அக்னிப்புரட்சி இன்றைய (19.12.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை
வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்
ஆருத்ரா தரிசன விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாளை சிறப்புமிக்க ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
மார்கழி மாதம் நான்காம் நாள் 19.12.2021
பரமபத நாதர் சந்நிதியில்
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் , உற்சவர் கோபிகைகள் மழை வேண்டுதல் திருக்கோலம்
* மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு பிறந்தநாளின் தொடக்க நாள் விழா.
சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்திற்கு 'பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை' என பெயர் சூட்டல்.
ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள க.அன்பழகனின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
* மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது; ஜனவரி 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
எம்பிபிஎஸ் படிப்பில் சேர 6,957 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் சேர 1,925 இடங்களும் உள்ளன.
ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தகவல்.
* விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் 5 வயது குழந்தையின் சடலம்.
5 வயது சிறுவன் பட்டினியால் இறந்ததில் சோகம்.
சிறுவனின் சடலத்திற்கு யாரும் உரிமை கொண்டாடி வரவில்லை.
உணவு, தண்ணீர் இல்லாமல் இறந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
* ரூ.35க்கு விற்க வேண்டிய பெட்ரோலை ரூ.100க்கு விற்கிறார்கள். இதற்கு காரணம் மத்திய அரசு, ஆனால், அதிமுக அவர்களை எதிர்த்துப் போராடாமல்,சிறப்பாக செயல்பட்டு வரும் திமுகவை எதிர்த்து போராடுகிறது- காங். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி.
* மேலும்,12 மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.
இலங்கை கடற்படை, மண்டபம் பகுதியில் இருந்து 2 படகுகள் மூலம் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை கைது செய்துள்ளது.
ஏற்கனவே 43 மீனவர்களை சிறைப்பிடித்ததுடன், 6 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
* அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இராப்பத்து உற்சவத்தின் 6ம் நாள்: ஸ்ரீ நம்பெருமாள், "அகலகில்லேன் இறையும்" என்ற பாசுரத்திற்காக சௌரி-ராஜ முடியில் புஜகீர்த்தியும், நகரியும், நடுவில் பெரிய பிராட்டியார் பதக்கமும், திருமார்பில் விமான பதக்கமும், ரத்தின அபய ஹஸ்தமும், நெல்லிக்காய் மாலை, காசு மாலை, 8 வட முத்து சரம், தங்க பூண் பவழ மாலை, அடுக்கு பதக்கங்கள், பின் சேவையாக அண்டபேரண்ட பக்ஷி பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
* செய்துவிட்டு செத்துமடி என்று சொல்வேன் - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, Do or Die. என்னைப் பொறுத்தவரை அதை Do and Die என்று எடுத்துக்கொள்வேன். செய்துவிட்டு செத்துமடி என்று சொல்வேன்.
நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்; நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன்; அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் திமுக ஆட்சியில் கைவிடப்படும்.
அரசு ஊழியர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான்.
அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு கருணை நிதி வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
ஜி.எஸ்.டி. முதல் வெள்ள நிவாரண நிதிவரை ஒன்றிய அரசு சரியாக வழங்குவதில்லை.
கொத்தடிமைகளை போல் ஒன்றிய அரசிடம் கையேந்தும் நிலையில் மாநில அரசு உள்ளது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* கேரளா : சபரிமலையில் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய நாளை முதல் அனுமதி.
தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி.
எருமேலியிலிருந்து பாரம்பரிய பாதையான பெருவழிபாதையும் நாளை முதல் திறப்பு - கேரள அரசு.
No comments:
Post a Comment