அக்னிப்புரட்சி இன்றைய (07.01.2021) முக்கிய செய்திகள்
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* இந்து சமய அறநிலையத் துறையில் உயர்நிலை ஆலோசனைக் குழு அமைத்து அரசாணை.
அனைத்து இந்து கோயில்களிலும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும் இக்குழு ஆலோசனை வழங்கும்.
உயர்நிலைக் குழுவுக்கு முதலமைச்சர் தலைவராகவும், அறநிலையத்துறை அமைச்சர் துணைத் தலைவராகவும் நியமனம்.
அலுவல் சாரா உறுப்பினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி சிவம் உள்ளிட்ட 17 பேர் நியமனம்.
* உலக நாடுகளில் கொரோனா தாண்டவம்:
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பல நாடுகளில் கொரோனா 4-வது அலையும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா 3-வது அலையும் தாக்கி இருக்கிறது.
உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,82,116. உலகம் முழுவதும் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 6284.
அமெரிக்காவில் ஒரே நாளில் 6,63,368 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 1642 பேர் மரணம் அடைந்தனர்.
பிரான்ஸ் நாட்டில் 2,61,481 பேருக்கும் இத்தாலியில் 2,19,441 பேருக்கும் இங்கிலாந்தில் 1,79,756 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்தியாவிலும் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,4841 ஆக பதிவாகி இருக்கிறது.
* செங்கல்பட்டு இரட்டைக்கொலை - 2 பேர் என்கவுன்ட்டர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற இரட்டை கொலையில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
மொய்தீன், தினேஷ் ஆகியோரை பிடிக்க முயலும்போது காவல்துறையினரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காக சுட்டதாக தகவல்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க ’என்கவுன்டர்’ வெள்ளத்துரைக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்ட நிலையில், இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
* ஒரு லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு:
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 1,17,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 302 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,83,178 - ஆக அதிகரித்துள்ளது.
ஒரு நாளில் 30,836 பேர் கொரோனாவால் குணமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,71,363 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் கொரோனா உறுதியாகும் விகிதம் 7.74 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 149.66 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
* தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு.
இதுவரை 50 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பம்.
* டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்:
ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 18ஆம் தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், 26ஆம் தேதி குடியரசு தினம் ஆகிய நாட்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்.
* மருத்துவக் கலந்தாய்வுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி.
மருத்துவ படிப்பில் ஓபிசி-யினருக்கான 27% இடஒதுக்கீடு செல்லும்-உச்சநீதிமன்றம்.
மருத்துவ மேற்படிப்பு கவுன்சிலிங் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி.
மருத்துவ படிப்பில் உயர்ஜாதி ஏழையினருக்கான இடஒதுக்கீடு குறித்து மார்ச் 3-வது வாரம் விரிவான தீர்ப்பு- உச்சநீதிமன்றம்.
தமிழக அரசு, திமுக பாமக தரப்பு வாதங்களை ஏற்று உச்சநீதிமன்றம் உத்தரவு.
* அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேர்தலை ரத்து செய்வதற்கான சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல் - கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார்.
* சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.
கூட்டுறவு சங்கங்கள் தேர்தலை ரத்து செய்வதற்கான சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு.
கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
கூட்டுறவு சங்க இயக்குனர்கள் சட்டப்படியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சட்டத்திற்கு விரோதமாக 3 ஆண்டுகள் பதவிகாலம் என்பதை ஏற்கமுடியாது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா மினி கிளினிக்குகளை மூடியுள்ளனர்.
அம்மா உணவகம் முன்னோடி திட்டமாக உள்ளது, அதை மூடினால் என்ன என்று அமைச்சர் துரைமுருகன் பேசியது வேதனை அளிக்கிறது-எடப்பாடி பழனிசாமி.
டாஸ்மாக் கடைகளை மூட எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது போராட்டம் நடத்தினார்.
தற்போது ஜெட் வேகத்தில் கொரோனா தொற்று உயரும்போது டாஸ்மாக் கடைகள் மூடாமல் இன்னும் இருப்பது கண்டிக்கத்தக்கது-எடப்பாடி பழனிசாமி.
1983 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
கூட்டுறவு சங்க இயக்குனர்கள், தலைவர்களுக்கு 3 ஆண்டுகள் பதவி காலம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
* சட்டமன்றத்தில் முதல்வர் பதிலுரை:
ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கடைசி நாளான இன்று, பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து வருகிறார்.
நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு அளித்த அதிமுக உறுப்பினர்களுக்கு நன்றி.
கொரோனாவை ஒழிக்க துரிதமாக அரசு இயங்குவதாக பாராட்டிய அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கத்திற்கும் நன்றி.
ஃபாஸ்கான் ஊழியர்கள் தங்குவதற்கு வல்லம் வடகாலில் தங்கும் விடுதி அமைக்கப்படவுள்ளது ; இது 15 மாதங்களில் முடிவடையும்.
அம்மா மினி க்ளினிகை மூடிவிட்டோம், அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலை படித்தார்.
இதுபோன்ற பட்டியல் என்னிடம் நிறையவே இருக்கிறது- முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திமுக அரசு கட்டிய ஓமந்தூரார் தலைமைச் செயலகத்தை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் மருத்துவமனையாக மாற்றியது யார்?
செம்மொழிப்பூங்காவில் கருணாநிதி பெயர் மறைக்கப்பட்டது.
கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக பெரியார் சமத்துவபுரம் பாழடிப்பு.
உழவர் சந்தைகளை மூடியதும் வரும் முன் காப்போம் திட்டத்தை முடக்கியதும் யார் என கேள்வி.
தமிழகத்தில் எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பது தான் என்னுடைய எண்ணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அம்மா உணவகம் மூடப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன்.
ஜெயலலிதா நினைவிடம் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது - முதல்வர்.
குறுகிய காலத்தில் பெரும்பாலான வாக்குறுதிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
5 ஆண்டுகளுக்குள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்பதே சாராம்சம்.
சொன்னதை மட்டும் செய்யாமல் சொல்லாததையும் செய்து காட்டும் அரசுதான் இந்த அரசு.
அரசு பள்ளிகளை அனைவரும் விரும்பும் பள்ளிகளாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி என்று விளம்பரப்படுத்திவிட்டு, எவ்வளவு ஸ்மார்ட்டாக வேலை பார்த்தார்கள் என்பது நாடே அறியும் ; அதை பார்த்து கைக்கொட்டி சிரித்தார்கள்.
காவல்துறையை ஏவல் துறையாக மாற்றிவிட்டதாக பழனிசாமி குற்றம்சாட்டுகிறார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று மெத்தனமாக கூறியவர்தான் பழனிசாமி.
தற்போது சட்டத்தின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது; திமுகவை சேர்ந்தவர்கள் யார் தவறு செய்தாலும், ஒரு சிறிய குற்றத்தில் ஈடுபட்டாலும், அண்ணா மீது ஆணையாக, கலைஞர் மீது ஆணையாக சொல்கிறேன் இந்த ஸ்டாலின் உறுதியாக நடவடிக்கை எடுப்பான்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.
கடந்த 5-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி. உரையுடன் தொடங்கிய சிறப்பு கூட்டத்தொடர் நிறைவு.
சபாநாயகர் அப்பாவு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
தமிழக அரசின் மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், ஆவின், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் காலியிடங்களை டி.என்.பி.எஸ்.சி-யே இனி நிரப்பும்- இதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
* பிரதமர் நரேந்திர மோடியின் புதுச்சேரி வருகை ஒத்திவைப்பு.
ஜனவரி 12ம் தேதி புதுச்சேரியில் நடக்கும் தேசிய இளைஞர் தின விழாவில் மோடி நேரில் பங்கேற்கவில்லை.
காணொலி காட்சி மூலம் பிரதமர் பங்கேற்பார் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.
* சென்னை, பஞ்சாப்பில் பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடு விவகாரம் தொடர்பாக பட்டினப்பாக்கத்தில் போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், விபி. துரைசாமி, குஷ்பு, சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கைது.
* சென்னை: குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
எம்.ஐ.டி.யில் இதுவரை மொத்தம் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
தொற்று உறுதியானவர்களில் 90% பேருக்கு ஒமைக்ரான்அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் விடுதியில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளாகாத மாணவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை.
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை.
சாதனை படைத்த நாட்டின் விஞ்ஞானிகள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், சகாதாரத்துறையினருக்கு பிரதமர் மோடி நன்றி.
* 18 வயதுக்கு மேற்பட்ட 90% பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
* இந்தியாவில் 15-17 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது-பிரதமர் மோடி.
5 நாட்களில் 1.5 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம்.
* இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இனி 7 நாட்கள் வீட்டு தனிமை கட்டாயம் - மத்திய அரசு.
நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தனிமை காலம் முடிந்ததும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் - மத்திய அரசு.
* ஊரடங்கு - காவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்:
அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்ய கூடாது.
அடையாள அட்டையுடன் பயணிக்கும் பணியாளர்களை உடனே அனுமதிக்க வேண்டும்.
நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளுக்கு செல்வோர் அழைப்பு கடிதத்தை காண்பித்தால் அனுமதிக்க வேண்டும்.
அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணி முடிந்து திரும்புவோரை அனுமதிக்க வேண்டும்.
ஊரடங்கு வாகனச்சோதனையின் போது கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
பத்திரிகை, மருத்துவம், பால், மின்சாரம், சரக்கு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களை அனுமதிக்க போலீசாருக்கு காவலர்களுக்கு டிஜிபி அறிவுறுத்தல்.
* டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு:
வரும் ஞாயிறன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு 11 ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கு தேர்வு வரும் 11 ஆம் தேதி நடைபெறும்.
ஏற்கனவே பதிவிறக்கம் செய்த ஹால்டிக்கெட்டினை 11 ம் தேதி பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவிப்பு.
கட்டிடகலை / திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத்தேர்வு திட்டமிட்டபடி நாளை நடைபெறும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
* கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கில் அரசியல் தலைவர்களை விமர்சித்து பேசியதாக பதியப்பட்ட 3 பிரிவுகள் ரத்து.
மத உணர்வுகளை புண்படுத்துதல், இரு குழுக்களுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்துதல், பிரிவினையை ஏற்படுத்துவதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஏற்கத்தக்கதே- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.
* உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.533 கோடி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை மானியமாக ரூ.533 கோடியை விடுவித்து தமிழக அரசு உத்தரவு.
15வது நிதி ஆணையத்தின்படி 2வது தவணை நிதியை ஒதுக்கியது தமிழக அரசு.
கிராம ஊராட்சிகளுக்கு ரூ.426 கோடியும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.90 கோடியும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.27 கோடியும் ஒதுக்கி அரசாணை வெளியீடு.
* சென்னை: குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் 30 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு.
அக்கடையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு முதலில் கொரோனா உறுதியானதை தொடர்ந்து 250 ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 30 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதால் சரவணா ஸ்டோர்ஸ் கடையை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதிக கொரோனா பரவல் அபாய நாடுகள் பட்டியலை இந்திய அரசு வெளியிட்டுள்ளது
பட்டியலில் காங்கோ, எத்தியோப்பியா, கென்யா, கஜகஸ்தான் உள்ளிட்ட 9 நாடுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* புதுச்சேரி: ஜன.19ம் தேதி காவலர் தேர்வுக்கான உடற்தகுதி தேர்வு.
ஜன.9ம் தேதி இதற்கான அனுமதி சீட்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக்கு வரும் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், தேர்வுக்கு 48 மணி நேரம் முன்பாக RTPCR பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வர வேண்டும்-புதுச்சேரி DIG மிலன் தும்ரே.
* ஆந்திராவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு உயர்வு:
ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60 - லிருந்து 62 - ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு .
கொரோனாவால் இறந்த அரசு ஊழியர் குடும்பத்தினருக்கு ஜூன் 30 க்குள் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு.
* இலங்கை சிறையில் வாடும் 56 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும், 75 மீன்பிடிப் படகுகளை மீட்கவும் வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மீனவர்களை விடுவித்து அவர்களின் குடும்பங்களுடன் இணைவதை உறுதி செய்திட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு; தற்காலிக விடைக்குறிப்புகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.
கடந்த டிச.8 முதல் 13 வரை நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் trb.tn.nic.in இணையதளத்தில் வெளியீடு.
ஜன.10-ம் தேதி மாலைக்குள்ளாக ஆட்சேபனை ஏதும் இருப்பின், உரிய சான்றுடன் பதிவு செய்யலாம் என TRB அறிவிப்பு.
* தமிழகத்தில் புதிய கொரோனா பாதிப்பு-8,981,
மொத்த பாதிப்பு-27,76,413,
சிகிச்சையில்-30,817,
குணமடைந்தோர்-984,
இதுவரை குணமடைந்தோர்-27,08,763
உயிரிழப்பு-8,
மொத்த உயிரிழப்பு-36,833
* மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகள் அறிவிப்பு:
அரசு மணல் கிடங்குகளில் இனி ஆன்லைன் மூலம் மணல் விற்பனை.
மணல் விற்பனையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முன்னுரிமை - அமைச்சர் துரைமுருகன்.
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக காலை 8 மணி முதல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
16 லாரி குவாரிகள், 20 மாட்டுவண்டிகள் குவாரிகளுக்கு சுற்று சுழல் அனுமதி.
* பிரபல நடிகர் மற்றும் நடிகைக்கு கொரோனா:
நடிகர் சத்யராஜுக்கு கொரோனா தொற்று உறுதி; சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நடிகை த்ரிஷா சமூக வலைதளத்தில் பதிவு; புத்தாண்டுக்கு சில நாட்கள் முன்பு பாசிடிவ் ஆனதாகவும் , தற்போது குணமடைந்து வருவதாகவும் த்ரிஷா தகவல்.
No comments:
Post a Comment