அக்னிப்புரட்சி இன்றைய (03.01.2022) முக்கிய செய்திகள்.
* 60 நாட்களாக மாற்றம் இல்லாத பெட்ரோல் - டீசல் விலை:
சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* திண்டுக்கல் அருகே இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை:
திண்டுக்கல் மாவட்டம் செட்டிகுளத்தில் காண்டிராக்டர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த ராக்கேஷ் குமார் என்பவர் அதே பகுதியில் இருக்கக்கூடிய செட்டிகுளம் மீன் பிடிக்கும் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
குளம் ஏலம் எடுப்பது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் இவருக்கு முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்றிரவு ராக்கேஷ் குமார் தனது நண்பர்களுடன் செட்டிகுளத்தில் இருந்த போது அங்கு வந்த மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் வயிற்றில் சுட்டும் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
* உலக நாடுகளில் தொடரும் கொரோனா கோரத்தாண்டவம்:
அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சில் கொரோனா கோரத்தாண்டவம்.
அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,85,122.
இங்கிலாந்தில் 24 மணிநேரத்தில் 137,583 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
இத்தாலியில் 61,046; பிரான்சில் 58,432 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு.
ரஷ்யாவில் ஒரே நாளில் கொரோனாவால் 811 பேர் உயிரிழப்பு.
வியட்நாமில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 221 பேர் மரணம்.
* தயக்கம் வேண்டாம்……
நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு இன்று தடுப்பூசி போடும் பணி இன்று துவங்குகின்றது.
தமிழகத்தில் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடையவர்கள், 33.20 லட்சம் பேர் உள்ளனர்.
அவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
சென்னை சைதாப்பேட்டை, மாந்தோப்பு சென்னை பெண்கள் மேல்நிலை பள்ளியில், இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
அப்போது, மாந்தோப்பு ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 1,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் இத்திட்டம் செல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடைய 33.20 லட்சம் பேரில் 26 லட்சம் பேர் பள்ளிகளில் படிக்கின்றனர்.
இதற்காக, அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத் துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து, சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த உள்ளன.
* உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களில் நேரடி விசாரணை இல்லை:
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் நேரடி வழக்கு விசாரணை நிறுத்தம்.
உச்சநீதிமன்றத்திலும் 2 வாரங்களுக்கு காணொலி மூலமே வழக்கு விசாரணை.
ஒமிக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து அனைத்து நீதிமன்றங்களிலும் இனி காணொலி மூலம் மட்டுமே விசாரணை.
* தமிழகத்தில் M.E, M.Tech, M.Arch, M.Plan படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
மாநிலம் முழுவதும் 10,610 முதுநிலை பொறியியல் & தொழில்நுட்ப இடங்களை நிரப்ப கலந்தாய்வு.
ஆன்லைனில் வரும் பிப்ரவரி 1 ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
10,610 இடங்களுக்கு 3,085 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளதால் அனைவருக்கும் இடங்கள் உறுதி.
* சென்னையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு முற்றுகை.
டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் முறைகேடு என கூறி பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
* வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன்.
வேலுநாச்சியாரின் வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்.
மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய வேலுநாச்சியாரை வணங்கி மகிழ்கிறேன் - பிரதமர் மோடி தமிழில் ட்வீட்.
* இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,700 ஆக அதிகரிப்பு.
நேற்று 1,525 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 1,700 ஆக அதிகரிப்பு.
* கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும்-மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றாதவர்கள் மீது கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும்-ராதாகிருஷ்ணன்.
அனைத்து மாவட்டங்களிலும் வார் ரூம் முழுமையாக செயல்பட வேண்டும்; தேவையான பரிசோதனை மையங்களை திறக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன்.
* சென்னை:கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு.
நாளை மறுநாள் நடைபெறும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்திற்கு ஆளுநருக்கு நேரில் அழைப்பு.
திருவான்மியூர் புறநகர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் இருந்து ரூ 1 லட்சம் பணம் கொள்ளை.
அதிகாரியை துப்பாக்கி முனையில் மிரட்டி, கட்டிப்போட்டு பணம் கொள்ளை - ரயில்வே போலீசார் விசாரணை.
* குற்றம் நடப்பதை வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது-நீதிபதி அதிருப்தி.
தேசிய, மாநில சின்னங்கள் தவறாக பயன்படுத்தபட்டதாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்பட்டதாக அறிக்கையில் இல்லை.
குற்றம் நடப்பதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது-உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்.
அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென தமிழக அரசு, காவல்துறைக்கு அறிவுறுத்திய வழக்கில் கருத்து.
அரசு, நீதித்துறை, காவல்துறை, வங்கி ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் தங்கள் வாகனங்களில் அரசு சின்னங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* 2வது டெஸ்ட்; கோஹ்லி விலகல்.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
இதில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கடைசி நேரத்தில் முதுகுவலி காரணமாக விலகியுள்ளார்.
இதனையடுத்து கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட உள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* திண்டுக்கல்லில் ராகேஷ் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது - துப்பாக்கி பறிமுதல்.
மீன் குத்தகை ஏலம் விடுவதில் ஏற்பட்ட பிரச்சினையால் சுட்டுக்கொலை செய்ததாக தகவல்.
* சென்னையில் வெள்ள தடுப்பு மேலாண்மை திட்டத்திற்கான இடைக்கால அறிக்கை தாக்கல்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு அறிக்கையை சமர்ப்பித்தனர்.
சென்னையில் மழை நீர் வடிகால்களை அகலபடுத்துவதுடன் ஆழப்படுத்த வேண்டும்.
புறநகர் பகுதிகளில் வடிகால் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
உயரத்தில் இருக்கும் மழைநீர் வடிகால் கால்வாய்களை சமப்படுத்த வேண்டும் - என அறிக்கை.
* கோவாவில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு
கோவாவில் ஜனவரி 26 ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளை மூட அம்மாநில உத்தரவு.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளும் மூடல்.
* முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்குகளில் ஆஜரானார் என்பதற்காக வழக்கறிஞர் மாரீஸ்குமாரின் வீட்டில் சோதனை செய்தது ஏற்கத்தக்கதல்ல-?உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.
* புதுக்கோட்டையில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு:
புதுக்கோட்டை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து தவறி வந்த குண்டு, சிறுவன் மீது பாய்ந்த விவகாரம்: படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி உயிரிழப்பு. தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலி.
* 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாகவே பொது தேர்வு நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.
மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால், 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாகவே பொது தேர்வு நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
* தமிழகத்தில் மேலும் 1,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
நேற்றைய பாதிப்பு 1,594ஆக இருந்த நிலையில் 1,728ஆக அதிகரிப்பு.
சென்னையில் மேலும் 876 பேருக்கு கொரோனா தொற்று - 2 பேர் உயிரிழப்பு.
* தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் : இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்.
இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் - 50, அஸ்வின் - 46 ரன்கள் சேர்ப்பு.
தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் ஜென்சன் 4, ரபாடா மற்றும் ஆலிவர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
* நாடு முழுவதும் இரவு 8 மணி நிலவரப்படி 40 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது-மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தகவல்.
* புதுக்கோட்டை,அம்மாசத்திரத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த விவகாரம்.
சிறுவனின் உறவினர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம்.
சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.1கோடி இழப்பீடு வழங்க கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரியும் சாலை மறியல்.
* துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ₹10 லட்சம் இழப்பீடு - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
* மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு நடைமுறை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நில நாட்களாக நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பயோமெட்ரிக் நடைமுறை உடனடியாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
* மத்திய அரசு ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
* ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
* தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு:
புதுச்சேரியில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப உத்தரவு அரசு.
அலுவலக வளாகத்தில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் - புதுச்சேரி சுகாதாரத்துறை.
* புதுச்சேரி: திரையரங்குகள், பேருந்துகளில் 50% மட்டுமே அனுமதி.
புதுச்சேரியில் திரையரங்குகள், கடைவீதிகள், பேருந்துகள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50% மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
* அடிபம்பை அகற்றாமல் தார் சாலை அமைப்பு:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அடிபம்ப்பை அகற்றாமலேயே நகராட்சி நிர்வாகம் சாலை அமைத்துள்ளது.
இதனால், அடி பம்ப் தார் சாலையில் பாதி புதைந்த நிலையில் காட்சியளிக்கிறது.
அந்தப் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் அடிபம்ப்பை சரிசெய்யாமல் அப்படியே தார் சாலை அமைத்தது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment