அக்னிப்புரட்சி இன்றைய (06.01.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (06.01.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (06.01.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் பலி 5 ஆக அதிகரிப்பு.

விருதுநகர் மாவட்ட சாத்தூர் அருகே நேற்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

* செர்பியா டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு.

மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க சென்ற ஜோகோவிச்சின் விசா ரத்து.

ஆஸ்திரேலியாவில் நுழைய தடுப்பூசி கட்டாயம் உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படாததால் விசா ரத்து செய்யப்பட்டதாக விளக்கம்.

விமான நிலையத்தில் பல மணி நேரமாக காத்திருக்கும் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்படுவார் எனவும் தகவல்.

* அமெரிக்காவில் அதி உச்சமாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 7,03,887.

உலகம் முழுவதும் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,533,699 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 7,198 ஆகும்.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,800 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

பிரான்சில் 332,252; இங்கிலாந்தில் 194,747; இத்தாலியில் 189,109; ஸ்பெயினில் 137,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 828 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

* ராஜேந்திர பாலாஜி ஆஜர்:
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற  நீதிபதி பரம்வீர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு.

* இந்தியாவில் அதிவேகமாக உயரும் கொரோனா பாதிப்பு:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேருக்கு கொரோனா தொற்று; தற்போது 2,85,401  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், பாதிப்பு விகிதம் 6.43% ஆக உயர்வு.

நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வுகள் நாளை தொடக்கம்.

ஜன.7, 8, 9, 16, 17 ஆகிய தேதிகளில் முதன்மை தேர்வுகள் நடைபெற உள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ள மாநிலங்களில் தேர்வர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை இயக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்.

* வரும் 8 ம் தேதி தமிழக அனைத்துக்கட்சி கூட்டம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

நீட் தேர்வுக்கு எதிரான சமூக நீதிக்கான போராட்டம் தொடரும்.

போராட்டங்கள் மூலமே வளர்ச்சி பெற்றுள்ளோம், நீட் தேர்வு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

* தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுத்து வருகிறார்; இது மக்களாட்சி மாண்புக்கு எதிரானது.

மாநில அரசிடமிருந்து உரிமையை பறித்துள்ளது ஒன்றிய அரசு; பள்ளிக்கல்வி முறையை அர்த்தமற்றதாக்கிவிட்டது நீட் தேர்வு, இதனை வேடிக்கை பார்க்கமுடியாது.

கல்வி என்பது அடிப்படை உரிமை; நுழைவுத்தேர்வுகள் விளிம்பு நிலை மாணவ சமுதாயத்தை பாதிக்கும், 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி சேர்க்கை அமையவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விளக்கியுள்ளது.

தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபடும் எனவும் அறிவித்தது. 

* பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுக்கவுள்ளது.

அதற்கான ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன- உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.

* கொரோனா பரவலை தடுப்பதற்கான முதல் நடவடிக்கை  மதுக்கடைகளை மூடுவதாகத் தான் இருக்க வேண்டும்.

மக்களைக் காக்க மதுக்கடைகளை மூட வேண்டும்-பாமக நிறுவனர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்

* தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பேரவையில் அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம் கோரிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி.

* ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய என்ன அவசரம்?

ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம்; அதற்குள் கைது செய்ய என்ன அவசரம்?

இது அரசியல் உள்நோக்கம் கொண்டு வழக்கா?-தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி.

ராஜேந்திர பாலாஜி மீது அரசியல் உள்நோக்கம் இல்லை.

ராஜேந்திர பாலாஜி மீது அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குபதியவில்லை.

அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டதற்கு தமிழக அரசு பதில்.

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் 3 பேரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை.

பாபுராய், பலராமன், முத்துப்பாண்டியன் ஆகியோரை கைது செய்ய இடைக்கால தடை.

பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நேற்று கைதான நிலையில் முன்ஜாமின் மீது இன்று விசாரணை.

* பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் - சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்.

* டெல்லி ராஷ்டிரபதி மாளிகையில் குடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு.

பஞ்சாப் பயணத்தின்போது பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக குடியரசு தலைவரிடம் எடுத்துரைக்கிறார் பிரதமர் மோடி.

* அம்மா உணவகத்தை மூடினால்தான் என்ன? - பேரவையில் துரைமுருகன் ஆவேசம்.

திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்களை அதிமுக அரசு மூடியது.

நாங்கள் ஒரு திட்டத்தை மூடினால் என்ன தவறு? - அமைச்சர் துரைமுருகன்.

* வரும் 8, 9ம் தேதிகளில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

ஊரடங்கு நாளன்று போட்டி தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

எழுத்து தேர்வுகள் எந்த மாற்றமுமின்றி திட்டமிட்டபடி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்புஅறிவிப்பு.

* முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு.

வரும் 20-ம் வரை நீதிமன்ற காவலில் வைக்க  மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு ராஜேந்திர பாலாஜி மாற்றம்.

* அம்மா உணவகத்தை மூட திமுக அரசு முயற்சிக்கிறது, ஒருவேளை மூடினால் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர் - ஈபிஎஸ்.

கலைஞர் பெயரில் இருந்த திட்டங்களை மூடியதால்தான் ஆட்சியை இழந்தீர்கள் - ஈபிஎஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி.

* சென்னை: எம்.ஐ.டி. கல்லூரியில் இதுவரை 81 பேருக்கு கொரோனா பாதிப்பு.

இதில் 67 மாணவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் உள்ளன.

இவர்களில் 3 பேர், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், தடுப்பூசி போடாதவர்கள் -  அமைச்சர் பொன்முடி.

* பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா ஒத்திவைப்பு:

மதுரையில் பிரதமர் மோடி 12 ம் தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைப்பு - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்.

* புதுச்சேரியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி அறிவிப்பு:

அனைத்து வகை உணவகங்களிலும் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

அனைத்து வகை மதுபான கடைகளிலும் 50 % வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் , வணிக வளாகங்கள் ( Malls ) ஆகியனவற்றில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

திரையரங்குகளில் 50% இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க உத்தரவு.

திருக்கோவில்களில் நடைபெறும் குடமுழுக்கு விழாக்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி பள்ளிகள் , கல்லூரிகள் , பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து இயங்க அனுமதி.

வெளிமாநில கார்கள் , பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் 50% அளவு இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து வர வேண்டும்.

* வலிமை படத்தின் வெளியீடு ஒத்தி வைப்பு.

நடிகர் அஜித் குமாரின்  வலிமை திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைப்பு - தயாரிப்பு நிறுவனம்.

* திருவள்ளுவர் தினம் மற்றும் வள்ளலார் ஜோதி ஆகிய இரு தினங்களை முன்னிட்டு, புதுச்சேரியில் வருகிற 15 மற்றும் 18ம் தேதிகளில் மதுபான கடைகளை மூட காலால்துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவு.

* தமிழகத்தில் இன்று 6983 பேர் புதியதாக கொரோனாவல் பாதிக்கபட்டு உள்ளனர்.

சென்னை - 3759 பேர்
செங்கல்பட்டு - 816 பேர்
திருவள்ளூர்- 444 பேர்

இன்று 1,28,496 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 721 பேர் டிஸ்சார்ஜ்; 11 பேர் உயிரிழப்பு.

* செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி அடுத்தடுத்து இருவர் வெட்டிக்கொலை.

செங்கல்பட்டு காவல் நிலையம் அருகே நடந்த சம்பவத்தால் பரபரப்பு.

கார்த்திக் மற்றும் மகேஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

* மைசூரில் உள்ள இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) அலுவலகத்தில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு மாற்ற மத்திய அரசு ஆணை

சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் பிறப்பித்த ஆணையின்  அடிப்படையில் மத்திய அரசு உத்தரவு

* நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் செலவு தொகை ரூ.70 லட்சத்திலிருந்து ரூ.95 லட்சமாக அதிகரிப்பு.

சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் செலவு தொகை ரூ.28 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக அதிகரிப்பு.

இந்த புதிய செலவு உச்சவரம்பு தற்போது நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் பொருந்தும் என மத்திய சட்டத் துறை அமைச்சகம் அறிவிப்பு.

* 2ஆவது டெஸ்ட் - தென்னாப்ரிக்கா வெற்றி:

ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது தென்னாப்பிரிக்கா.

* தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages