திருப்பாவை மார்கழி 29ம் நாள் பாடல் விளக்கம். - Agnipuratchi

திருப்பாவை மார்கழி 29ம் நாள் பாடல் விளக்கம்.

Share This

திருப்பாவை மார்கழி 29ம் நாள்
பாடல் விளக்கம்.

விடியற்காலையிலேயே நாங்கள் எழுந்து வந்து உன் அரண்மனையில் உன்னைச் சேவித்து பொற்றாமரை போன்ற உனது திருவடிகளைப் போற்றி, நாங்கள் கோரும் வரம் இதுதான் கண்ணா.

மாடு மேய்த்து உண்ணும் எங்களது ஆயர்குலத்தில் கோபாலனாக அவதரித்த உனக்கு நாங்கள் செய்யும் சிறுசிறு தொண்டுகளை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாங்கள் உன்னுடைய அருளை இன்றைக்கு மட்டும் பெற்றுக்கொள்ள வரவில்லை.
கோவிந்தா, எந்த காலத்திலும், ஏழேழு பிறவிகளிலும் நாங்கள் உன் அடியார்களாக பிறப்பு எடுத்து உன்னோடு இணைந்து வாழும் பேறு பெற்று உன் அருளைப்பெற வேண்டுகிறோம்.

எங்களது உள்ளத்தில் எழும் மற்ற சிற்றாசைகளை நீ எங்களிடத்திலிருந்து நீக்கி, அதைப் பக்தியாக மாற்றி அருள் செய்ய வேண்டுகிறோம். இதுவே எங்களுடைய கோரிக்கை ஆகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages