அக்னிப்புரட்சி இன்றைய (11.01.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் 68-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை
* டெல்லியில் இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது
இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்பு
* கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய வீரர் சாய் பிரனீத் மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் தொடரிலிருந்து விலகல்
* டையூ யூனியன் பிரதேசத்தில் 15 - 18 வயதுடைய அனைத்து சிறார்களுக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்
* உலகம் முழுவதும் கொரோனாவால் 31 கோடி பேர் பாதிப்பு
கொரோனாவில் இருந்து 26 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 55.11 லட்சம் பேர் உயிரிழப்பு
* மதுரையில் கலைஞர் நூலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்
* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கம்
சென்னையிலிருந்து இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கம்
கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151, 044-2474 9002 என்ற கட்டணமில்லா எண்களில் புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை
* உத்தரகாண்ட், உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் படம் நீக்கம்.
5 மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை.
* உலக அளவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,978,585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் ஒரே நாளில் 4,511 பேர் மரணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 912 பேர் மரணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 557,590 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து உள்ளனர்.
* தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கல்லூரிகள் விடுமுறை.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை.
அனைத்து பிஇ, கலை - அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை - உயர்கல்வித்துறை.
* தமிழகத்தில் 1-9 வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை.
தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31 வரை பள்ளிகள் விடுமுறை.
ஆன்லைன், கல்வித்தொலைக்காட்சி மூலம் 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை.
10,11,12-ம் வகுப்புகளுக்கு வழக்கம் போல் நேரடி வகுப்புகள் நடத்தப்படும்- பள்ளிக்கல்வித்துறை
* பொங்கல் தொகுப்பு - வெளிமாநிலத்தில் கொள்முதல் நியாயமா? - அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்
பொங்கல் தொகுப்பு வழங்கியதில் நடைபெற்ற குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் - தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.
வட மாநிலங்களில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்திருப்பதும், பொட்டலங்களில் இந்தி வார்தைகள் இடம்பெற்றிருப்பதும் கண்டனத்திற்குரியது.
தமிழக மக்களின் வரி பணத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கான பொருட்களின் பெயர்கள் இந்தியில் இருப்பது எந்த வகையில் நியாயம்?
தமிழக அரசு, இந்தி திணிப்பை மேற்கொள்ளலாமா; இது தமிழ் மொழியையும், தமிழர்களையும் அவமதிக்கும் செயல் இல்லையா? - ஓபிஎஸ்
* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,68,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 69,959பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 277பேர் உயிரிழப்பு.
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4461ஆக உயர்வு.
* மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றி இதயம்: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரும் திருப்பம்
அமெரிக்காவின் மேரிலாந்தை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற 57 வயது நபருக்கு இதயம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
வேறு இதயத்தை பொருத்தாவிட்டால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் அவர் இருந்தார்.
இந்நிலையில் பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒப்புதலையும் அவர்கள் பெற்றனர்.
இதையடுத்து மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்டது.
இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் பென்னட் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதர்களின் உடல் உறுப்புகளும் பன்றிகளின் உடல் உறுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளன.
இதனால் பன்றியின் இதயம் ஏற்கனவே மனிதர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால் அந்த இதயங்கள் மனித உடலுக்கு முழுமையும் பொருந்ததால் அறுவை சிகிச்சைகளில் வெற்றி கிடைக்கவில்லை.
எனவே மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் பன்றியின் இதயத்தில் மரபணு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டு உலகிலேயே முதன்முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது செய்யப்பட்டுள்ளது
இதில் நம்பிக்கை தரும் முடிவு கிடைத்துள்ளதால் சிறுநீரகம் போன்ற பன்றியின் மற்ற உடலுறுப்புகளையும் மரபணு மாற்றம் செய்து மனிதர்களின் உடலில் பொருத்தும் சூழல் ஏற்படும்.
உலகெங்கும் உறுப்பு தானத்திற்காக காத்துள்ள கோடிக்கணக்கான நோயாளிகளுக்கு இது மிகப்பெரும் தீர்வாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,896-க்கு விற்பனை!
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை
* தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தம்.
தமிழகத்தில் சோதனைக்கு வரும் மாதிரிகளில் 85 % ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படுவதால் மரபணு பரிசோதனை கைவிடப்படுகிறது.
100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானால் 85 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு தான் உள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
* கலைஞர் நினைவு நூலகத்துக்கு முதல்வர் அடிக்கல்:
மதுரையில் அமைக்கப்பட உள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மதுரையில் ரூ .114 கோடி மதிப்பில் அமையவுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
* வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிம்புவுக்கு 'கவுரவ டாக்டர்' பட்டம் வழங்கப்பட்டது.
கலைத்துறையில் சிம்புவின் சாதனைகளை கவுரவப்படுத்தும் வகையில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
* பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை பிரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
* மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16ம் தேதிக்கு பதில் வேறுநாளுக்கு மாற்றப்படலாம் என தகவல்.
16ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழுஊரடங்கு என்பதால் ஜல்லிக்கட்டு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
* ஜனவரி 25ம் தேதி வரை எந்த ஒரு சேவல் சண்டைக்கும் அனுமதி வழங்கக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சேவல் சண்டை போட்டிகள் நடத்துவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என நீதிபதிகள் கேள்வி.
* பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வரும் 18-ம் தேதி நடைபெறும் தைப்பூசத் தேரோட்டத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை - கோயில் நிர்வாகம்.
* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றம்:
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ஜன.16ம் தேதி நடைபெற இருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.17ம் தேதிக்கு மாற்றப்படுகிறது- அனிஷ் சேகர், மதுரை மாவட்ட ஆட்சியர்.
* ஜ.பி.எல் தொடரில் டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் தேர்வு : ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் படேல் அறிவிப்பு
* மகளிருக்கு 50% இடஒதுக்கீடு அறிவிப்பாணை ரத்து:
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணை ரத்து.
வார்டுகளின் எண்ணிக்கை அடிப்படையிலேயே இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
* மாமியார் தனது மருமகளுக்கு கொடுமை செய்தால் அது கடுமையான குற்றம்- உச்சநீதிமன்றம் அதிரடி.
மாமியார் தனது மருமகளுக்கு கொடுமை செய்தால் அது கடுமையான தண்டனையாக கருதப்படும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
15 ஆண்டுகளுக்கு முன் சென்னை திருவெற்றியூரில் மாமியார் கொடுமையால் மருமகள் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
ஒரு பெண் இன்னொரு பெண்ணை பாதுகாக்காத போது அந்த பெண் பாதிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், மாமியார் தனது மருமகளுக்கு கொடுமை செய்தால் அது கடுமையான குற்றமாக கருதப்படும் என கூறினர்.
மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட 80 வயது மாமியாருக்கு 3 மாதங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதிகள், உடனடியாக அவர் காவல் நிலையத்தில் சரணடைய உத்தரவிட்டனர்.
* ஜன.17 திங்கள் கிழமை அரசு விடுமுறை.
வரும் ஜனவரி 17ம் தேதி திங்கள்கிழமை அரசு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு.
* தமிழகத்தில் மேலும் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:
தற்போது மாநிலத்தில் 75,083 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைநகர் சென்னையில் மட்டும் 6484 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 11 பேர் பலி.
* டாஸ்மாக்கில் மது வாங்க கட்டுப்பாடு:
முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில் மது விற்பனை என தமிழக அரசு அறிவிப்பு.
மதுபான சில்லறை விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக் கூடாது.
இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் 5 பேர்களுக்கு மேல் கடைகளில் அனுமதிக்கக் கூடாது.
மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றுவோர் தவறாது முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும்.
* கடலூர்; சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்பட 40 பேருக்கு கொரோனா.
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நாளை 12ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதியில் தங்கியுள்ள மருத்துவ மாணவர்கள் உடனடியாக விடுதி அறையை காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment