அக்னிப்புரட்சி இன்றைய 01.02.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்:
2022-23 நிதியாண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்.
2வது முறையாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை 'UnionBudget' என்ற செயலி மூலம் அறிந்துகொள்ள ஏற்பாடு.
* 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.
கச்சத்தீவு அருகே 2 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நாகையை சேர்ந்த மீனவர்கள் கைது.
* தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.
பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுகின்றன.
* தமிழகத்தில் இன்று 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழக அரசின் இந்த முடிவு பெற்றோருக்கு மகிழ்ச்சியோ, மனநிறைவோ அளிக்கவில்லை. - மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.
மாறாக அச்சத்தையும், பதற்றத்தையும் தான் ஏற்படுத்தியிருக்கிறது.
பள்ளிகளைத் திறந்து தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது.
பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளை நேரடியாக நடத்துவதில் நியாயம் உள்ளது.
எனவே, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை கொரோனா நிலைமை சீரடையும் வரை ஒத்திவைக்க வேண்டும்- மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.
* புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
* மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 582.85 புள்ளிகள் உயர்ந்து 58,597.02 புள்ளிகளில் வர்த்தகம்
தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 156.20 புள்ளிகள் உயர்ந்து 17,496.05 புள்ளிகளில் வர்த்தகம்
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₨32 அதிகரித்து ₨36,128-க்கு விற்பனை
ஒரு கிராம் தங்கம் ₨4,516-க்கு விற்பனை
* 2022-2023ஆம் ஆண்டிற்கான மத்திய 💰பட்ஜெட் - மத்திய பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
🔻நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் குழு இந்த ஒப்புதல் வழங்கியுள்ளது
* விமான போக்குவரத்து இனி விலை உயர்ந்த விஷயமாக மாறுகிறது
Aviation tribune Fuel என்ற விமான எஞ்சின் எரிபொருளின் விலை 8.5% உயர்வு
இது வரை இல்லாத வரலாறு காணாத உயர்வாக இது பார்க்கப்படுகிறது
இந்த விலை உயர்வு நேரடியாக விமான பயண கட்டணத்தில் எதிரொலிக்கும்
* ஊதியதாரர்கள், நடுத்தர, ஏழை எளியோர், விவசாயிகள், இளைஞர்கள், சிறுகுறு தொழில் முனைவோருக்கு பட்ஜெட்டில் ஒன்றுமில்லை; மோடி அரசின் பட்ஜெட் ஜீரோ பட்ஜெட் - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி.
* 17 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.
அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளதாக அதிமுகவுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்.
நீதிமன்றத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து வழக்கை வாபஸ் பெற்றது அதிமுக.
* நாட்டிற்கு வரும் ஒரு ரூபாய் எந்தெந்த வழிகளில் செலவழிக்கப்படுகிறது
20% வட்டி கட்டவும்
17% மாநிலங்களுக்கான வரி பகிர்வு
15% மத்திய திட்டங்களுக்கு
10% நிதிக்குழு விற்கும்
8% பாதுகாப்புத் துறைக்கும்
8% மானியங்களுக்கும்
4% ஓய்வூதியர்களுக்கும் செல்கிறது
* முதலாளிகளுக்கான பட்ஜெட்
வரி சலுகையை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
* தமிழகத்தில் மேலும் 16,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
நேற்றைய பாதிப்பு 19,280ஆக இருந்த நிலையில் 16,096 ஆக குறைவு.
கொரோனாவுக்கு மேலும் 35 பேர் பலி.
No comments:
Post a Comment