2022-2023ஆம் ஆண்டிற்கான மத்திய 💰பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது; இது எல்லா வளரும் நாடுகளை விடவும் அதிகம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
🔻நிதி உள்ளடக்கம் மற்றும் நேரடி பணப் பயன் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலமாக நாட்டின் ஏழை மக்களுக்கு சேவை புரிய அரசு எண்ணம் கொண்டுள்ளது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
🔻ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
🔻தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்தியதால் பொருளாதார வளர்ச்சி சாத்தியமானது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
🔻உலகின் பெரிய நாடுகளில் இந்தியாவே மிக வேகமாக பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
🔻தற்சார்பு இந்தியா திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
🔻மேக் இன் இந்தியா திட்டம் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
🔻ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளது
🔻5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு
🔻வெளிப்படைத் தன்மையுடன் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
🔻சாலை, ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்துகள் ஒருங்கிணைக்கப்படும்.
🔻துறைகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்- நிர்மலா சீதா
🔻25,000 கி.மீ. தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.
🔻தொடர் வளர்ச்சிக்கு உதவ 7 அம்சங்களில் பிரதமர் மோடியின் கதி சக்தி திட்டம்.
🔻நாடு முழுவதும் 1 லட்சம் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
🔻நாடு முழுவதும் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும்- பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன்
🔻வந்தே பாரத் திட்டம் மூலம் 400 புதிய ரயில் சேவைகள் இயக்கப்படும்.
🔻மெட்ரோ ரயில் திட்டங்கள் புதிய வசதிகளுடன் செயல்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன்
🔻ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும்- பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன்
🔻கோதாவரி - பெண்ணையாறு - காவிரி உள்ளிட்ட 5 நதி இணைப்புத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
🔻MSME நிறுவனங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீள அறிமுகம் செய்யப்பட்ட ECLGS திட்டம் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
🔻ஊரக மாணவர்கள் மற்றும் தலித் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கூடுதல் கல்வி தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்படும்.
🔻கோதாவரி- கிருஷ்ணா, காவிரி-பெண்ணாறு நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்- நிர்மலா சீதாராமன்
🔻ஆன்லைன் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்
🔻நில ஆவணங்களை சரிபார்க்க டிரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தம்.
🔻100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும்.
🔻டிஜிட்டல் பல்கலைக்கழகம் நிறுவப்படும்.
🔻தொலைக்காட்சிகள் மூலமாக கல்வி முறையை செயல்படுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக 200 சேனல்கள் உருவாக்கப்படும்
🔻ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி என்ற திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகின்றது
🔻ஏர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை வெற்றிகரமாக முடிந்தது. இனி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல் ஐ சி -யில் பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும்.
🔻கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மனரீதியாக சிகிச்சை அளிக்க மையங்கள் உருவாக்கப்படும்
🔻நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
🔻பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ₹48,000 கோடி, வரும் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டப்படவுள்ளன.
🔻ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு திட்டத்தின்கீழ் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; 3.8 கோடி இல்லங்களுக்கு இணைப்பு வழங்கப்படவுள்ளது.
🔻தொலைபேசி மூலம் கவுன்சிலிங்க் பெறும் வகையில் தேசிய மனநல சுகாதார திட்டம் தொடங்கப்படும்.
🔻சிறுகுறு தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கான புதிய பொருட்களை ரயில்வே தயாரிக்கும்.
🔻ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
🔻போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு
🔻உள்ளூர் தொழில்களை ஊக்குவிக்க One Station One Product திட்டம் செயல்படுத்தப்படும்!
🔻விவசாயிகளுக்கு ரூ.2.37 லட்சம் கோடி குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்பட்டுள்ளது.
🔻ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
🔻கிராமப்புற பள்ளிகளுக்கு இணைய வழி கல்வி
🔻 5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டு, பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் மேம்படுத்தப்படும்.
🔻1 முதல் 12ம் வகுப்பு வரை மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும்.
🔻வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்காக வரும் நிதியாண்டில் ₹1500 கோடி ஒதுக்கீடு.
🔻மின்னணு பாஸ்போர்ட் வரும் நிதியாண்டிலிருந்து வழங்கப்பட உள்ளது.
🔻 "நாடு முழுவதும் மேலும் 1.5 லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும்.
🔻எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை மாற்றிக் கொள்ளும் வசதி மேற்கொள்ளப்படும்.
🔻 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டு, பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் மேம்படுத்தப்படும்.
🔻மின்சார வாகனங்களுக்காக ஊரகப்பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்
🔻இந்தியா அம்ருத காலத்தில் நுழைந்துள்ளது.
🔻நாடு முழுவதும் விரைவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும்.
🔻டிஜிட்டல் பரிவர்த்தனை நாட்டின் எல்லா மூலைகளுக்கும் செல்ல வேண்டும்.
🔻1.5 லட்ச தபால் நிலையங்களில் வங்கி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன; தபால் நிலைய சேமிப்பு கணக்கிலிருந்து வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பும் வசதி விவசாயிகளுக்கு பெருமளவில் உதவியுள்ளது.
🔻நகர திட்டமிடலுக்கு உயர்மட்டக்குழு அமைக்கப்படும்.
🔻ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க அனுமதி.
🔻2030 ஆண்டுக்குள் 280 கிகா வாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்க இலக்கு
🔻19500 கோடி ரூபாய் சூரிய ஒளி மின்சார தயாரிப்பு பொருள்களை உருவாக்குவதற்காக ஒதுக்கீடு.
🔻இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒலி, ஒளி, வரைகலை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்படும்.
🔻பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க அனைத்து அமைச்சகங்களும் பயன்படுத்தும் வகையில் ஆன்லைன் பணம் செலுத்தும் திட்டம் தொடங்கப்படும்.
🔻பாதுகாப்புத் துறைக்கான இறக்குமதி குறைக்கப்படும்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
🔻One Nation One Registration நிலப்பதிவிற்காக ஒரு நாடு ஒரு பதிவு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்!
🔻அரசின் மூலதன செலவுகள் ₹ 7.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும் - பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்
🔻பொருளாதார வளர்ச்சிக்கு தனியாரின் பங்கீடு மூலதனமாக உள்ளது.
🔻ரிசர்வ் பேங்க் சார்பில் டிஜிட்டல் கரன்சி (Like BitCoin) வெளியிடப்படும்
🔻பிட்காயின் போன்ற இந்தியாவின் டிஜிட்டல் கரன்சிக்கு மத்திய அரசு அனுமதி
🔻2023ன் ஆண்டு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் மற்றும் விதிமுறைகளின் கீழ் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்
🔻ஒரு லட்சம் கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக ஒதுக்கீடு
🔻மூன்றாண்டுகளுக்கு வட்டியில்லாத கடன் உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
🔻மகளிருக்கு 3 புதிய திட்டங்களை அறிமுகம்.சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம் ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை தொடங்கப்பட உள்ளன.
🔻"2025ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதி ஏற்படுத்தி தரப்படும்!" - நிர்மலா சீதாராமன்
🔻ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்; டிஜிட்டல் கரன்சி மூலம் இனைய பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும் - பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் பேச்சு
🔻மாநிலங்களுக்கு மாநில ஜிடிபியில் 4 சதவிகிதம் வரை நிதி பற்றாக்குறை அனுமதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு: மத்திய பட்ஜெட்
🔻நடப்பாண்டுக்கான நிதி பற்றாக்குறை 6.9% அளவில் இருக்கும்: நிர்மலா சீத்தாராமன்
🔻திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை இரண்டு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வரி செலுத்துவோருக்கு வாய்ப்பு
கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோர் இந்த திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் செய்யும் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
🔻மாணவர்களுக்கு அனிமேஷன், VFX, டிஜிட்டல் விளையாட்டுகள் தயாரிப்பு ஆகியவற்றில் திறனை மேம்படுத்த திட்டங்களை வடிவமைக்க சிறப்புக்குழு
🔻நாட்டில் வரி செலுத்தும் அனைவருக்கும் என் நன்றி நிர்மலா சீத்தாராமன்
🔻ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்க தொகை அளிக்கும் திட்டம் மேலும் ஒருவருடம் நீட்டிப்பு.
🔻பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகள் மூலம் வரும் வருமானத்தில் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்:
🔻ஜி எஸ் டி வரி வசூலில் சாதனை
ஜிஎஸ்டி அமல் படுத்தப் பட்டதில் இருந்து இந்த ஜனவரி மாதம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரி தான் மிக அதிக தொகை ஆகும்
சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் நடப்பு ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது: நிர்மலா சீத்தாராமன் பெருமிதம்
🔻இந்த ஆண்டிற்கான தனிநபர் வருமான வரி விகிதங்கள் எந்த மாற்றமும் இல்லை
நிதிநிலை அறிக்கையை வாசித்து முடித்தார் நிதி அமைச்சர்
No comments:
Post a Comment