெண்ணெய் பயன்படுத்த இந்துசமய அறநிலையத்துறை ஆணை.

பக்தர்கள் நெய் விளக்கு ஏற்ற விற்கப்படும் நெய்யினையும் ஆவினில் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு.

* டெல்லி : முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மரியாதை

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்

* சென்னையில் இதுவரை 26 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதை கல்லூரிகள் தவிர்க்க வேண்டும்.
வகுப்பறைகளில் குளிர்சாதன கருவிகளை செயல்படுத்தக்கூடாது.

விடுதிகளில் சாப்பிடும்போது சில்வர் தட்டுக்கு பதில் மாணவர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையால் ஆன தட்டுகளை வழங்கவேண்டும்.

கல்லூரிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் கோவிட் தடுப்பூசி செலுத்தவேண்டும்.

* அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கி கணக்குகள் முடக்கம் - விருதுநகர் மாவட்ட காவல்துறை நடவடிக்கை.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராஜேந்திர பாலாஜி தேடப்பட்டு வரும் நிலையில் நடவடிக்கை.

* வேலூரில் இன்று காலை மீண்டும் நில அதிர்வு:

பேரணாம்பட்டில் 5 நிமிட இடைவெளியில் இரு முறை நில அதிர்வு. வேலூரில் 3 ஆவது முறையாக நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது, சுமார் 3 வினாடிகள் நீடித்ததாக தகவல்.

* கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து அதிமுகவைச் சேர்ந்த 7 ஒன்றிய கவுன்சிலர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

* எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியின் நண்பர் செல்வகுமார் கைது.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூபாய். 1.37 கோடி பண மோசடி புகாரில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மணி கைது செய்யப்பட்ட நிலையில்.

தலைமறைவாக இருந்த மணியின் நண்பர் செல்வகுமார் கைது.

* வேகமெடுக்கும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய குழு.

இந்நிலையில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா, மேற்குவங்கம், மிசோரம், கர்நாடகா, பிகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது.

ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க மத்திய உயர்மட்ட குழு வருகை தரவுள்ளதாகவும் அந்த குழுவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த தேவையான ஆலோசனைகளை மத்திய குழு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 12 பேர் குணமடைந்தனர்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

ஏற்கனவே 3 பேர் குணமடைந்த நிலையில் மேலும் 9 பேர் ஒமிக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

மேலும் நட்சத்திர விடுதிகளில் புத்தான்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.

* வாட்ஸ் அப் குரூப்பில் உள்ளவர்கள் சர்ச்சை கருத்துக்கு அட்மின் பொறுப்பு கிடையாது- உயர்நீதி மன்றம்.

வாட்ஸ்அப் குழுவில் பதிவிடப்பட்ட சர்ச்சை கருத்துக்காக, குழு அட்மினான, கரூரை சேர்ந்த ராஜேந்திரன் மீது போலீசார் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

* அசாம் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்; இரவு 11 மணிமுதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு.

புத்தாண்டு கொண்டாட்டத்தால் டிசம்பர் 31ம் தேதி மட்டும் இரவு நேர ஊரடங்கு இருக்காது எனவும் அறிவிப்பு.

* உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த தொலைநோக்கியான James Webb தொலைநோக்கியை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நாசா.

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்தினர்.

1989 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், 2000 களின் முற்பகுதியில், விண்வெளியில் ஏவப்படும் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த தொலைநோக்கியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர்.

இந்த விண்வெளி தொலைநோக்கி பல விதமான சோதனைகளை கடந்து தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 

1960-களில் நாசாவின் பல விண்வெளி செயல்பாடுகளுக்கு காரணமான முக்கிய நபரான ஜேம்ஸ் இ.வெப்பின் நினைவாக புதிய தொலைநோக்கிக்கு ஜேம்ஸ் வெப் என பெயரிடப்பட்டுள்ளது.

இதனை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியுள்ளதால் பிரபஞ்சம், நெபுலாக்கள் நட்சத்திரங்கள் உருவாக்கம் மற்றும் பூமி உருவான விதம் போன்ற பல அரிய தகவல்களை மனிதனால் அறிய முடியும்.

* கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி பிரதமர் மோடி தனது உரையை துவங்கினார்.

இந்தியாவில் உருமாறிய ஒமிக்ரான் தொற்று பரவ தொடங்கியுள்ளது.

ஒமிக்ரான் பரவலைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை - பிரதமர் மோடி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கைகளை கழுவ வேண்டும்; முகக்கவசம் அணிய வேண்டும்.

குழந்தைகளுக்காக 90,000 படுக்கைகள், 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளன - பிரதமர் மோடி

தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதிலும், அதனை மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதிலும் மத்திய அரசு விரைவாக செயல்படுகிறது.

மரபணு தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

நாட்டில் 61% பொதுமக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர்- பிரதமர் மோடி.

இந்தியாவில் இதுவரை 141 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

18 வயதுக்கு மேற்பட்டோரில் 90% பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது -  பிரதமர் நரேந்திர மோடி.

* முன்கள பணியாளர்களுக்கு  பூஸ்டர் தடுப்பூசி.

நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.

கொரோனாவுக்கு எதிரான மூக்கு வழியாக செலுத்தப்படும் உலகின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது - பிரதமர் மோடி.

* இந்தியாவில் 15 லிருந்து 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சினுக்கு இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages