திருப்பாவை மார்கழி 23ஆம் நாள்
பாடல் விளக்கம்.
மழைக்காலம், மலைப்பகுதியில் அமைந்த குகை, நேரத்தை மறந்து தூங்கிக்கொண்டு இருந்த சிங்கம் ஒன்று விழித்து எழுந்து.,
பிடரியை சிலிர்த்துக்கொண்டு
பெரும் கர்ஜனையோடு, குகையை விட்டு வெளியேறி கம்பீரமாக புறப்பட்டது போல்.,
அந்த சிங்கத்தைப்போல கம்பீரம் கொண்ட, காயாம்பூ நிறத்தினை உடைய கண்ணனே!,
நீயும் உன்னுடைய கோவிலினை விட்டு வெளியேறி, அத்தாணி மண்டபத்தில் முறையாக வைக்கப்பட்டுள்ள அழகிய சிம்மாசனத்தில் வந்து அமர வேண்டும்
நாங்கள் உன்னை நாடி வந்தது ஏன் என்பதைக்கேட்டு எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்...
No comments:
Post a Comment