திருப்பாவை மார்கழி 21ம் நாள் பாடல் விளக்கம் - Agnipuratchi

திருப்பாவை மார்கழி 21ம் நாள் பாடல் விளக்கம்

Share This

திருப்பாவை மார்கழி 21ம் நாள்
பாடல் விளக்கம்

பாலினைக்கறக்கும் போதெல்லாம் பாத்திரங்கள் அனைத்தும் நிரம்பி வழிய பாலைச்சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களின் உரிமையாளனான நந்தகோபரின் திருமகனான கண்ணனே,
நீ எங்களின் வருகையை அறிய வேண்டும்.

உன்னை நாடும் அடியவர்களைக்காப்பதில் மிக உறுதி உள்ளவன்., பெரியவன்.
இவ்வுலகில் எல்லோரும் காணும்படி கண்ணனாக அவதாரம் செய்த ஒளிச்சுடரே!
நீ துயில் நீங்கி எழவேண்டும்.

உன்னுடன் மாறுபட்ட கருத்துக்கொண்டு உன்னை எதிர்த்தவர்கள் எல்லோரும், தங்களுடைய வலிமையை இழந்து, தோற்றுப்போய் உன்னிடம் சரணடைய உன் வாசலில் காத்துக்கிடக்கிறார்கள்.

அவர்களைப்போல நாங்களும் உன்னுடைய புகழினைப்பாட, உன்னுடைய வாசலில் காத்துக்கிடக்கிறோம்.,
நீ அதனை ஏற்று  அதற்கான பலனை எங்களுக்கு தருவாயாக.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages