திருப்பாவை மார்கழி 20ம் நாள் பாடல் விளக்கம். - Agnipuratchi

திருப்பாவை மார்கழி 20ம் நாள் பாடல் விளக்கம்.

Share This

திருப்பாவை மார்கழி 20ம் நாள்
பாடல் விளக்கம்.

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முன்னால் சென்று பக்தர்களின் துயர் தீர்க்கும் கலியுகத்தின் தெய்வமே, நீ தூக்கத்தில் இருந்து எழ வேண்டும்.

செம்மையான செயல்களை நிகழ்த்துபவனே, திறமை மிகுந்த பலசாலியே, பகைவர்களுக்கு வியர்வை பெருகச்செய்து தோல்வி
பயத்தைக்கொடுப்பவனே,  நீ துயில் எழ வேண்டும்.

மென்மையான மார்பகத்தையும், சிவந்த வாய், சிறிய இடையை உடைய திருமகளாகிய நப்பினை பெருமாட்டியே, நீயும் தூக்கத்தில் இருந்து எழ வேண்டும்.

எங்களுக்கு விசிறியும், கண்ணாடியும் தந்து,   கண்ணனை இப்போதே எங்களுடன் நீராட அனுப்பி, கண்ணனின் அருள் மழையில் எங்களை நனைய வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages