திருப்பாவை மார்கழி 28 ம் நாள்
பாடல் விளக்கம்.
கறவை மாடுகளை மேய்ச்சலுக்காக காடுகளுக்கு ஓட்டிச்சென்று அங்கேயே உணவு உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டவர்கள் நாங்கள்.,
எங்களுக்கு எவ்விதமான ஞானமும் இல்லை. ஆனால் பரம்பொருளான உன் அருளைப்பெறும் மகத்தான புண்ணியம் எங்களுக்கு உண்டு.,
எந்தக்குறையும் இன்றி நிறைவின் வடிவான கோவிந்தனே.,
மாடு மேய்க்கும் எங்களது ஆயர்குலத்தில் உன்னைப்பிள்ளையாகப்பெற்று, எங்களில் ஒருவனாகக்கலந்து பழகும் பெரும் பேறு கொண்டோம்.,
எங்களுக்கு அறிவில்லா விடில் என்ன? உன்னிடம் நிறையவே நிறைந்து இருக்கிறது. அது எங்களைக் காத்தருளும்.,
உன் பெருமை அறியாது ஒருமை பெயர்களால் உன்னை அழைத்தாலும், அவற்றை எல்லாம் பொறுத்து அருளி எங்களுக்கு நீ நோன்பின் பலனைத்தரவேண்டும்.
No comments:
Post a Comment