அக்னிப்புரட்சி இன்றைய (29.01.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (29.01.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (29.01.2022) முக்கிய செய்திகள்.

*சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* கொக்கென்று நினைத்தாயோ... கொங்கணவா?"

தமிழ் மரபில் சித்தர்கள் ஞானிகளாகவும் முற்போக்குச் சிந்தனையாளர்களாகவும் கொண்டாடப்படுபவர்கள். பதினெண் சித்தர்களில் ஒருவரான கொங்கண சித்தர் வரலாற்றில் ஒரு சம்பவம். கொங்கண சித்தரின் வாழ்க்கையோடு தொடர்புடையது என்பதைவிட பாரத தேசத்தின் பெண்களோடு தொடர்புடையது. ஞானம், மன வலிமை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் ஆகியவை தமிழ்ப் பெண்களின் அடையாளம்.

கானகத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து யோகப் பயிற்சிகளில் கொங்கண சித்தர் ஈடுபட்டபோது மரத்தில் அமர்ந்திருந்த கொக்கு ஒன்று எச்சமிட்டது. அது 
கொங்கண சித்தர் மீது படவே, அவர் கோபத்தில் மரத்தில் இருந்த கொக்கை முறைத்துப் பார்க்க அந்தப் பார்வையின் வெம்மை தாளாமல் கொக்கு பொசுங்கிச் சாம்பலானது.

வேறொரு சமயம் சித்தர் கிராமத்தில் பிச்சைக்காக வந்தபோது ஒரு வீட்டில் பிச்சை வேண்டி நின்றார். அந்த வீட்டுப் பெண்மணி உணவு எடுத்து வருவதற்குச் சற்று காலதாமதமானதாகக் கருதி அந்தப் பெண்ணை கோபத்தோடு பார்க்க, அப்போது அந்தப் பெண், கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என்று கொங்கண சித்தரை நேருக்கு நேர் நோக்கி வினா எழுப்புகிறாள்.

சித்தர்கள் யோக பயிற்சிகளில் பெற்ற ஆற்றலை இல்லத்தில்  இல்லறக் கடமைகளை ஆற்றிக் கொண்டிருந்த ஒரு பெண்ணும் பெற்றிருக்கிறாளே!
எங்கோ கானகத்தில் நிகழ்ந்த சம்பவத்தை அறிந்திருக்கிறாளே என்று கொங்கணர் அதிர்ச்சியுற்றதோடு அந்தப்பெண்ணை வணங்கினார். பெண்ணின் ஆத்ம சக்தி என்பது தவ வலிமைக்கு ஈடானது என்று சொல்வதற்காகவே தமிழகத்தில் நூற்றாண்டுகளாக இந்தச் சம்பவம் கூறப்பட்டு வருகிறது.

* அரியலூர் மாணவி விவகாரத்தில் மதவாத சக்திகள் அவதூறு பரப்பி வருகின்றனர்.

பெரியார் பிறந்த மண்ணில் மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்-விசிக தலைவர் திருமாவளவன்.

* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஆட்டோ சின்னம் மறுப்பு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்டோ சின்னத்தை ஒதுக்குமாறு கேட்ட விஜய் மக்கள் இயக்கம்.

ஆட்டோ சின்னம் ஒதுக்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே சின்னம் ஒதுக்க முடியும் என்பதால் மறுப்பு.

* திமுக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்.
திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ. கே.பி. சங்கர் மீது போலீசில் புகார்.

உதவி பொறியாளரை தாக்கியது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் புகார்.

* பள்ளிகளை திறக்க விஜயகாந்த் எதிர்ப்பு:

நியோகோவ் எனும் புதுவகை வைரஸ் பரவும் நிலையில் பள்ளிகளை திறப்பதா?

பள்ளிகள் திறப்பில் மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு நல்ல முடிவெடுக்க வேண்டும் - விஜயகாந்த்.

* அதிமுக அலுவலகத்தில் அதிமுக பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

* தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 33 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், 20 மாவட்ட வருவாய் அலுவலர்களும் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்
- தமிழ்நாடு அரசு

* மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

* 8 ம் வகுப்பு தனித்தேர்வு எழுதியவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 1ம் தேதி பகல் 2 மணிக்கு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்- அரசுத் தேர்வுகள் இயக்குநர்.

* 23 சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் உடனுக்குடன் பெறலாம்:

பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பெற்றுகொள்ள அரசாணை.

மதிப்பெண் சான்றிதழ், இணைக் கல்வி சான்றிதழ் உட்பட 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மூலம் விண்ணபித்து பெறலாம் - பள்ளிக் கல்வித்துறை.

* பெரியண்ணன் மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால் "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா" எனும் பழமொழியை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்: ஆளுநர் ரவிக்கு திமுக நாளேடான முரசொலி கட்டுரை.

மேதகு ரவி ஆளுநர் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு மற்ற இந்திய மாநிலங்களை போன்றது அல்ல. இது தமிழ்நாடு - முரசொலி.

பல பிரச்சினைகளில் எதிரும் புதிருமாக இருந்தாலும், தமிழகத்தில் சில பிரச்சினைகளில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றிணைந்து நிற்கும்.

அதிலே ஒன்று இருமொழிக் கொள்கை, மற்றொன்று நீட் வேண்டாம் என்பது - ஆளுநர் ஆர்.என் ரவிக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடும் எச்சரிக்கை.

* காவல்துறையில் 17 உயரதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு.

புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையரகங்களுக்கு 8 துணை ஆணையர்கள் நியமனம்.

போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு, கிரைம் பிரிவு, நிர்வாகம் என தலா 4 துணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* 2022 ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி.

இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை காலின்சை 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் ஆஷ்லி பார்ட்டி.

44 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய வீராங்கனை ஒருவரே ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றுள்ளார்.
ஆஷ்லி பார்ட்டி வெல்லும் 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது.

* மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை.

நேரடி அல்லது ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை.

எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவெடுக்கலாம்.

பிப்ரவரி 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.

* தமிழ்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 27,885 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 46 பேர் உயிரிழப்பு.

* கர்நாடக மாநிலத்தில் வரும் ஜன. 31 முதல் இரவு ஊரடங்கு நீக்கம்.

1 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளைத் தொடங்க பள்ளிகளுக்கு அனுமதி.

* மெட்ரோ உள்ளிட்ட பொது போக்குவரத்துகளில் பொதுமக்கள் அமர்ந்து கொண்டு மட்டுமே பயணிக்க அனுமதி.

திரையரங்குகள், ஜிம்கள் மற்றும் நீச்சல் குளங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி.

தனியார் மருத்துவமனைகளில் 25% இடங்களை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க உத்தரவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages