அக்னிப்புரட்சி இன்றைய (12.01.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ்.ராம்பாபு கொரோனா தொற்றால் காலமானார்.
மதுரை முன்னாள் எம்.பியும் , தமாகா பொதுச்செயலாளருமான ஏ.ஜி.எஸ் . ராம்பாபு ( 60 ) கொரோனாவால் காலமானார்.
மதுரை தொகுதியில் 1989 ல் காங். சார்பாகவும், 1991 ல் தமாகா சார்பிலும் எம்.பியாக தேர்வானவர் ராம்பாபு.
* பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்றும், நாளையும் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை.
* பொங்கல் பண்டிகை என்பதால், இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது.
அடுத்தவாரம் முகாம் நடைபெறும்.
மெகா தடுப்பூசி முகாம் வரை காத்திருக்காமல் வார நாட்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
60,405 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 442 பேர் உயிரிழப்பு.
தற்போது 9,55,319 பேர் சிகிச்சையில் உள்ளனர் - சுகாதார அமைச்சகம்.
* 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தவிர்க்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
* புதுச்சேரியில் 25-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்
இளைஞர்களிடையே தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை பரப்பும் வகையிலும் விழா நடத்தப்படுகிறது
* அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி வேளாண்மை மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்
* அரசு விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்க கோரிய வழக்கு வாபஸ்
அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்ததையடுத்து வழக்கு வாபஸ்
பொங்கல் விடுமுறை தினங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மனுவில் கோரிக்கை
* சென்னை, பல்லாவரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் உட்பட 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 2,763 சிறப்பு பேருந்துகளில் 1,14,665 பேர் பயணம் - போக்குவரத்துத்துறை
ராஜேந்திர பாலாஜி கைது செய்கிறோம் என்ற பெயரில் எதற்காக அவர்களது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களை காவல்துறையினரை கொண்டு துன்புறுத்தினார்கள் நீதிபதிகள் கேள்வி
காவல்துறையினரின் இத்தகைய செயல்பாடுகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல எனவும் நீதிபதிகள் காட்டம்
* பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் விசாரணைகுழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
* தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
கொரோனா 3வது அலை அதிகரித்துவரும் நிலையில் 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் - நீதிமன்றம்.
* வேளாண் துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
161 உதவி வேளாண் அலுவலர், 730 உதவி தோட்டக் கலை அலுவலர்களுக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
* ராஜேந்திர பாலாஜி கைது - உச்சநீதிமன்றம் அதிருப்தி
ராஜேந்திர பாலாஜியை தமிழ்நாடு அரசு கைது செய்த விதம் ஏற்புடையதல்ல- உச்சநீதிமன்றம்.
ராஜேந்திர பாலாஜி விவகாரத்தை ஒருதலைபட்சமாக நீதிபதிகள் அணுகக் கூடாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்.
நாங்கள் ஒருதலைப்பட்சமாக அணுகுகிறோம் என்றால் கடந்த வாரமே அவருக்கு நாங்கள் ரிலீப் கொடுத்திருப்போம் - நீதிபதிகள் பதில்.
ராஜேந்திர பாலாஜிக்கு கடந்த வாரமே ஜாமின் வழங்கியிருப்போம், தமிழ்நாடு அரசின் வாதத்தை கேட்கவே அவகாசம் அளித்தோம்- உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
* பொங்கல் திருநாளை முன்னிட்டு 1,19,161 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.7.1 கோடி சாதனை ஊக்கத்தொகை.
2021-ஆம் ஆண்டில் வருகை பதிவேட்டின் அடிப்படையில், ரூ.85, ரூ.151, ரூ.195 மற்றும் ரூ.625 வீதம் பணியாளர்களுக்கு “சாதனை ஊக்கத்தொகை”- அரசு முதன்மைச் செயலாளர், போக்குவரத்துத் துறை.
* முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன்:
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்; வெளியூர் செல்லக்கூடாது.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவும் நீதிமன்றம் நிபந்தனை வழங்கியுள்ளது.
ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் அளித்து உத்தரவிட்டனர்.
ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி புகார் வழக்கில் ராஜேந்திர பாலாஜி கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
* பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாக கூறிய தன் தந்தை நந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற மகன் குப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும், தெரிவித்து கொள்கிறேன்.
வலைத்தளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம், உண்மையை கூறினால் ஜாமினில் வெளிவரா வழக்கு என திமுகஆட்சியில் ஜனநாயகத்தை முடக்கும் முயற்சி தொடர்கிறது.
ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால், மரணம்தான் பதிலாக கிடைக்கிறது; இது தற்கொலை அல்ல, ஜனநாயக படுகொலை- எடப்பாடி பழனிச்சாமி.
* அரசு ஊழியர்களுக்கு வழங்கியதைப் போல திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்.
பொங்கல் கருணைக்கொடை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
* தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகை, நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட மருத்துவக்கல்லூரிகள் திறப்பு
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்பதே திமுகவின் குறிக்கோள்
கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது கொள்கை
மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
* தை பிறந்தால் வழி பிறக்கும் என துவங்கி பிரதமர் மோடி பேச்சு:
முதல் முறையாக ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கப்பட்டது -பிரதமர் மோடி.
உ.பியில் சில நாட்களுக்கு முன்னர் 9 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தேன்.
தமிழகத்தில் மேலும் 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்து என் சாதனையை முறியடித்துள்ளேன்.
7 ஆண்டுளில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 54 சதவீதம் அதிகரித்துள்ளது-பிரதமர் மோடி.
* கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காகவே மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு அழைப்பு - நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்.
மாணவர்கள் நேரடி வகுப்புகளில் பங்கேற்பது கட்டாயமில்லை.
ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளிகளே முடிவெடுக்கலாம் - தமிழக அரசு.
* 3 துறைகளில் நிர்வாக மாற்றம் - தமிழக அரசு:
தொழில்துறையிடம் இருந்த சர்க்கரை ஆலைகள் நிர்வாகம் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கீடு.
போக்குவரத்து துறையிடம் இருந்த விமான நிலைய நிர்வாகம் தொழில்துறைக்கு ஒதுக்கீடு.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் இடம் இருந்த அயல்நாட்டு வேலை வாய்ப்பு கழகம் சிறுபான்மை நலத்துறைக்கு ஒதுக்கீடு.
* அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு நிறைவு - போட்டிகளில் பங்கேற்க 6,533 பேர் விண்ணப்பம்.
4,534 மாடு உரிமையாளர்களும், 1999 மாடுபிடி வீரர்களும் விண்ணப்பம்.
* ஜனவரி 29 முதல் பிப்ரவரி 6 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு.
பிப்ரவரி 12 முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
பொங்கல் விடுமுறைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்களின் கவனத்திற்கு
* இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ( ISRO ) புதிய தலைவராக கேரளாவை சேர்ந்த சோம்நாத் நியமனம்
இவர், அடுத்த 3 ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் தலைவராக இருப்பார்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(இஸ்ரோ) புதிய தலைவராக கேரளாவை சேர்ந்த சோம்நாத் நியமனம்.
திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனராக சோம்நாத் இருந்து வந்தார்.
தற்போதைய தலைவர் சிவன் பதவி காலம் நாளை மறுநாள் நிறைவு பெற உள்ளது.
சோம்நாத் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் தலைவராக இருப்பார் - மத்திய அரசு அறிவிப்பு.
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17,934 பேருக்கு கொரோனா; 19 உயிரிழப்பு: தொற்றில் இருந்து 4,039 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.
* கேப்டவுன் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது தென்னாப்பிரிக்கா.
முதல் இன்னிங்ஸில் 223 ரன்கள் எடுத்த இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய உடனே அடுத்தடுத்து 2 விக்கெட்கள் இழந்து தடுமாற்றம்.
No comments:
Post a Comment