அக்னிப்புரட்சி இன்றைய (14.01.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* ரேஷன் கடைகளுக்கு 17ம் தேதி வேலை நாள்:
ரேஷன் கடைகளுக்கு வரும் 17ம் தேதி வேலை நாள்- உணவு வழங்கல் துறை.
தமிழக அரசு வரும் 17ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தது.
அன்றைய தினம் ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவித்து உணவு வழங்கல் துறை நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டது.
இந்நிலையில், 'கார்டுதாரர்கள் அத்தியாவசிய சேவைகளை பெற ஏதுவாக, 17ம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்; விடுமுறை அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது' என, உணவு வழங்கல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
* தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உற்சாக கொண்டாட்டம்.
புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு தைத்திருநாளை வரவேற்கும் தமிழர்கள்.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் கோலாகலமாக பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…..
* தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.
சீறிப்பாயும் காளைகளை அடக்கி பரிசுகளை வெல்ல காளையர்கள் ஆர்வம்.
முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு காரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனமும் பரிசாக அறிவிப்பு.
* தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள், தமிழ் இனநாள், பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்.
“பொங்கலோ பொங்கல்" எனும்போதே மகிழ்ச்சி பொங்கி, பூரிப்பு பிறக்கிறது - பொங்கல் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து.
கொரோனா கட்டுப்பாடுகளுடன் பொங்கல் திருநாளை கொண்டாடுவோம்.
இயற்கையோடு இயைந்து தமிழர்களாகிய நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, நெகிழிப் பைகளை இனி பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுப்போம்.
மீண்டும் மஞ்சப்பைகளை பயன்படுத்துவோம்.
சூரியனை வணங்குவோம், உழவரை வாழ்த்துவோம், மண் செழிக்கட்டும், மக்கள் மகிழட்டும் - முதல்வர்.
* அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்;
எந்த பேதமுமின்றி நன்றியுணர்வு என்னும் ஒரே நோக்கத்தோடு இயற்கைக்கு நன்றி செலுத்தும் தமிழர் திருநாளாம், பொங்கலில் தீமைகள் அகன்று நன்மைகள் செழிக்கட்டும்; உழவர்கள் ஆக்கமும் ஊக்கமும் பெற்று மகிழ்ச்சியடையட்டும்- ஓபிஎஸ் பொங்கல் வாழ்த்து.
* தமிழ்நாட்டின் எழுச்சிமிகு அடையாளமாக பொங்கல் திகழ்கிறது; இந்த சிறப்பு வாய்ந்த நாளில் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துகள்.
இயற்கையுடனான பிணைப்பும்,சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாக பிரார்த்திக்கிறேன். -பிரதமர் பொங்கல் வாழ்த்து.
* பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பொங்கல் வாழ்த்து
உலகிற்கே உணவளிக்கும் உழவர்களை போற்றும் அறுவடை திருநாளில், தமிழர்கள் இல்லங்களில் அன்பும், அமைதியும், வளமும், நலமும் பெருகி மகிழ்ச்சி பொங்கட்டும் - ஈபிஎஸ்.
* இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2.64 லட்சம்:
புதிதாக 2,64,202 பேர் பாதித்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,65,82,129 ஆக உயர்ந்தது.
புதிதாக 315 பேர் இறந்துள்ளனர்
நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,85,350 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,09,345பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 3,48,24,706 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 12,72,073 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்தோர் விகிதம் 95.20% ஆக குறைந்துள்ளது.
உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக குறைந்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் விகிதம் 3.48% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 1,55,39,81,819 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 73,08,669 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
* கேரள கன்னித்துறவி பாலியல் வன்புணர்வு வழக்கில் பேராயர் பிரான்கோ முல்லக்கல் குற்றமற்றவர் என விடுதலை செய்து கோட்டயம் நீதிமன்றம் தீர்ப்பு
* நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்குவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு.
2022-23ம் நிதி ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2வது அமர்வு மார்ச் 14ல் தொடங்கி ஏப்ரல் 8 வரை நடைபெறும் என அறிவிப்பு.
* பரபரப்பாக காணப்படும் டெல்லி காஸிபூர் மலர்ச்சந்தை பகுதியில் வெடிகுண்டுகளுடன் கூடிய பை கண்டுபிடிப்பு.
பையில் இருந்த வெடிகுண்டுகளை பாதுகாப்பான இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.
* இன்று பிற்பகல் 2.35 மணி அளவில் இந்தோனேசியாவின் ஜாவா தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்(6.6 ரிக்டர்) ஏற்பட்டதால் ஜகார்த்தா உள்ளிட்ட இந்தோனேசியாவின் நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியது.
சுனாமி அச்சுறுத்தல் ஏதுமில்லை என இலங்கை, ஆஸ்திரேலியா நிலநடுக்க ஆய்வு மையங்கள் அறிவிப்பு.
* இந்தியா உடனான 3வது டெஸ்ட்; தென்ஆப்ரிக்கா வெற்றி.
3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது தென்னாப்பிரிக்கா.
* மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு:
24 காளைகளை பிடித்து கார்த்திக் முதலிடம்.
19 காளைகளை பிடித்து முருகன் 2-வது இடம்.
11 காளைகளை பிடித்து பரத் 3 -வது இடம் பிடித்தனர்.
* குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான முப்படை விசாரணை அறிக்கை தாக்கல்:
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம்.
ஹெலிகாப்டர் விபத்திற்கு இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல - முப்படைகளின் விசாரணை குழு.
* சபரிமலையில் மகர விளக்கு பூஜை:
தீப ஒளியில் ஜொலித்த ஐயப்பனை பக்தர்கள் சரண கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.
பொன்னம்பல மேட்டில் ஜோதி ரூபமாக காட்சி அளித்தார் ஐயப்பன்.
தங்க ஆபாரணங்கள் சுவாமி ஐயப்பன் அரசனாக காட்சி அளித்தார்.
திருவாபரணங்கள் அணிந்து காட்சி அளித்த ஐயப்பனை பக்தர்கள் தரிசித்தனர்.
* தமிழகத்தில் கொரோனா விஸ்வரூபம்: ஒரேநாளில் 23,459 பேருக்கு தொற்று; 26 பேர் உயிரிழப்பு.
தமிழகம் முழுவதும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,459.
தமிழகத்தில் 9,026 பேர் நல்வாய்ப்பாக கொரோனாவிலிருந்து நலம் பெற்று இன்று வீடு திரும்பினர்.
கொரோனாவுக்கான சிகிச்சை பலனின்றி இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 26 பேர் உயிரிழப்பு.
No comments:
Post a Comment