அக்னிப்புரட்சி இன்றைய (30.01.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 புதிய மண்டலங்களை உருவாக்கி மின்வாரியத்துறை உத்தரவு.
* காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஜெய்ஷ்-இ-முகமது கமாண்டர் ஜாஹித்-வானி உட்பட 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
* உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஐந்தாவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி ரூ. 1,157 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு.
முதல் தவணையாக ரூ. 665 கோடி விடுவிக்கப்படுவதற்கான அரசாணை வெளியீடு.
* தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனோ தொற்று உறுதி; இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
* இன்று மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம்:
ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் காந்தி நினைவிடத்தில் மரியாதை.
* இந்தியாவில் 75% பேர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து.
மக்கள், தடுப்பூசி திட்டத்தை வெற்றியடையச் செய்தது பெருமை அளிக்கிறது - பிரதமர் மோடி.
* நகர்ப்புற உள்ளாட்சியில் வெல்வோம் என்ற தலைப்பில் திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்:
மதவெறியை விதைக்கும் பா.ஜ.க.வின் சீரழிவு அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள் -ஸ்டாலின்
அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு பட்ட பாட்டை நினைவுபடுத்துங்கள்.
இராணுவ வீரர்களைத் தேர்வு செய்வது போல் திமுக வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள்.
குற்றப்பின்னணி உள்ளவர்களை திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்த வேண்டாம்.
திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிப்புடன் கூடிய அறிவுரை.
* தேமுதிக தலைமை அலுவலகத்தில் மத்திய சென்னை, வடசென்னை மாவட்ட கிழக்கு செயலாளர்களுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா 4வது நாளாக ஆலோசனை.
* பிப்.1 முதல் கடற்கரைக்கு செல்ல அனுமதி.
பிப்ரவரி 1-ம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி - மாநகராட்சி.
கொரோனா பரவல் காரணமாக கடந்த டிசம்பர் 31-ம் தேதி கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில் தற்போது அனுமதி.
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 38 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 26,624 பேர் குணமடைந்தனர்.
தமிழகத்தில் தற்போது 2,03,926 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்:
கடலூர் மாநகராட்சியின் 43 வார்டுகளுக்கான வேட்பாளர்கள்,
கடலூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களிலுள்ள நகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் என 298 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது அதிமுக.
No comments:
Post a Comment