அக்னிப்புரட்சி இன்றைய (25.01.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* சென்னையில் 20,453 குடியிருப்புகள் தரமற்றவை - அண்ணா பல்கலை. தொழில்நுட்ப வல்லுநர் குழு.
20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும்- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் அறிக்கையைத் தாக்கல் செய்தது தொழில்நுட்ப வல்லுநர் குழு.
திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்த பின், மாநிலம் முழுவதும் உள்ள 22,271 குடியிருப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
22,271 குடியிருப்புகளில் 20,453 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால், அவற்றை உடனடியாக இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள வேண்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரை.
* ஆர்டிபிசிஆர் பரிசோதனையிலும் கண்டுபிடிக்க முடியாத பிஏ.2.
வரும் நாட்களில் 3வது அலை மிக தீவிரமடையும்-மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை.
ஒமிக்ரான் சமூக பரவல் கட்டத்தை அடைந்துள்ளதால், வரும் நாட்களில் இந்தியாவில் 3வது அலை மிக தீவிரமடையும்.
இந்தியாவில் கொரோனா தொற்று 3வது அலையின் தீவிரம் பிப்ரவரி 15ம் தேதிக்கு பிறகு படிப்படியாக குறையும்.
மார்ச் அல்லது ஏப்ரல் மாத இறுதியில் தொற்றின் தீவிரம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மேலும் குறைய வாய்ப்பு.
3 நாட்களுக்கு பின் உண்மை நிலவரம் தெரியவரும்.
தொற்று குறைந்தால் ஊரடங்குக்கு அவசியம் இருக்காது, தொற்று உயர்ந்தால் ஊரடங்கு அவசியம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
* மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று:
தமிழ்மொழி காக்க இன்னுயிர் ஈந்த சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி உள்ளிட்ட பலரின் தியாகங்களை போற்றும் வகையிலான வீரவணக்க நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
* 3 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,55,874 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு; இது நேற்றை விட 50,190 குறைவு.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 614 பேர் உயிரிழப்பு, 2,67,753 பேர் குணமடைந்தனர்.
தற்போது 22,36,842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* 2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அரசாணை.
164%-ல் இருந்து 196%-ஆக அகவிலைப்படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை.
திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்வு.
* முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்காத ஓட்டுநர், நடத்துனர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்-அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உடன் ஒருவருக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளவும், உரிய இருக்கை வழங்கவும் உத்தரவு.
* தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி.
மும்மொழிக் கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் என்ற கேள்விக்கு தமிழக அரசு பதில்.
இருமொழிக் கொள்கையை பின்பற்றுவது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்.
* குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திகளுக்கு அனுமதி வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி.
அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து தமிழக அரசு தான் வழக்கு தொடர வேண்டும் - நீதிபதிகள்.
எழுத்துப்பூர்வமான உத்தரவு இல்லாததால் வழக்கை ஏற்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்.
* சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக உண்ணாவிரத போராட்டம்.
தஞ்சாவூர் பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம். போலீஸ் இந்த போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத நிலையில் பாஜக போராட்டம்.
* தமிழ்நாடு ஆளில்லா வான்வெளி வாகன கழகம் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சூரிய சக்தி மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், சூரிய மின்சக்தி மையம் அமைக்கும் ஆய்வுகளில் பல்கலைக்கழகங்கள் ஈடுபட வேண்டும்.
சூரியன் என்று சொன்னாலே அது சக்தி தான்; சூரியனையும் சக்தியையும் பிரிக்க முடியாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி நிறுவனங்களாக மாற வேண்டும்.
கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, புதுமையான படிப்புகள் கற்க மாணவர்களுக்கு உயர்கல்வித் துறை ஆலோசனை வழங்க வேண்டும், தமிழகத்தில்தான் ஆற்றல்மிக்க சக்தியான இளைஞர்கள் அதிகம் உள்ளனர்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் மட்டும் போதாது; உயர்கல்வியில், ஆராய்ச்சியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் பெருமளவிற்கு உழைக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* தமிழகத்தை சேர்ந்த ஏ.டி.ஜி.பி வெங்கடராமன் மற்றும் ஆய்வாளர் சிவனருள் ஆகிய 2 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
* இலவசத்துக்கு எதிர்ப்பு - தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்.
தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களை அறிவிக்க தடைகோரிய வழக்கில் மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களை அறிவிக்க தடைகோரி பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய வழக்கு தொடர்ந்துள்ளார்.
* தஞ்சை வடக்கு வீதியில் எம்.ஜி.ஆர் சிலை சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
எம்ஜிஆர் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் நினைப்போர் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய விஷமச் செயல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன்- எடப்பாடி பழனிசாமி.
* பள்ளிகளில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது?- கமல்ஹாசன் கேள்வி.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் குறித்து நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும்.
குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்- கமல் அறிக்கை.
* சிறப்பு தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்.
மதுக்கடைகளை மூடும் அதிகாரத்தை அந்தந்த பகுதி மக்களுக்கு வழங்க வேண்டும் - பாமக நிறுவனர் இராமதாஸ் அய்யா.
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த இது நல்ல தொடக்கமாக இருக்கும்.
* குடியரசு தினவிழா - பொதுமக்கள் வரவேண்டாம்:
சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவை பார்க்க பொதுமக்கள் நேரில் வரவேண்டாம் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்.
* மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை-போக்குவரத்துத்துறை.
மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை.
தரமற்ற உணவு வழங்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அரசு போக்குவரத்துத்துறை நடவடிக்கை.
புதிய தரமான உணவகத்துக்கு அனுமதி வழங்க ஏற்பாடு.
* தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கையின் முடிவை தடுத்து நிறுத்தக் கோரிக்கை- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கையின் முடிவை தடுத்து நிறுத்தக் கோரிக்கை
தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விட இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு முதலமைச்சர் கண்டனம்.
தமிழக மீனவர்களின் 105 மீன்பிடி விசைப்படகுகளை பிப்.7 முதல் பிப்.11 வரை ஏலம் விட இலங்கை அரசு முயற்சி - முதலமைச்சர்.
இலங்கை அரசின் நடவடிக்கை கவலையையும், வேதனையையும் அளிக்கிறது - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்.
இந்திய-இலங்கை கூட்டுப் பணிக்குழு பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில், படகுகள் ஏல அறிவிப்பு துரதிஷ்டவசமானது - முதலமைச்சர்
இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்ட மீட்க இயலாத 125 படகுகளை அப்புறப்படுத்த செயல்முறை தேவை - முதலமைச்சர்.
* நடிகர் விஜய் குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் தெரிவித்த எதிர்மறை கருத்துகள் நீக்கம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்குக் கோரிய வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்தை நீக்க வேண்டும் என நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு
* தேர்தல் நடத்த தடையில்லை.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
கொரோனா பரவல் நிலை சீராகும் வரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
இது தொடர்பாக மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் - நீதிபதிகள்.
* இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 55 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம் தமிழ்நாடு மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.
அவர்களை தற்போது நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு.
* புதுக்கோட்டை நார்த்தாமலையில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்படுகிறது -தமிழக அரசு.
துப்பாக்கி சுடும் தளத்தை மூடுவதாக ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்.
டிச. 30ஆம் தேதி பயிற்சி மையத்திலிருந்து வெளியேறிய குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழந்திருந்த நிலையில் அறிவிப்பு.
* நாளை குடியரசு திருநாளன்று ஒலிம்பிக் பதக்க வீரர் நீரஜ் சோப்ராவுக்கு "பரம் விசிஷ்ட் சேவா பதக்கம்" வழங்கப்படும் என நடுவண் அரசு அறிவிப்பு
* சென்னை : பிராட்வே பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் கே.என் நேரு, சேகர் பாபு, எம்.பி., தயாநிதி மாறன் ஆகியோர் ஆய்வு
பிராட்வே பேருந்து நிலையத்தை நவீனமயமாக்குவது குறித்து ஆய்வு
* பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து ஐ.சி.யு.வில் சிகிச்சை - மருத்துவமனை நிர்வாகம்
* சென்னையில் குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு நாளை, ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும் - தென்னக ரயில்வே
* மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 366.64 புள்ளிகள் உயர்ந்து 57,858.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு
தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 128.85 புள்ளிகள் உயர்ந்து 17,277.95 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு
* திருவள்ளூர் : பிரபல ரவுடி படப்பை குணா, பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் அடைப்பு
படப்பை குணாவை ஜன.31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு
* மாற்றுத்திறனாளிக்கு வீடுதோறும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும் - உச்ச நீதிமன்றம்
மத்திய சுகாதார அமைச்சகத்திடம் 3 வாரங்களில் ஆலோசனைகளை அளிக்க மாற்றுத்திறனாளி துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
* புதுக்கோட்டை, நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூடக்கோரிய வழக்கு முடித்து வைப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
கடந்த டிச.30ஆம் தேதியே துப்பாக்கி சுடும் பயிற்சித்தளம் மூடப்பட்டதால், இனி பயன்படுத்தப்பட மாட்டாது - தமிழக அரசு வாதம்
* தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 25,221 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 48 பேர் உயிரிழப்பு.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 6,241 பேருக்கும், கோவையில் 3,763 பேருக்கும், செங்கல்பட்டில் 1,737 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை.
* மறைந்த முப்படைகளின் தலைமை தளபதிக்கு பத்ம விருது.
மறைந்த தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூசன் விருது-மத்திய அரசு.
2022ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷன் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை அறிவித்தது மத்திய அரசு.
பழம்பெரும் நடிகை சவுக்கார் ஜானகி உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிப்பு.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, சீரம் நிறுவன மேலாண் இயக்குநர் சைரஸ் பூனாவாலாவுக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாடகர் சோனு நிகம் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு.
* இரயில் பாதையில் போராட்டம் நடத்தினால் வாழ்நாள் முழுவதும் இரயில்வே துறை பணிகளில் சேர தடை- இரயில்வே அமைச்சகம்.
இரயில்வே வேலையில் சேர விரும்புவோர், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், ரயில்வே வேலையை பெறுவதற்கு நிரந்தர தடையை சந்திக்க நேரிடும்- இரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை.
* எனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்- மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா அறிவிப்பு.
No comments:
Post a Comment