அக்னிப்புரட்சி இன்றைய (09.02.2022)
முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* தமிழகத்தில் நீர் நிலைகள், நீர்வழிப் பாதைகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள், நீர் நிலைகள் என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை ஆவணப்பதிவு செய்ய தடை - அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் பத்திரப்பதிவுத்துறை சுற்றறிக்கை.
* கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது; கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது.
ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது - கமல்ஹாசன்.
* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக வேட்பாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம்
* உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்; 2021ம் ஆண்டு 210 மில்லியன் டன் பால் உற்பத்தி
தமிழகத்தில் 2021ம் ஆண்டு 9790.36 டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது - மத்திய அரசு
* கேரளா : மலம்புழா மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற வாலிபர் தவறி விழுந்து பாறை இடுக்குகளில் கடந்த 26 மணி நேரமாக சிக்கித்தவிப்பு.
வாலிபரை மீட்க இராணுவத்தின் உதவியை கோரியது கேரள அரசு.
2 நாளாக மலை இடுக்கில் உணவு, தண்ணீர் இன்றி தவித்த பாபு பத்திரமாக மீட்கப்பட்டார்.
கேரள மாநிலம் மலம்புழா மலையின் செங்குத்தான பகுதியில் சிக்கியிருந்த பாபு என்ற இளைஞரை 43 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டது இந்திய ராணுவம்.
* ஊரகப்பகுதிகளில் 114 இடங்களில் புதிய பாலங்கள் கட்ட தமிழ்நாடு அரசு அனுமதி.
நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.336 கோடி மதிப்பில் கட்டப்படும் பாலங்களுக்கு நிதியை ஒதுக்கி உத்தரவு.
அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஊரகப்பகுதிகளில் புதிய பாலங்கள் கட்டப்படும்.
* ஹிஜாப் - கைதானோர் மாணவர்கள் அல்ல:
கர்நாடகாவில் விரும்பத்தகாத நிகழ்வுகள் என்ன நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹிஜாப் சம்பவம் தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டோர் வெளியாட்களே தவிர மாணவர்கள் அல்ல - அமைச்சர் அரக ஞானேந்திரா.
மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதாக வழக்கு.
* பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சவுதாமணியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு.
* அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவு.
தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய குழு அமைத்து உத்தரவு.
* விவசாய நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு.
அரசின் இந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
* ஒரே சீருடை சட்டத்துக்கு தடையில்லை- கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு.
கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது -கர்நாடக உயர்நீதிமன்றம்.
ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சனையை உயர்நீதிமன்றத்தின் விரிவான அமர்வு விசாரிக்கும் - நீதிபதி கிருஷ்ணா தீட்சித்.
*:பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை - காவல்துறை ஆணையர்.
கர்நாடக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் எழுந்து வரும் நிலையில் பெங்களூரு நகரில் கூட்டங்கள் நடத்தவும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் இரண்டு வாரங்களுக்கு தடை - பெங்களூரு காவல்துறை ஆணையர் கமல் பண்ட்.
* தெலங்கானாவில் பாஜக தொண்டர்களை தாக்கிய டி.ஆர்.எஸ். கட்சியினர்.
ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்தது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு எதிராக டி.ஆர்.எஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது பாஜக தொண்டர்களை தாக்கினர்.
* இரு வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக அரசு விளக்கம்.
பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில், குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் - தமிழக அரசு.
* சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் பருவ பொதுத்தேர்வு ஏப்ரல் 26ம் தேதி முதல் நேரடியாக நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு.
பிப்ரவரி 19ஆம் தேதி பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு.
* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிப்.19 பொது விடுமுறை.
விடுமுறை தொடர்பான அறிவிப்பு தமிழக அரசின் சிறப்பு இதழில் வெளியீடு.
* வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி.
No comments:
Post a Comment