மாணிக்க வாசகர் அருளிய  எட்டாம் திருமுறை திருவாசகம் - திருவெம்பாவை - Agnipuratchi

மாணிக்க வாசகர் அருளிய  எட்டாம் திருமுறை திருவாசகம் - திருவெம்பாவை

Share This

மாணிக்க வாசகர் அருளிய  எட்டாம் திருமுறை திருவாசகம் - திருவெம்பாவை

சுவாமி திருவடிபோற்றி – தேவி திருவடிபோற்றி
 
இது திருவண்ணாமலையில் அருளிச்செய்தது
 
எம்பாவாய் என்று ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் முடிகின்றமை யால், இப்பகுதி திருவெம்பாவை என்னும் பெயருடையதாயிற்று. திரு என்பது அடைமொழி, மார்கழி மாதத்தில் சில பெண்கள் தம்முள் கூடிப் பிற பெண்களின் இல்லந்தோறும் சென்று, அவர்களையும் எழுப்பிக்கொண்டு குளத்துக்கு நீராடச் செல்லும் வழக்கத்தை ஒட்டி அமைந்துள்ளது இப்பகுதி. பக்குவம் முதிர்ந்த ஆன்மா, மல இருளில் அழுந்திக் கிடக்கும் பக்குவம் பெறாத ஆன்மாவை எழுப்பி, இறைவனது அருள் நீரில் திளைப்பதற்கு அழைத்துச் செல்வதாகத் தத்துவப் பொருள் கொள்வர். ‘மலவிருளுற் றுறங்காமல் மன்னுபரி பாகரருள் செலமுழுக வருகவெனச் செப்பல்திரு வெம்பாவை’ என்ற திருப்பெருந்துறைப் புராணத்தைக் காண்க. இனி, உலக சிருட்டியில் மனோன்மணி, சர்வபூததமனி, பலப்பிரமதனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரௌத்திரி, சேட்டை, வாமை என்னும் ஒன்பது சத்திகள் தம்முள் முன்னின்ற சத்தி பின்னின்ற சத்தியைத் துயிலெழுப்புவதாகவும், எல்லோரும் கூடி இறைவனைப் பாடுவதாகவும் அமைந்துள்ளது இப்பகுதி என்றும் கூறப்பெறும்.
 
சத்தியை வியந்தது
 
அஃதாவது, திருவருளைப் புகழ்தலாம். சத்தியாவது அருள். ‘அருளது சத்தியாகும்’ என்பது சிவஞானசித்தி. திருவருள் பெற்ற பின்னரே இறைவனை அடைய வேண்டுமாகையால், திருவருள் வணக்கம் அவசியமாகிறது. அம்மையப்பனாக இறைவனை வழிபடுவது இம்முறை பற்றியேயாம்.
 
வெண்டளையால் வந்த தரவு கொச்சகக் கலிப்பா
 
திருச்சிற்றம்பலம்

பாடல் 1:

ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடம் கண்
மாதே! வளருதியோ? வன் செவியோ நின் செவி தான்?
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே, விம்மி விம்மி, மெய்ம்மறந்து,
போது ஆர் அமளியின்மேல் நின்றும் புரண்டு, இங்ஙன்
ஏதேனும் ஆகாள், கிடந்தாள்; என்னே! என்னே!
ஈதே எம் தோழி பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள் :

ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத அரும் பெருஞ்சோதியை யுடைய இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும், உறங்குகின்ற னையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை என்ன வியப்பு!.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages