அக்னிப்புரட்சி இன்றைய (17.01.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (17.01.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (17.01.2022) முக்கிய செய்திகள்.

* எத்தனை சிறப்பாக, குதிரை வண்டியை இழுத்தாலும், அதற்கு சாட்டையடி உண்டு; அது போல, நீ எத்தனை சிறந்த மனிதனாக இருந்தாலும் விமர்சனம் உண்டு!

வெற்றி பெற்ற பின், தன்னை
அடக்கி வைத்துக் கொள்பவன்,
இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்!!

கவலைப்படாதே, என்பது சிறந்த ஆறுதல் தான், ஆனால், எது நடந்தாலும் நான் உன்னோடு இருப்பேன், என்பதுதான் மிக சிறந்த ஆறுதல்!!!
🙏 இனிய காலை வணக்கம் 🙏

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* இன்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள்.

எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை.
எம்ஜிஆர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மாலையிட்டு மரியாதை செய்ய உள்ளனர்.

* உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி துவங்கியது:

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்பு.

கொரோனா அச்சுறுத்தலால் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

* சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக எம்.ஜி.ஆர் போற்றப்படுகிறார் - முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் ட்வீட்.

எம்.ஜி.ஆரின் திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்கிறேன் - பிரதமர்.

* கதக் நடன கலைஞர் பிர்ஜு மகாராஜ் (83) டெல்லியில் உடல் நலக் குறைவால் காலமானார்.

கமல் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற 'உன்னை காணாது' பாடலுக்காக தேசிய விருதை பெற்றவர் மகாராஜ்.

* சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் மாற்றம்.

புதிய வானிலை ஆய்வு மைய இயக்குநராக செந்தாமரை கண்ணன் நியமனம்.

வானிலை நிலவரங்களை துல்லியமாக கணித்து சொல்ல முடியாத நிலை சென்னையில் உள்ளது என முதல்வர் ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

* டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பு.

கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைப்பு.

தென்மாநிலங்களில் பாஜக ஆளும் கர்நாடக அரசின் ஊர்திக்கு மட்டும் அனுமதி.

மேற்கு வங்க அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்படாதது குறித்து பிரதமர் மோடிக்கு, மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறது.

* மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50% இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கு.

தனியார் மருத்துவக்கல்லூரி தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை ஜனவரி 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்ச நீதிமன்றம்.

* நாமக்கல் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

உயிரிழந்த மாற்றுத்திறனாளி பிரபாகரனின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கிடவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

காவல்துறை கட்டுப்பாட்டில் மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்பட்டிருக்கிறது.

* ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை:

குடியரசு தின விழாவுக்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசு செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வேலுநாச்சியார், வ.உ.சி., பாரதியாரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது- திமுக எம்.பி கனிமொழி.

வேலுநாச்சியார், வ.உ.சி, பாரதியார் பற்றிய மத்திய அரசின் அறியாமை தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் உள்ளது.

இந்தியா என்பது அனைவருக்குமானது. வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. மத்திய அரசு ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்- கனிமொழி.

* மோசடி எச்சரிக்கை! முன்பின் அறியாதவர்களிடமிருந்து வரும் அழைப்புகளின் அடிப்படையில் கைபேசிச் செயலிகளை ஒருபோதும் பதிவிறக்காதீர்கள். அது பாதுகாப்பைச் சமரசம் செய்து & உங்கள் அட்டையில் மோசடிக்கான வாய்ப்பை அதிகரிக்கும். - ஆர்பிஎல் பேங்க்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages