அக்னிப்புரட்சி இன்றைய (15.01.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* அமெரிக்காவில் வரும் 19ந்தேதி முதல் இலவச கொரோனா பரிசோதனை: வெள்ளை மாளிகை அறிவிப்பு.
அமெரிக்கா நாட்டில் மொத்தம் 6,59,76,500 பேர் கொரோனாவைரஸ் தொற்றால் பாதிப்பு.
இதுவரை 8,71,333 பேர் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.
* மதுரை மாவட்டம் பாலமேட்டில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மாலை 4 மணி வரை போட்டி நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்பு.
* மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் ‘நோ’ - கேரள நீதிமன்றம்.
மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது.
வணிக வளாகங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க உரிமை இல்லை -கேரள நீதிமன்றம்.
கட்டட விதிகளின்படி, போதிய வாகன நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே கட்டடம் கட்டுவதற்கு அனுமதி உண்டு என்று நீதிபதி கருத்து.
* முதுநிலை நீட் தேர்வு மார்ச் 12-ம் தேதி நடைபெறுவதாக மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
2022-ல் MD, MS படிப்புகளில் சேருவதற்காக தேர்வுக்கு இன்று முதல் பிப்.4-ம் தேதி வரை nbe.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தேர்வு வாரியம்அறிவித்துள்ளது.
முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் மார்ச் 31-ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* உலகில் இந்தியாவின் கொடியை உயர்த்தி வரும் அனைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும், இளைஞர்களுக்கும் வாழ்த்துகள்.
ஸ்டார்ட் அப் கலாச்சாரம் நாட்டின் தொலைதூர பகுதிகளை சென்றடையும் நோக்கில் ஜனவரி 16ஆம் தேதியை தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும்.
இந்தியாவுக்காக புதுமை செய்வோம், இந்தியாவிலிருந்து புதுமை செய்வோம்.
ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை.
* இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை நிறுவப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை, அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் நிறுவப்படும்-பென்னிகுயிக் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் அறிவிப்பு.
லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சி எடுக்கப்பட்டு சிலை நிறுவ சட்டப்படி உரிய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் கட்டி முடித்தவர் பென்னிகுயிக்- முதலமைச்சர்.
* அடுத்த இரண்டு வாரங்கள் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு மக்கள் அளிக்க வேண்டும்.
அப்போது கொரோனா பரவலை அடுத்த 2 வாரங்களில் கட்டுக்குள் கொண்டு வர முடியும் - சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்.
* 2021ம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனனுக்கு வழங்கப்படும்.
2022ம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது மு.மீனாட்சி சுந்தரத்திற்கு வழங்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
விருது பெறும் விருதாளர்களுக்கு ₨1 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்படும் - தமிழ்நாடு அரசு.
* ஆர்டி - பிசிஆர் செய்வோருக்கு மருந்து தொகுப்பு.
ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு முடிவு வருவதற்கு முன்பே தொற்றை கட்டுப்படுத்தும் மருத்துவ தொகுப்பு வழங்கப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவிப்பு.
* பொறி பறந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு:
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தமாக 729 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடம் பெற்று கார் பரிசை தட்டிச் சென்றார்.
கடந்த 2020, 2021ம் ஆண்டில் பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடத்தை பிடித்து பிரபாகரன் கார் வென்றார்.
* தென் பசிபிக்கில் உள்ள டோங்கோ தீவுகளில் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு காரணமாக, அந்த தீவுகளை சுனாமி தாக்க தொடங்கியுள்ளன.
2.5 அடிக்கு மேல் டோங்கா நாட்டில் ஆழிப்பேரலை தாக்கம் உள்ளது.
அமெரிக்காவின் சமோவா தீவிலும் 2 அடிக்கு மேல் ஆழிப்பேரலை தாக்கி வருவதாக தகவல்.
டோங்கா தீவுகள் முழுவதுக்கும் தற்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வண்டலூர் உயிரியல் பூங்கா ஜனவரி 17 முதல் 31ம் தேதி வரை மூடப்படுகிறது
ஊழியர்கள் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் பூங்கா நிர்வாகம் நடவடிக்கை
* டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராத் கோஹ்லி விலகல்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் விராட் கோலி.
எல்லாமும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை போலவே அணித் தலைவர் பதவியும் முடிவுக்கு வந்துள்ளது - விராட் கோலி.
* தமிழகத்தில் மேலும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,989 ஆக உயர்வு.
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 11 பேர் உயிரிழப்பு.
சென்னையில் ஒரே நாளில் 8,978 பேருக்கு கொரோனா தொற்று - 6 பேர் உயிரிழப்பு.
No comments:
Post a Comment