அக்னிப்புரட்சி இன்றைய (05.01.2022) முக்கிய செய்திகள்.
* அதிரும் அமெரிக்கா, அதிஉச்ச கோரத்தாண்டவம்: ஒரே நாளில் 5.55 லட்சம் பேருக்கு கொரோனா.
அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,57,425 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,825 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,107,624.
ஒரே நாளில் 6,323 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
பிரான்சில் 271,686 பேருக்கும் இங்கிலாந்தில் 218,724 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியில் 170,844 பேருக்கும் ஸ்பெயினில் 117,775 பேருக்கும் அர்ஜென்டினாவில் 81,210 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
* உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி.
உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்து அணியை வங்கதேச அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி வரலாறு படைத்தது.
இன்று காலை 147/5 என்று தொடங்கிய நியூசிலாந்து அணி மேலும் 22 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களுக்குச் சுருண்டது.
வெற்றி இலக்கு 40 ரன்களுடன் களமிறங்கிய வங்கதேச அணி 2 விக்கெட்டுகளை இழந்து 42/2 என்று அபார வெற்றி பெற்று முதன் முதலாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் 12 புள்ளிகளைப் பெற்றது.
17 போட்டிகள் தொடர்ச்சியாக உள்நாட்டில் வென்று வந்த நியூசிலாந்தின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
* விருதுநகர்: சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு.
மஞ்சள் ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் மேலும் 5 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்.
* இந்தியாவில் மேலும் 58,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மொத்த பாதிப்பு 3,50,18,358ஆக அதிகரிப்பு.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் 534 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 4,82,551 ஆக அதிகரிப்பு.
* அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை.
2022-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் ஆலோசனை.
* இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 2,135 ஆக அதிகரிப்பு
நேற்று 1,892 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 2,135 ஆக அதிகரிப்பு
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு
சீர்குலைந்துள்ளது.
சட்டம் ஒழுங்கை சரிசெய்ய முதலமைச்சர் கவனம் செலுத்தவில்லை.
பெண்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
* வேதா இல்லம் - அதிமுக வழக்கு தள்ளுபடி.
வேதா இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடு நிராகரிப்பு.
அதிமுக தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
* கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை.
கூட்டத்திற்குப் பின் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 7ஆம் தேதி வரை 2 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நாளை விவாதம்.
நாளை மறுநாள் முதலமைச்சர் பதிலுரை.
* சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரடி ஒளிப்பரப்பு இல்லை.
கேள்வி நேரமும், முதல்வர் பதிலுரை மட்டுமே நேரடி ஒளிப்பரப்பு - சபாநாயகர் அப்பாவு.
* இரவு நேர ஊரடங்கு, கடைகளுக்கான நேரம் குறைப்பு, சுற்றுலாத்தலங்களுக்கு தடை, வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை உள்ளிட்ட அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்!
சென்னையில் திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்களில் நடைபெறும் திருமணங்கள் குறித்து மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்!
வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் மண்டபங்கள் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை - மாநகராட்சி எச்சரிக்கை!
ஞாயிறு கிழமை முழு ஊரடங்கு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
* முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓசூரில் கைது.
பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!
கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியை ஹசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, தமிழ்நாடு அழைத்து வர தனிப்படை போலீசார் நடவடிக்கை!
* கல்லூரியில் தேர்வுகள் ஒத்திவைப்பு..
ஜனவரி மாதம் நடைபெறவிருந்த தேர்வுகளை ஒத்திவைக்கப்படும்
கொரோனா பரவலை காரணமாகக் கொண்டு மாணவர்களுக்கு study holiday விடப்படும் - அமைச்சர் பொன்முடி
* கொரோனா எதிரொலி
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலத்தில்பெரிதாக திட்டமிட்டு இருந்த அனைத்து பேரணிகளையும் ஒத்திவைப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
சென்னையில் திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்களில் நடைபெறும் திருமணங்கள் குறித்து மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்
வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் மண்டபங்கள் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை - மாநகராட்சி எச்சரிக்கை
தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்
* தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பு.
தமிழகத்தில் ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழகத்தில் ஞாயிறு ஊரடங்கு என்பது மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது
"வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது"
வார இறுதி நாட்களில்
வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்க வாய்ப்பு
மேலும், சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்க வாய்ப்பு
* தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அரசு தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவ கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.
* மோசமான வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் இன்று நடைபெறவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார் பிரதமர் மோடி
* சாலை மார்க்கமாக பிரதமர் மோடி சென்ற போது ஏராளமான போராட்டக்காரர்கள் சாலையை மறித்ததால் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் சிக்கியுள்ளது
* ஞாயிறு முழு ஊரடங்கால், இனி சனிதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாற்று ஏற்பாடு செய்யப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
* விருதுநகர், சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம்.
காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
* பிரதமரின் நிகழ்ச்சி ரத்தானது ஏன்? - மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் இன்று பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார் பிரதமர் மோடி.
பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் ரத்து.
மோசமான வானிலை நிலவியதால் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்துவிட்டு சாலை மார்க்கமாக சென்ற பிரதமரின் வாகனம் மறிக்கப்பட்டது.
ஹூசைனிவாலா பகுதியில் போராட்டக்காரர்களால் சாலை மறிக்கப்பட்டிருந்ததால் 15-20 நிமிடங்கள் வரை பிரதமரின் கான்வாய் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
பிரதமரின் வருகை, திட்டம் குறித்து பஞ்சாப் அரசிடம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளாததால் நிகழ்ச்சி ரத்து - மத்திய உள்துறை அமைச்சகம்.
* தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்.
தமிழ்நாட்டில் நாளை (06.01.2022) முதல் இரவு ஊரடங்கு - முதல்வர் ஸ்டாலின்
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் - முதல்வர் ஸ்டாலின்
இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை!
பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். பேன்ற அவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி
பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் (Petrol/Diesel Bunks) 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்: தமிழக அரசு
மருத்துவம் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு
அனைத்து திரையரங்குகளிலும் (Multiplex/ Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்: தமிழ அரசு
* சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு திட்டமிட்டபடி வரும் 7ஆம் தேதி முதல் நடைபெறும் - யுபிஎஸ்சி
* பிரதமர் மோடி ஃபெரோஸ்பூரில் இன்று பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்தானது ஏன்?.. மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் இன்று பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி ரத்து செய்தார்.
பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி வருகை ரத்தானதாக ஃபெரோஸ்பூரில் நிகழ்ச்சி மேடையில் மத்திய அமைச்சர் மன்சுக்மாண்டவியா அறிவித்தார்.
ஃபெரோஸ்பூரில் ரூ.42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டை இருந்தார்.
லேசான வானிலை நிலவியதால் ஹெலிகாப்டர் பயணத்தை பிரதமர் மோடி தவிர்த்தார்.
ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்துவிட்டு சாலை மார்க்கமாக சென்ற பிரதமரின் வாகனம் மறிக்கப்பட்டது.
பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி ஃபெரோஸ்பூரில் உள்ள மேம்பாலத்தில் நெரிசலில் சிக்கி 20 நிமிடங்கள் தவித்தார்.
பிரதமர் செல்லும் வழியில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பிரதமரின் நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல்களை பஞ்சாப் அரசு முன்கூட்டியே வெளியிட்டதால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பஞ்சாப்பில் நெரிசலில் மோடி சென்ற கார் சிக்கியதால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரதமரின் பயணத் திட்டத்தில் கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் தான் குளறுபடிகளுக்குக் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரின் வருகை, திட்டம் குறித்து பஞ்சாப் அரசிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளாததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பஞ்சாப் அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாலையை மறித்த போராட்டக்காரர்கள் - மேம்பாலத்தில் 20நிமிடம் காத்திருந்த பிரதமர் மோடி
ஜோகன்னஸ்பெர்க் டெஸ்ட் - தென்னாப்பிரிக்காவுக்கு 240 ரன்கள் வெற்றி இலக்கு
இந்திய அணி 2வது இன்னிங்சில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்
* தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்!
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 2,530 பார்களுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டது.
* 8 மாவட்டங்களில் மட்டுமே பல்வேறு காரணங்களுக்காக டெண்டர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது- தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.
* பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை.
கொரோனாவால் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்ததால் பிரதமரை வரவேற்க என்னால் செல்ல முடியவில்லை - பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங்.
மோசமான வானிலை, போராட்டம் காரணமாக பயணத்தை ரத்து செய்ய ஏற்கனவே கோரியிருந்தோம்.
பிரதமருக்கு நாங்கள் மதிப்பு அளிக்கிறோம்; அதேசமயம் இச்சம்பவத்துக்கு வருந்துகிறோம் - பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங்.
* தமிழகத்தில் மேலும் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நேற்றைய பாதிப்பு 2,731ஆக இருந்த நிலையில் 4,862 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் புதிய ஒமிக்ரான் பாதிப்பு இல்லை - மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 121 ஆக உள்ளது
ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரில் 3 பேர் கேரளா, புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களை சேர்ந்தவர்களாவர்
சென்னையில் ஒரே நாளில் 2,481 பேருக்கு கொரோனா தொற்று - 4 பேர் உயிரிழப்பு
சென்னையில் கொரோனாவுக்கு 7,878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
* இந்தியாவில் இதுவரை 15-18 வயதுள்ள 1 கோடி சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்
* அனைத்து வகை இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை அளித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு.
* ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் காரில் சென்ற ஒருவர் சுட்டுக்கொலை - போலீசார் விசாரணை.
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் காரில் சென்ற ஒருவர் சுட்டுக்கொலை.
கர்நாடக மாநில எல்லையான ஆனெகல் என்ற இடத்தில் பரபரப்பு சம்பவம்.
கொல்லப்பட்ட நபர் ராஜசேகர ரெட்டி என தெரியவந்த நிலையில் எதற்காக கொல்லப்பட்டார் என்றும் போலீசார் விசாரணை.
No comments:
Post a Comment