திருப்பாவை மார்கழி 19ம் நாள் பாடல் விளக்கம். - Agnipuratchi

திருப்பாவை மார்கழி 19ம் நாள் பாடல் விளக்கம்.

Share This

திருப்பாவை மார்கழி 19ம் நாள்
பாடல் விளக்கம்.

குத்துவிளக்குகள் எரியும் பள்ளியறையில்
யானைத்தந்த கால்களை உடைய கட்டிலில் மென்மையான பஞ்சு, பட்டு, கம்பளி, மலர், தளிர் ஆகிய ஐவகைப்பொருட்களால் ஆகிய மென்மையான படுக்கையில்,  மணம் வீசும் மலர்களை கூந்தலில் அணிந்துள்ள திருமகளின் மார்பில் படுத்து உறங்கும் மலர் போன்ற மார்பினை உடையவனே.,
நீ வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.

அழகான நீண்ட கண்களில் மைத்தீட்டிய நப்பினையாகிய திருமகளே, உன்னுடைய கணவனான கண்ணனை, நீ தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை; ஏன்?

ஒரு நொடிப்பொழுது கூட நீ கண்ணனை  பிரிந்திருக்க விரும்பவில்லையோ? இவ்வாறு செய்வது உன் தகுதிக்கு அழகா?

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages