அக்னிப்புரட்சி இன்றைய (23.12.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை..
தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை
* திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில் சிறுமி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.
கடந்த வாரம் 5ஆம் வகுப்பு மாணவி பள்ளி அருகே எரித்துக்கொல்லப்பட்டிருந்தார்.
* தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி - சுகாதாரத்துறை.
தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்வு.
மேலும் 49 பேரிடம் S வகை மரபணு கண்டரியப்பட்டுள்ள நிலையில் அவர்களின் சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பு. - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி:
தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று - 34ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
34 பேருக்கும் ஒமிக்ரான் தொற்றில் முதல் நிலை பாதிப்பு மட்டும் தான் உள்ளது.
தலை சுற்றல் போன்ற சிறு சிறு பாதிப்புகள் மட்டுமே உள்ளது.
ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்கள்:
சென்னை - 26
திருவண்ணாமலை - 2
சேலம் - 1
* ‘மீண்டும் மஞ்சப்பை' இயக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கம்
பிளாஸ்டிக் பைகளை புறக்கணித்து துணிப்பைகளின் பயன்பாட்டை ஊக்கப்படுத்த விழிப்புணர்வு இயக்கம்.
பிளாஸ்டிக் மாசுபாட்டை தடுக்க சுற்றுச்சூழல் துறை சார்பில் ஏற்பாடு.
ப்ளாஸ்டிக் நாகரீகம், மஞ்சப்பை கேவலம் எனும் சூழல் உள்ளது.
மஞ்சப்பை வைத்திருந்தால் பட்டிக்காட்டான் கிராமத்துக்காரர் என சினிமாக்களில் அடையாளம் படுத்தும் நிலை உள்ளது.
ஆனால், மஞ்சப்பை தான் சுற்றுச்சூழலுக்கு நல்லது
பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
* கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டம் ரத்து:
அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட அரசியல் விமர்சகர் கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டம் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* நளினிக்கு ஒரு மாதம் பரோல்:
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு 1 மாதம் பரோல்- தமிழக அரசு.
மகளுக்கு பரோல் கேட்டு முதல்வரின் தனிப்பிரிவில் நளினியின் தாயார் கோரிக்கை வைத்திருந்தார்.
* ஈரோட்டில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 51 லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூன்றாவது தளத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் திட்டப்பணிகள் குறித்து விண்ணப்பிக்கும் பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 51 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு.
ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு காவல் துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
* நாளை முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை.
25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை - பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்: வைகுந்த ஏகாதசி இராப்பத்து 10- ம் நாள் (23.12.2021) ஸ்ரீ நம்பெருமாள் தீர்தவாரி கண்டருளுதல்.
திருக்குறளை மையமாக கொண்டு மாநில அளவிலான ஓவியப் போட்டி
* வேலூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் மேற்கு-வடமேற்கு பகுதிகளில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு
தேசிய நில நடுக்கம் குறித்த அறிவியல் ஆய்வு மையம் தகவல்
* ஒமைக்ரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த 3 பேர் நலமடைந்தனர்
எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் நடத்துவதா?
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை தேவை.
ஆளுங்கட்சியினரை தடுக்காமல் காவல்துறையினர் வேடிக்கை பார்த்தது ஜனநாயக படுகொலை.
எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் நடத்துவதை ஆளுங்கட்சியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஈபிஎஸ் .
* ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிட வேண்டும் - டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
ஆயுர்வேத சிகிச்சை மைய செயல்பாடுகளில் போலீஸ் தலையிடக்கூடாது என உத்தரவிட கோரிய வழக்கு.
காவல்துறையின் நடவடிக்கைகளை தடுப்பது குற்றங்களை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும் என நீதிமன்றம் திட்டவட்டம்.
* ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு - நாள்தோறும் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவு.
பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகளில் வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொரோனா பரிசோதனை.
தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை.
ராயபுரம், திருவொற்றியூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை.
* ம.பி.,யில் இரவு நேர ஊரடங்கு- முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான்.
ஒமிக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு என அறிவிப்பு.
* கொரோனா பரவல் அதிகரிக்க, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர்தான் காரணம் என சித்தரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதாக மாரிதாஸ் மீது வழக்கு - வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
மாரிதாஸ் இஸ்லாமிய நம்பிக்கையை கேள்விக்குள்ளாகும் வகையிலோ அல்லது அதனை இழிவுபடுத்தும் விதமாகவோ எத்தகைய கருத்தையும் தெரிவிக்கவில்லை என வழக்கு ரத்து.
* ஆயுள் தண்டனை கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் தண்டனையை குறைத்து முன் விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.
இக்குழுவில், மனநல மருத்துவ இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர் உட்பட 5 உறுப்பினர்களும், சிறை, சீர்திருத்தத் துறையில் துணைத் தலைவர் பதவி நிலையில் உள்ள அலுவலர் ஒருவர் உறுப்பினர் செயலராகவும் அங்கம் வகிப்பர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
No comments:
Post a Comment