அக்னிப்புரட்சி இன்றைய (30.12.2021) முக்கிய செய்திகள்.
* கோவில்களில் பக்தர்கள் வழிபட தடை இல்லை:
புத்தாண்டு அன்று கோயில்களில் வழிபடுவதற்கு தடை இல்லை - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.
அரசு கொடுத்துள்ள நோய்த்தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தல்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* நகைக்கடன் தள்ளுபடி - மீண்டும் ஒரு வாய்ப்பு:
நகைக்கடனில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி.
அவை சரிபார்க்கப்பட்டு, ஆய்வு அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் - கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம்.
* காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை:
ஜம்மு - காஷ்மீர் : அனந்தநாக் மற்றும் குல்காம் பகுதியில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட 6 பயங்கரவாதிகளில் 2 பேர் பாகிஸ்தான், 2 பேர் உள்ளூரை சேர்ந்தவர்கள், 2 பேரின் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது: ஜம்மு - காஷ்மீர் காவல்துறை.
* அமெரிக்காவில் கொரோனா புதிய உச்சம் 4,64,135 பேர் பாதிப்பு -1,666 பேர் மரணம்.
அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவல் வேகமும் தீவிரமடைந்துள்ளது. ஒரே நாளில் 4,64,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓமிக்ரான் அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட முக்கால்வாசி கொரோனா பாதிப்புகள் ஓமிக்ரானால் ஏற்படுகிறது.
மீண்டும் மின்னல் வேகமெடுத்த கொரோனா தொற்று:
பிரான்ஸில் 2 நாளில் கொரோனா தொற்று பாதிப்பு 10 மடங்கு அதிகரிப்பு.
ஒரே நாளில் 2.8 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், நொடிக்கு 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தகவல்.
பிரிட்டனில் ஒரே நாளில் 183037 பேர் கொரோனாவால் பாதிப்பு.
உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவால் 15,86,732 பேர் பாதிப்பு.
கொரோனாவால் ஒரே நாளில் 6,910 பேர் உயிரிழப்பு.
* ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர்களாக பதவி உயர்வு:
முதன்மைச் செயலாளர்கள் 7 பேர் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தமிழக அரசில் 1991ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகளாக பணியில் சேர்ந்து, தற்போது முதன்மைச் செயலாளர்களாக 7 பேர் பணியாற்றி வருகின்றனர்.
அதில், அயல் பணியாக மத்திய அரசு பணிக்குச் சென்று தற்போது தூத்துக்குடி துறைமுக தலைவராக உள்ள ராமச்சந்திரன், பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக உள்ள கோபாலகிருஷ்ணன், எரிசக்தி துறை செயலாளராக உள்ள ரமேஷ்சந்த் மீனா, நிதித்துறை செயலாளராக உள்ள முருகானந்தம், புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநராக உள்ள சந்திரகாந்த் காம்ளே, சுற்றுச்சூழல் துறை செயலாளராக உள்ள சுப்ரியா சாகு, சமூக நலத்துறை செயலாளராக உள்ள சம்புகல்லோலிகர் ஆகிய 7 பேரையும் அதே பணியில் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு பணி உயர்வு வழங்கி தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்துள்ளது.
இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
* இந்தியாவில் ஒரே நாளில் 13,154 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு.
நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஒரே நாளில் 268 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்.
நாடு முழுவதும் 961 பேர் ஓமிக்ரான் தொற்றினால் பாதிப்பு.
நேற்று 781 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 961 ஆக அதிகரிப்பு.
* மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு.
சுவாமி தரிசனம் செய்ய நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி .
கேரளாவில் இரவு நேர ஊரடங்கு சபரிமலை பக்கதர்களுக்கு பொருந்தாது என கேரள அரசு அறிவிப்பு.
நாளை முதல் பெருவழிப்பாதை வழியாக செல்லவும் பக்தர்களுக்கு அனுமதி.
* தஞ்சையில் ரூ 894 கோடி மதிப்பிலான 133 புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தஞ்சையில் ரூ 98.77 கோடி மதிப்பிலான 90 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தஞ்சையை பெருமைபடுத்திய அரசு திமுக அரசு தான் - முதலமைச்சர் ஸ்டாலின்.
காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வைத்தவரும் கலைஞர் தான், தமிழ்நாட்டுக்கு எவ்வளவு காவிரி நீர் வழங்க வேண்டும் என்பதை நிர்ணயித்து அறிவிக்கச் செய்தவரும் கலைஞர் தான்.
* புதுக்கோட்டை அருகே காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி - சிறுவன் மீது குண்டு பாய்ந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாசத்திரம் பகுதியில் காவல்துறையினரின் பயிற்சியின் போது சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம்.
மத்திய தொழில் பாதுகாப்பு துறையினர் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் காலை ஈடுபட்டிருந்த போது துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்து ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள நார்த்தாமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த குண்டு பாய்ந்துள்ளது.
அந்த வீட்டில் புகழேந்தி என்ற 11 வயது சிறுவன் உணவருந்திக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது தலையில் குண்டு பாய்ந்துள்ளது.
இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ள நிலையில் உடனடியாக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு தற்போது தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் தற்போது சிகிச்சை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 10 வருடத்திற்கு முன்பாக இதேபோன்று ஒரு சம்பவம் அம்மாசத்திரம் பகுதியில் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபடும் போது நடந்துள்ளது.
தற்போது ஒரு சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
* தமிழகத்தில் நாளை இடியுடன் கூடிய கனமழைக்கு -சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் புவியரசன்.
இன்று (டிச.,30) கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (டிச.,31): கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜன.,01: கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
* சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அறிவுறுத்தல்:
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அரசு கடிதம்.
* சென்னையில் கனமழை
சென்னை: சென்ட்ரல், பூந்தமல்லி, புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு, வேளச்சேரி, நங்கநல்லூர், பெருங்குடி உள்ளிட்ட பலபகுதிகளில் கன மழை பெய்து வருகிறது
2021ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு.
“சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை” என்கிற சிறுகதை தொகுப்புக்காக எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
💥 சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வலியுறுத்தல்
2021ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு
சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை சிறுகதைக்காக தமிழில் எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
* கட்டப் பஞ்சாயத்துகளை தடுக்க சிறப்புப் படை.
சென்னை, புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்துகளை தடுக்க என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் சிறப்புப் படை அமைத்தது காவல்துறை.
தொழிற்சாலை பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை கண்காணிக்க சிறப்புப் படை.
* இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
305 ரன் இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்திருந்தது.
இன்று கடைசி நாள் ஆட்டத்தில் பும்ராவின் நேர்த்தியான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் எல்கர் (77) ரன்னில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார்.
அடுத்த வந்த டி காக்(21) சிராஜ் பந்து வீச்சிலும் முல்டர் (1) சமி பந்து வீச்சிலும் வெளியேறினார்.
உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிகா அணி 182 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து ஆடி வந்தது.
உணவு இடைவேளை முடிந்த சிறிது நேரத்தில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஒரே ஓவரில் அஸ்வின் கடைசி 2 (ரபாடா, நிகிடி) விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7-ந் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.
* சென்னை,புறநகர் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்க வாய்ப்பு - வானிலை மையம்
சென்னை: 6 மணி நேரத்தில் கொட்டிய கனமழையால், அலுவலகம் முடிந்து வீடு திரும்ப முடியாமல் மக்கள் அவதி....
பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல்...
* ஓலா கேப் அட்ராசிட்டி
சென்னையில் தொடர் மழையால் பல்வேறு பகுதிகள் மிதக்கும் நிலையில் அலுவலகம் முடித்து வீடு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
ஓலா கேப் புக் செய்தால், 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடத்துகிறது. மக்களின் சிரமத்தை பயன்படுத்தி கொள்ளையடிப்பது நியாயமா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
* சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு
சென்னை, புளியந்தோப்பில் மின்சாரம் தாக்கி இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை
* சென்னையில் கனமழை எதிரொலி - மெட்ரோவில் பயணிக்க கூட்டம் அலைமோதல்
* U-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி
அரையிறுதியில் வங்கதேச அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்
* தமிழகத்தில் மேலும் 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
சென்னையில் நேற்று 294 பேருக்கு தொற்று பதிவான நிலையில், இன்று ஒரே நாளில் 397 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.
செங்கல்பட்டில் 103 பேருக்கு கொரோனா தொற்று.
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,46,890 ஆக உயர்வு.
தமிழகத்தில் கொரோனாவுக்கு 6,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* வெளுத்து வாங்கிய கனமழை; கடும் போக்குவரத்து நெரிசலில் சென்னை அண்ணா சாலை…..
சென்னை மீண்டும் தத்தளிக்கிறது.
சென்னையில் அதிகபட்சமாக எம்.ஆர்.சி நகரில் 20 செ.மீ மழைப்பதிவு.
நுங்கம்பாக்கத்தில் 18 செ.மீ., மீனம்பாக்கத்தில் 13 செ.மீ. மழைப்பதிவு.
No comments:
Post a Comment