21வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்தார் நடால்.
ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டி - போராடி சம்பியன் பட்டத்தை வென்ற நடால்.
21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று உலக சாதனையை படைத்தார் நடால்.
ரோஜர் ஃபெடரர், ஜோகோவிச்சை விட அதிக கிராண்ட் ஸ்லாம் வென்றார் ரஃபேல் நடால்.
ஸ்பெயினின் ரஃபேல் நடால் ரஷ்யாவைச் சேர்ந்த மெட்வதேவ் ஆகிய இருவரும் மோதினர்.
இந்தப் போட்டியில் தொடக்கத்தில் முதல் இரண்டு செட்களையும் மெட்வதேவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்றார்.
ரஃபேல் நடால் மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றை வென்று அசத்தினார்; இதனால் இரண்டு பேரும் தலா 2 செட்களை வென்று இருந்தனர்.
ஐந்தாவது செட்டில் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை பெற்று வந்தனர்.
5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போட்டியை 2-6,6-7,6-4,6-4,7-5 என்ற கணக்கில் ரஃபேல் நடால் வென்று அசத்தினார்.
இதுவரை ரபேல் நடால் வென்றுள்ள கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் பட்டியல்:
பிரெஞ்ச் ஓபன் - 13
அமெரிக்க ஓபன் - 4
விம்பிள்டன் - 2
ஆஸ்திரேலிய ஓபன்- 2
No comments:
Post a Comment