அக்னிப்புரட்சி இன்றைய (17.12.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* நாடு முழுவதும் 2வது நாளாக வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து இன்றும் போராட்டம்.
* அமெரிக்காவில் ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருப்பதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - அதிபர் ஜோ பைடன்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உயிரிழக்க நேரிடும் - ஜோ பைடன் எச்சரிக்கை.
* தமிழக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்:
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டம்.
அதிமுக நிர்வாகிகள் பெரிய அளவில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; மாநிலங்களவை வரும் 20-ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைப்பு.
12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிராக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் அவை ஒத்திவைப்பு.
* வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் - இந்திய விமான நிலைய ஆணையம்
* முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி.
வேலை வாங்கித் தருவது தொடர்பான மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
* கடலூர் - உள்ளூர் விடுமுறை:
கடலூர்: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு வரும் 20ஆம் தேதி திங்கட்கிழமை கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி மாதம் 8ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கருதப்படும் - மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்.
* பள்ளி சுவர் இடிந்து விபத்தில் மாணவர்கள் பலி 3 ஆக உயர்வு.
நெல்லையில் தனியார் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு
நெல்லை பொருட்காட்சி திடல் அருகே உள்ள பள்ளியில் கட்டட சுவர் இடிந்து விழுந்து விபத்து - 8 ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் உயிரிழப்பு.
கழிவறை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு - 2 பேர் படுகாயம்
8 சம்பவ இடத்தில் நெல்லை காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன் ஆய்வு இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்
சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தை கண்டித்து பள்ளி மாணவர்கள் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை
* தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் அறிவிப்பு.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
* நாகை மாவட்டம் நாகூரில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
பண்டைய தமிழர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் ரூ 2 கோடியில் 3.06 ஹெக்டேர் பரப்பளவில் பூங்கா அமைக்கப்படும்.
நெய்தல் பூங்காவில் பனைக்குடில்கள், பவளப்பாறை, முத்துச்சிற்பி, மூங்கில் குகைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன - தமிழக அரசு.
நாகை மாவட்ட மக்களின் வாழ்வியல் சூழல், வாழ்க்கை முறை, உணவு, கலை, பண்பாடு, ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் நெய்தல் பாரம்பரிய பூங்கா - தமிழக அரசு.
* டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி! - அம்மாநில அரசு தகவல்
* குரங்கிற்கு முதலுதவி செய்த பிரபு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு
* திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக ரகசிய தகவல் கொடுப்பவர்களுக்கு ₹10,000 சன்மானம் வழங்கப்படும் - காவல்துறைக் கண்காணிப்பாளர் வருண் குமார் அறிவிப்பு
மேலும் தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் கூறியுள்ளார்
* தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* மக்கள் சிரிக்க தடை - அதிபர் உத்தரவு
முன்னாள் வடகொரிய தலைவர் கிம் ஜாங்- இல்லின் 10 வது ஆண்டு நினைவு தினம்
11 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால் மக்கள் சிரிக்கவும், மது அருந்தவும், ஷாப்பிங் செய்யவும் தடை
* ஃபாஸ்ட் புட் காலம் என்பதால் உதயநிதி உடனே அமைச்சராக வேண்டும் என திமுகவினர் நினைக்கிறார்கள் - அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
* நெல்லை - பள்ளி சுவர் இடிந்து விழுந்த உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் - முதல்வர்
பள்ளி விபத்து - தலைமை ஆசிரியர் மீது வழக்கு:
நெல்லை சாஃப்டர் பள்ளி கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு.
தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை.
* முன்னாள் அமைச்சரை கைது செய்ய இரண்டு தனிப்படை:
வேலை வாங்கித்தருவதாக கூறி ₹3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு.
முன் ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து அவரை கைது செய்ய திருச்சி விரைந்தது 2 தனிப்படை.
* இந்தியாவில் சதம் அடித்து ஒமிக்ரான்:
இந்தியாவில் இதுவரை 101 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மொத்தம் 11 மாநிலங்களில் 'ஒமிக்ரான்' வகை கொரோனா பாதிப்பு பரவியுள்ளது - மத்திய சுகாதாரத்துறை.
* நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமையாசிரியை ஞான செல்வி மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது - அமைச்சர் ராஜகண்ணப்பன்.
* நாகர்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோசஸ் (96) காலமானார்.
1971, 1989, 1991, 1996 என 4 முறை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் மோசஸ்.
* ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.
பொங்கல் பண்டிகையொட்டி 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment