அக்னிப்புரட்சி இன்றைய (23.01.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (23.01.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (23.01.2022) முக்கிய செய்திகள்.

* நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளில் நன்றியுடன் மரியாதை செலுத்துகிறது இந்தியா.

சுபாஷ் சந்திரபோஸின் லட்சியமும் தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கும் - குடியரசு தலைவர்  - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

* கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும்.

கொரோனா தொற்று குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

* அரசு கலைக் கல்லூரி உதவிப்பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் 9,494 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளது.

* கடலூர் மாவட்டம் நெய்வேலியில் புதிதாக துவங்க உள்ள என்எல்சி யின் மூன்றாம் சுரங்கத்திற்கான இழப்பீடு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும், நிலம் வழங்கியோருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்- தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி அறிக்கை.

* புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளதாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரில், உறுவையாறு பகுதியைச் சேர்ந்த பிரவின் குமார் என்பவரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

* சமூக பரவலாக மாறிய ஓமிக்ரான்-மத்திய அரசு.

ஓமிக்ரான் கொரோனா இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிட்டதாக மத்திய அரசின் INSACOG அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது.

ஓமிக்ரானின் புதிய BA.2 வேரியண்டும் இந்தியாவில் கணிசமாக உள்ளது; இந்த வகையை டெஸ்ட்டிங்கில் கண்டறிவதில் சற்று சிரமம் உள்ளது.

வரும் காலத்தில் இந்தியாவில் சமூக பரவல் காரணமாக ஓமிக்ரான் பரவுமே தவிர வெளிநாட்டுப் பயணிகளால் பரவாது.

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிய வரும் நிலையில், இது தொடர்பாகத் தொடர்ந்து கண்காணிக்க INSACOG புதிய செயல்முறையை வடிவமைத்துள்ளது.

கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, வேக்சின்களை முறையாக எடுத்துக் கொள்வது ஆகியவை மட்டுமே உருமாறும் கொரோனா வகைகளுக்கு எதிராக நம்மைக் காக்கும்.

* தேர்தல் தொடர்பான தகவல் தொழில்நுட்ப பணிகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹுவுக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

* தொல்லியல் அறிஞர் இரா.நாகசாமி காலமானார்!

* டெல்லி, இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மின் ஒளி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

28 அடி உயரமும், 6 அடி அகலமும் கொண்ட நேதாஜியின் ஹாலோகிராம் சிலை திறப்பு.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளையொட்டி சிலை திறப்பு.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

கடந்த 24 மணி நேரத்தில் 24,283 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 40 பேர் உயிரிழப்பு.

* தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி.

இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி.

3-0 என்ற கணக்கில் அனைத்து போட்டிகளிலும் வென்று தொடரையும் வென்றது தென்னாப்பிரிக்கா.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages