மார்கழி மாதம் 4ம் நாள். - Agnipuratchi

மார்கழி மாதம் 4ம் நாள்.

Share This

மார்கழி மாதம் 4ம் நாள்.

விளக்கம்:

இந்த உலகில் வாழும் பேறு பெற்றவர்களே, பரந்தாமனின் திருவடியை அடைய நாங்கள் நோற்கும் பாவை நோன்பிற்கான முறைகளைக் கேளுங்கள்.

திருபாற்கடலுள் பாம்பின் மீது யோக நித்திரை கொள்ளும் திருமாலின் திருவடிகளைப் புகழ்ந்து பாடுவோம்.

நெய், பால் என நாவிற்கு ருசியை வழங்கும் பொருட்களை உண்ண மாட்டோம். விடியற்காலையில் நீராடுவோம்.

கண்ணுக்கு மையிடுதல், கூந்தலை மலரால் அலங்கரித்தல் ஆகிய உடலுக்கு அழகு தரும் செயல்களைச் செய்ய மாட்டோம்.

ஒருவர் இல்லாத இடத்து அவரைப் பற்றி  கோள் சொல்ல மாட்டோம் .
தீய செயல்களை மனத்தாலும் எண்ண மாட்டோம். முடிந்தளவுக்கு தானமும், தருமமும் செய்வோம்.

உலகில் மேம்பாடு அடையும் வழியை நினைத்து மகிழ்வுடன் இந்நோன்பினை நோற்போம்.

கட்டுப்பாடுடன்  கூடிய எச்செயலும் வெற்றியை தரும் என்பதை  இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages