அக்னிப்புரட்சி இன்றைய (24.01.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* வேதாரண்யம் அருகே கோடிக்கரைக்கு கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த புஷ்பவனத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.
மீனவர்களை தாக்கி 200 கிலோ வலை, ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட ரூ 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை.
* எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை வெளியிடுகிறார்.
* தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ₹25 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சருக்கு வலியுறுத்தல்.
* திருப்பூர் இடுவாய் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ஜனவரி 17ம் தேதி மாம்பாறை முனீஸ்வரன் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் ஆற்றில் குளித்தபோது உயிரிழந்தனர்.
* அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
ஆன்லைக் செமஸ்டர் தேர்வை 20,00,875 மாணவர்கள் எழுத உள்ளனர்.
இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
* சென்னை வியாசர்பாடியில் பிரியாணி சாப்பிட்டு தூங்கிய குறும்பட இயக்குநர் ரஞ்சித் தலைச்சுற்றல் ஏற்பட்டு மயக்கமடைந்து உயிரிழந்தார்.
ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனை செய்தபிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் - காவல்துறை.
* ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு காவல் ஆணையம் அமைக்க விதிகள் திருத்தப்பட்டதா?
ஜனவரி 31க்குள் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
* ஆன்லைன் தேர்வு முடிந்த பின் மாணவர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அனுப்ப வேண்டும். - உயர்கல்வி துறை
நேரடியாக எழுதப்பட்ட விடைத்தாள்களையும் கல்லூரிகளுக்கு அஞ்சல் மற்றும் கூரியர் வாயிலாக அனுப்ப வேண்டும்-உயர்கல்வித்துறை.
மாணவர்கள் வாட்ஸ் அப், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்கள் மற்றும் அஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்- உயர்கல்வித்துறை.
* தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்துத் துறைகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து, தீர்க்க உரிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின்கீழ் நிலம் கையகப்படுத்துவதற்கான நில மதிப்பீட்டை அங்கீகரிக்கும் முறையை முறைப்படுத்தப்பட வேண்டும் - முதல்வர்
* அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு; வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் 1 வரை தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.
இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து, மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என ஏற்கனவே உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
* கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோன:
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி.
வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் ஆட்சியர் பாலசுப்பிரமணியம்.
* ஆன்லைன் செமஸ்டர் தேர்வு - வழிகாட்டுதல்களை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்:
புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் Take home முறையில் செமஸ்டர் தேர்வு.
ஒரு மணி நேர தேர்வுக்கு பதில் 3 மணி நேர தேர்வாக நடைபெறும்.
விடைத்தாளில் பதிவு எண், பெயர், பாட குறியீடு, பாட பெயர் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு பக்கத்திலும் மேலே குறிப்பிட வேண்டும்.
வினாத்தாள் கூகுள் க்ளாஸ்ரூம் அல்லது மின்னஞ்சல் வாயிலாக மாணவர்களுக்கு அனுப்பப்படும்.
அரியர் மாணவர்கள், தாங்கள் இறுதியாக பயின்ற கல்லூரிகளைத் தொடர்புகொண்டு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.
* கிராமசபை கூட்டங்கள் ரத்து - தமிழக அரசு.
தமிழகத்தில் குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து.
கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு நடவடிக்கை.
* சட்டசபை தேர்தல்களே நடத்தப்படும் போது உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தக் கூடாது- நீதிபதி கேள்வி.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா குறைந்ததாக தகவல்கள் வருகின்றன- நீதிபதி.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்தி வைப்பது குறித்து நாளை மீண்டும் விசாரணை.
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 24,639 பேர் குணமடைந்தனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 46 பேர் உயிரிழப்பு.
* மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு:
தமிழகத்தில் 2021-22ம் ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.
நாமக்கல் - கீதாஞ்சலி, பிரவீன், திருவள்ளூர் - பிரசன் ஜித்தன் 710 மதிப்பெண்களுடன் தரவரிசையில் முதலிடம்.
No comments:
Post a Comment