அக்னிப்புரட்சி இன்றைய (26.01.222) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (26.01.222) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (26.01.222) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* குடியரசு தினம்: வீரமங்கை வேலுநாச்சியார், வா உ சி, தந்தை பெரியார், இரட்டைமலை சீனிவாசன், முத்துராமலிங்க தேவர் ஆகியோர்  உருவங்களுடன் ஊர்தி

* மருத்துவம் சாா்ந்த படிப்புகளுக்கு இன்று காலை முதல் விண்ணப்பிக்கலாம்

tnhealth.tngov.in மற்றும் tnmedicalselection.org என்ற இணையதளத்தில்  10 மணி  முதல் விண்ணப்பிக்கலாம்.
4 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

* நாட்டின் 73வது குடியரசு தினம்: சென்னை கடற்கரை சாலையில் முவர்ண கொடியை ஏற்றிவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தேசியக் கொடியேற்றினார் ஆர்.என்.ரவி.

குடியரசு தினவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு.
ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

* பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை!

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரைத்துள்ளோம்.
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

* டெல்லியில் தேசிய கொடி ஏற்றி வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

73வது குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றிவைத்தார்.

* தமிழ் மண்ணில் பெண் கல்வியில் எம்பள்ளியின் பங்களிப்பு முக்கியமானது.

மத மாற்றம் தொடர்பாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை புறந்தள்ள வேண்டும்.

திருக்காட்டுப்பள்ளி பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக பள்ளியின் நிர்வாக சபையான தூய இதய மரியன்னை சபை அறிக்கை.

* குடியரசுதின விழாவையொட்டி சென்னை ரிசர்வ்வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்ட போது வங்கி அலுவலர்கள் எழுந்து நிற்காமல் அலட்சியம்

கட்டாயம் நிற்க வேண்டியதில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தமிழ் தெரிந்த அலுவலர்களே வாதம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது

* தமிழகத்தில் மேலும் 5 ஓட்டல்களில் அரசு பேருந்துகள் நிற்க தடை:

விக்கிரவாண்டி அருகே அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ ஆகிய 5 ஓட்டல்களில் அரசு பேருந்துகளை உணவுக்காக நிறுத்த தடை.

5 உணவகங்களிலும் சுகாதாரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நடவடிக்கை.

* சென்னை தீவுத்திடலில் இருந்து தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்தப்பட உள்ள தமிழக அரசின் அலங்கார ஊர்திகள்.

டெல்லி குடியரசு தின விழாவில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

* தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகள் அலங்கார ஊர்திகளில் இடம்பெற்றுள்ளன.

பெரியார், ராஜாஜி, முத்துராமலிங்க தேவர், காமராஜர், ரெட்டைமலை சீனிவாசன், பாரதியார், வ.உ.சிதம்பரனார், வேலுநாச்சியார் ஆகியோரின் சிலைகள் இடம்பெற்றுள்ளன.

மருது சகோதரர்களை தூக்கிலிடுவது போன்ற காட்சி அலங்கார ஊர்தியில் இடம்பெற்றுள்ளது.

* மீனவர்கள் விடுதலை மகிழ்ச்சியளிக்கிறது: படகுகளும் மீட்கப்பட வேண்டும் - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

இலங்கை சிறைகளில் கடந்த திசம்பர் 18-ஆம் தேதி முதல் வாடிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 56 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நன்றியும், பாராட்டுகளும்.

மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் படகுகளும், ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் விடுவிக்கப்படவில்லை.

இலங்கை அரசிடம் பேசி அந்நாட்டு அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மத்திய அரசு மீட்க வேண்டும்.

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுக்களை மீண்டும் தொடங்கவும், இந்தியா - இலங்கை ஐந்தாவது கூட்டு பணிக்குழு கூட்டத்தை விரைந்து நடத்தவும் மத்திய அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி இராமதாஸ்.

* 2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் அறிவிப்பு:

பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத்,

மகாகவி பாரதியார் விருது - பாரதி கிருஷ்ணகுமார்,

பாவேந்தர் பாரதிதாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன்,

சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர்,

சிங்காரவேலர் விருது - கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்,

தமிழ்த்தாய் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது - முனைவர் இரா. சஞ்சீவிராயர்.

சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை திங்களிதழுக்கும்,

தேவநேயப்பாவாணர் விருது - முனைவர் கு. அரசேந்திரன்,

உமறுப்புலவர் விருது - நா. மம்மது,

கி.ஆ.பெ. விருது முனைவர் - ம. இராசேந்திரன்,

கம்பர் விருது - பாரதி பாஸ்கர்,

ஜி.யு.போப் விருது - ஏ.எஸ். பன்னீர்செல்வம்,

மறைமலையடிகள் விருது - சுகி.சிவம்,

இளங்கோவடிகள் விருது - நெல்லைக் கண்ணன்,

அயோத்திதாசப் பண்டிதர் விருது - ஞான
அலாய்சியஸ்.

இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.1,00,000/- லிருந்து ரூ.2,00,000/- உயர்த்தியும் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவர்.

* தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்.

இசைத்தட்டுகளை கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து தமிழ்த்தாய் வாழ்த்தை வாய்ப்பாட்டாக பாட வேண்டும் - தமிழக அரசு.

* நாடு முழுவதும் சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

இந்தக் கூட்டமைப்பு, இந்திய சமூகத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் உள்ளடக்கியதாக இருக்கும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* தமிழக குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் வடதமிழ்நாட்டு விடுதலை வீரர்களை புறக்கணிப்பதா?
- பாமக நிறுவனர் இராமதாசு அய்யா.

இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

நாகப்ப படையாட்சி காந்தியடிகளுடன் இணைந்து போராடி உயிர்நீத்தவர், கடலூர் அஞ்சலையம்மாளின் வீரமும், தீரமும் காந்தியடிகளை வியக்க வைத்தவை.

ஆதிகேசவ நாயக்கர் காந்தியிடம் சர்தார் பட்டம் பெற்றவர். ம.பொ.சி சிறந்த விடுதலை வீரர்.  இவர்களின் தேசப்பற்றும், தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல.

டில்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா?

தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா? தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் - பாமக நிறுவனர் இராமதாசு அய்யா.

* பீகார் மாநிலத்தின் கயாவில் நின்று கொண்டிருந்த ரயிலுக்கு என்டிபிசி தேர்வர்கள் தீ வைத்தனர்.

ரயில்வே தேர்வு வாரியத்தின் என்டிபிசி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வுகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முறைகேடு புகார் குறித்து விசாரிக்க அரசு தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக இரயில்வே அமைச்சகம் இன்று தெரிவித்திருந்தது.

* 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியீடு.

கரூர், ஈரோடு, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.424 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு.

ஈரோடு, கடலூர், கரூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருமங்கலம், ராணிப்பேட்டை, திண்டிவனம், திருவண்ணாமலை, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாமக்கல், சங்கரன்கோவில் ஆகிய 13 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கான நிர்வாக அனுமதியை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

* திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜன.27) காணொலி வாயிலாக நடைபெறும்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 27,507 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 47 பேர் உயிரிழப்பு.

* மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய ஒருநாள், டி20 அணி அறிவிப்பு.

ரோகித் தலைமையிலான ஒருநாள் அணியில் கோலி,ராகுல்,தவான்,ரிஷப் பண்ட் தேர்வு.

ரவி பிஸ்னாய், ஆவேஷ் கான், வாசிங்டன் சுந்தர், குல்தீப், சாஹல் ஒருநாள் அணியில் தேர்வு.

அஸ்வின், பும்ரா, ஷமி ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages