திருப்பாவை மார்கழி மாதம் 22ஆம் நாள் பாடல் விளக்கம்.
பரந்து விரிந்த இந்த உலகத்தில், உள்ள அரசர்கள் எல்லாம் உன்னிடம் நம்பிக்கை கொண்டு, நீ பள்ளி கொண்டிருக்கும் கட்டிலின் அருகில் கூட்டம் கூட்டமாகக் காத்திருக்கிறார்கள்!
அவர்களைப்போலவே நாங்களும் உன்னைச்சரணடைய வந்திருக்கிறோம்.
கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய் போலவும், மொட்டாக உள்ள தாமரைப்பூவானது மெதுவாக மலர்வது போலவும் அழகிய சிவந்த கண்களை சிறுகச்சிறுக திறந்து எங்களைப்பார்ப்பாயாக.,
சந்திரனும், சூரியனும் உதித்தாற் போல, கண்கள் இரண்டையும் திறந்து எங்களை பார்க்க வேண்டும்.,
உன்னுடைய அருட்பார்வையால் எங்களின் பாவங்களும், சாபங்களும் நீங்கும்.
No comments:
Post a Comment