இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஜி.கே.மணி தலைவர் பா.ம.க
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பொங்கல் திருநாள் உழைக்கும் மக்களின் உன்னதத் திருவிழா, உழவு செழித்தால் உலகம் செழிக்கும்; உணவு உற்பத்தியை பெருக்கும்; உழவர்களுக்கு பெருமை சேர்க்கும் உயரிய திருவிழா, உழைப்பிற்கு உறுதுணையாய் இருக்கும் இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி பாராட்டி குதூகலத்துடன் கொண்டாடி மகிழும் பெருவிழா. பாரம்பரியம் போற்றி பண்பாடு காக்கும் தை திருநாள்.
கொரோனா (ஒமைக்ரான் வகை) பெருந்தொற்று அசுர வேகத்தில் பரவி வரும் தற்போதைய சூழலில் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தை பிறந்தால் வழி பிறக்கும். தங்கள் குடும்பத்தில் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெருகி, வளமும் நலமும் பெற்று, குடும்ப நலமுடன் நீடூழி வாழ தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இதயங்களிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இவண்,
அன்பு என்றும் மாறவாத, ஜி.கே.மணிM.L.A, தலைவர்,பா.ம.க
No comments:
Post a Comment