அக்னிப்புரட்சி இன்றைய (04.01.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (04.01.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (04.01.2022) முக்கிய செய்திகள்.

* ஒரே நாளில் 2 லட்சம் அபராதம் வசூல்!

சென்னையில் இன்று மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்த 1022 நபர்களிடமிருந்து அபராதமாக 2,18,300 ரூபாய்  வசூலிக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தப்படுவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் - ஒன்றிய தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்

* பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ குடல் அடைப்பு நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

* உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் 11.83 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு - 4,017 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா - 2.97 லட்சம், பிரிட்டன் - 1.57 லட்சம், ஸ்பெயின் - 93 ஆயிரம், இத்தாலி - 68 ஆயிரம், பிரான்ஸ் - 67 ஆயிரம் பேர் பாதிப்பு

* ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

* பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க மணிப்பூர், திரிபுரா மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

மணிப்பூரில் ₨4 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்

திரிபுராவில் மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலைய ஒருங்கிணைந்த முனைய வளாகம், முதலமைச்சர் திரிபுரா கிராம சம்ரிதி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

* மகாராஷ்டிரா; பிவாண்டி பகுதியில் தனியார் பள்ளியில் 28 மாணவர்கள் உட்பட 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

* தெலங்கானாவில் வரும் 8 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவு

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சந்திரசேகர் ராவ் நடவடிக்கை

* ஜார்க்கண்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மறு உத்தரவு வரும் வரை கல்வி நிறுவனங்கள் மூடப்படும் - சுகாதார அமைச்சர் பன்னா குப்தா

திருமணங்கள், இறுதிச் சடங்குகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி; சந்தைகள் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி

* பீகார், நளந்தா மருத்துவக் கல்லூரியில் 72 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

* சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் புகுந்து ஊழியர் டீக்கா ராம் என்பவரை கட்டிப்போட்டு நேற்று ₹1.32 லட்சம் கொள்ளைபோன சம்பவத்தில் திடீர் திருப்பம்

கட்டிப்போடப்பட்டிருந்த ஊழியர் டீக்கா ராமும், அவரது மனைவியும் இணைந்தே நாடகமாடி கொள்ளையடித்தது அம்பலம்; இருவரையும் கைது செய்து போலீஸ் விசாரணை

* உலக நாடுகளில் கொரோனா பரவல் சுனாமி பேரலையாக விஸ்வரூபம் எடுத்து தாக்கி வருகிறது.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,97,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 11,84,780 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா மரணங்கள் 4,019 ஆக பதிவாகி உள்ளது.

உலகம் முழுவதும் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 5,29,348 ஆகும்.

இங்கிலாந்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,57,758 என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் 93,190; இத்தாலியில் 68,052; பிரான்ஸில் 67,461 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* நாளை சட்டமன்றம் கூட உள்ள நிலையில் எம்எல்ஏ வுக்கு கொரோனா:

பெரம்பலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், அவரது உதவியாளர் மணிகண்டன் மற்றும் கார் ஓட்டுனர் ஆகிய மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி; மூவரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதி.

* சார்பு செயலர் நிலைக்கு கீழுள்ள அனைத்து அரசுப் பணியாளர்கள் சுழற்சி முறையில் 50 விழுக்காட்டினர் வீட்டிலிருந்தே பணிபுரிய மத்திய அரசு அறிவுறுத்தல்

மாற்றுத்திறனாளிகள், கருவுற்ற பெண் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

* டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா!
வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்

* 2000 மினி கிளினிக்குகளை மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு.

கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொண்டு தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.36,136க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.4,517க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசு குறைந்து ரூ.65.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* ஜெட் வேகத்தில் கொரோனா...
இந்தியாவில் நேற்று மட்டும் 37,379 பேருக்கு தொற்று.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,379 பேர் பாதித்துள்ளனர்.

இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,49,60,261 ஆக உயர்ந்தது.

இன்று புதிதாக 124 பேர் இறந்துள்ளனர்.

இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,82,017ஆக உயர்ந்தது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,007 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,43,06,414 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  1,71,830 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* அம்மா பெயர் உள்ளது என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியால், மினி கிளினிக் திட்டம் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது.

ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை திமுக அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது-எடப்பாடி பழனிசாமி.

* பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக மாநில அரசு அறிவிப்பு

* சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படுகிறது.

குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.

2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ 1,088 கோடி செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு.

* தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

* ரேசனில் பொங்கலுக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு

பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும்; ஒரு கரும்பின் அதிகபட்ச விலை ரூ 33 ஆக இருக்க வேண்டும் - தமிழக அரசு.

6 அடிக்கு குறையாமல் கொள்முதல் செய்யப்படும் கரும்பின் உயரம் இருக்க வேண்டும்; நோய் தாக்கிய கரும்பு கொள்முதல் செய்யப்படக் கூடாது.

மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாகவோ அல்லது வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாகவோ கொள்முதல் செய்ய வேண்டும்.

* டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் - துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

டெல்லியில் கொரோனா பாதிப்பு 6.46% உள்ளது - துணை முதல்வர்

தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதி

கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது; மக்கள் கொரோனா விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் - துணை முதல்வர்

* முதல்வர் ஆலோசனை கூட்டத்தில், சுகாதாரத்துறை பரிந்துரைத்தது என்ன?

பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கும், கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புக்கும் பரிந்துரை

பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சுகாதாரத்துறை பரிந்துரை

வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் மூட சுகாதாரத்துறை பரிந்துரை

கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு .

51 தெருக்களில் 5க்கும் மேற்பட்டோருக்கு தொற்று.

256 தெருக்களில் 3 முதல் 4 பேருக்கு கொரோனா தொற்று

* திருவொற்ரியூர் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக 6 வாரங்களில் அறிக்கை அளிக்க குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குனர், வீட்டு வசதித்துறை செயலாளருக்கு உத்தரவு.
- தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்.

* சென்னை அண்ணாசாலை:
சாலையில் இறங்கி முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் அணிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

* கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு வந்து சென்ற 35 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

* கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் கோவில்  கடை வைத்திருப்பவர்கள், அனைவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள  மாவட்ட நிர்வாகம் உத்தரவு

* விமான குப்பைத்தொட்டியில் குழந்தை

மொரிஷியஸ் ஏர்பஸ் விமானத்தின் குப்பைத் தொட்டியில் டாய்லெட் பேப்பரால் மூடப்பட்டு கிடந்த பிறந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

குழந்தையை பெற்றெடுத்த மடகாஸ்கரைச் சேர்ந்த 20 வயது பெண் கைது

* தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணத்தை நாளை முதல் 20ம் தேதிக்குள் மாணவர்கள் செலுத்த உத்தரவு.

செய்முறை தாள் கொண்ட பாடங்களுக்கு ரூ 225 கட்டணம்.

செய்முறை தேர்வு அல்லாத பாடங்களுக்கு ரூ 175 கட்டணம் - அரசு தேர்வுகள் இயக்குனர்.

* அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி.

ஏற்கனவே பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி.

நாளை தமிழக பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று.

* தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தேர்வு கட்டணம் இல்லை:

தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது - தமிழ்நாடு அரசு.

* ஸ்பா, மசாஜ் சென்டர்களில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்களால் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படலாம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

வாடிக்கையாளர்கள் உள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் மட்டும் சிசிடிவி பொருத்தலாம்.

தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - மதுரைக்கிளை.

* கர்நாடக மாநிலத்தில் 2479 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதில் பெங்களூரில் 2053 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று கர்நாடகாவில் 1290 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் - தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 229 ரன்களுக்கு ஆல் அவுட்.

தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக பீட்டர்சன் - 62, பவுமா - 51 ரன்களும் எடுத்தனர்.

27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது இந்திய அணி.

ஷர்துல் தாகூர் அசத்தல் 

ஜோகனஸ்பர்க் டெஸ்ட்டில் இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர்
7 விக்கெட்டுகளை  வீழ்த்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது  முதல் 5 விக்கெட்டுகளை பதிவு செய்தார்.

தென்ஆப்ரிக்கா மைதானத்தில் 7 விக்கெட் வீழ்த்திய 2 வது இந்திய வீரரானார்.

* லஞ்சம் வாங்கிய கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி செயலர் கைது.

ரூ.3,500 லஞ்சம் வாங்கிய அரூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி செயலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிராக்டர் கடனை திருப்பி செலுத்தியதற்கான தடையின்மை சான்று தர லஞ்சம் பெற்றபோது முருகன் கைது செய்யப்பட்டார்.

* தமிழ்நாட்டில் அதிரடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் மேலும் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

நேற்றைய பாதிப்பு 1,728ஆக இருந்த நிலையில் 2,731 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் 9 பேர் உயிரிழப்பு: தொற்றில் இருந்து 674 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.

சென்னையில் ஒரே நாளில் 1,489 பேருக்கு கொரோனா தொற்று.

செங்கல்பட்டில் மேலும் 290 பேருக்கு கொரோனா தொற்று.

தமிழகத்தில் மேலும் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நேற்றைய பாதிப்பு 1,728ஆக இருந்த நிலையில் 2,731 ஆக அதிகரிப்பு
அக்னிப்புரட்சி செய்திகள்:
கந்தூரி விழா கொடியேற்றம்.

* புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

* அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக மாநில அரசு.

இதன் மூலம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

* கடந்தாண்டு நவ.24ஆம் தேதி வரை கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ₨50 ஆயிரம் நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு.

உயிரிழந்த 36 ஆயிரத்து 413 பேரின் குடும்பத்தினருக்கு ரூ 182 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages