நீட் தேர்வு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களை டெல்லி அவரது இல்லத்தில் 17.01.2022 இன்று தமிழ்நாடு அனைத்து கட்சி குழு சந்தித்தபோது - ஜி.கே.மணி தலைவர் பா.ம.க
தமிழ்நாடு அனைத்து கட்சி குழு நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் பேசியதற்கு,அவர் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகிய மூவரும் கலந்து பேசி முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி இன்னும் வழங்கப்படவில்லை, உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டதற்கு இம்மாதம் (ஜனவரி) 31-க்குள் வழங்கப்படும் என அறிவித்தார்.
குடியரசு தின ஊர்வலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரதியார், வேலு நாச்சியார், கேரளா நாராயண குரு போன்ற மற்றும் பலர் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததற்கு, இது குறித்து எனக்குத் தெரியவில்லை உடனடியாக விசாரிக்கிறேன் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்..!
No comments:
Post a Comment