அக்னிப்புரட்சி இன்றைய (13.01.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (13.01.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (13.01.2022) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு வைணவ திருத்தலங்களில் சொர்க்க வாசல் திறப்பு - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருப்பதி : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் திறப்பு.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, சேலம் அழகிரிநாதர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி உள்ளிட்ட திருக்கோயில்களில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

* புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி.

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக நடைபெறும் இப்போட்டியில் 600க்கும் அதிகமான காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.

* திருச்சி மத்திய சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமினில் வெளியே வந்தார்.

ராஜேந்திர பாலாஜிக்கு நேற்று 4 வாரம் நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.

* இந்தியாவில் 2.5 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு:

நேற்றைய பாதிப்பை விட இன்று 27% தொற்று அதிகரிப்பு.

புதிய பாதிப்பு-2,47,417
மொத்த பாதிப்பு-3,63,17,927
குணமடைந்தோர்- 84,825
சிகிச்சையில்- 11,17,531
ஒமிக்ரான் பாதிப்பு-5,488

* தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு 20 புதிய ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

106 மகிந்திரா பொலிரோ நியோ வாகனங்கள் ரோந்துப்பணிக்கு தேவையான உபகரணங்களுடன் ரூ 9.76 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளன.

ஜிபிஎஸ் கருவி சம்பந்தப்பட்ட காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைப்பு.

* முகக் கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம்.

முகக் கவசம் அணியாதவர்கள் மீதான அபராத தொகையை ரூ 200-ல் இருந்து ரூ 500 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு.

* தமிழ்நாடு அரசின் 8 மாத செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் வீடியோவாக வெளியிட்டார்.

மக்களோடு வாழ் என்ற பேரறிஞர் அண்ணா சொன்ன வழியில் ஆட்சி நடக்கிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பழக்கியபடி உங்களுக்கு உழைக்கவே காத்திருக்கிறேன்.

இதுவரையிலான என்னுடைய செயல்பாடுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

8 மாத செயல்பாடுகளை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் வீடியோ.

* தமிழக அரசின் பெரியார் விருது, அம்பேத்கர் விருது பெறுவோரின் விவரங்கள் வெளியீடு.

பெரியார் விருது - எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, அம்பேத்கர் விருது - முன்னாள் நீதிபதி சந்துரு ஆகியோருக்கு அறிவிப்பு.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 15ஆம் தேதி விருதுகளை வழங்குகிறார்.

பெரியார், அம்பேத்கர் விருதுகளுடன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படும் - தமிழக அரசு.

* முதலமைச்சர் முக ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து

வாழ்த்து அறிக்கையில் தமிழ் புத்தாண்டு பற்றி குறிப்பிடப்படவில்லை...

* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மக்கள் நீதி மையம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 47 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்

* நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்.27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

ஜன.23-ல் நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைப்பு - மத்திய அரசு.

* கேரளாவில் பொங்கல் தினத்தை முன்னிட்டு 6 மாவட்டங்களில் நாளை விடுமுறை என அறிவிப்பு.

இடுக்கி, பந்தனம்திட்டா, திருவனந்தபுரம், கொல்லம், வயநாடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை - கேரள அரசு.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் அறிவிப்பு.

* மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி அடுத்த தோமோஹானி அருகே கவுகாத்தி- பிகேனிர் விரைவு ரயில் கவிழ்ந்து விபத்து

விரைவு ரயிலின் சில பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு
இதுவரை 3 பேர் உயிரிழப்பு,15 பேர் படுகாயம் என தகவல்

* இந்தியாவில் 92% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

நாடு முழுவதும் 70% பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

முதல்வர்கள் உடனான ஆலோசனை
கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

கொரோனாவில் இருந்து நம்மை காக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் - பிரதமர் மோடி

நாட்டில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது

கொரோனா சாதாரண மக்களையே
அதிகளவில் பாதித்துக் கொண்டிருக்கிறது

முதல்வர்கள் உடனான ஆலோசனை
கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

* கொரோனா அலையை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்நாடு துணை நிற்கும்

பிரதமர் உடனான முதலமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

தமிழகத்தில் 64% பேருக்கு 2 டோஸ்
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

பிரதமர் உடனான முதலமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் 20,911 பேருக்கு தொற்று உறுதி
சென்னையில் 8218 பேருக்கு தொற்று உறுதி  இறப்பு 25

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages