அக்னிப்புரட்சி இன்றைய (16.02.2022) முக்கிய செய்திகள்.
💥 கடந்த வருடம் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலவரத்தை தூண்டிய பஞ்ஜாபி நடிகர் தீப் சித்து மரணம் 💥
* தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்குப் பின் இன்று மழலையர் பள்ளிகள் திறப்பு.
பள்ளிக்கு வரும் மழலையர்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி வழங்கப்பட உள்ளது.
போதிய இடைவெளியுடன் மழலையர்கள் அமர வைக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்.
2 ஆண்டுக்கு பின் மாசித்திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.
* கர்நாடகாவில் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று கல்லூரிகள் திறப்பு.
ஹிஜாப் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் பள்ளி, கல்லூரிகள் மூடல்.
உயர்நிலைப் பள்ளிகள் கடந்த 14 ஆம் தேதி முதல் திறப்பு.
* இசையமைப்பாளர் பப்பி லஹரி காலமானார்.
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர், பாடகர் பப்பி லஹரி (69) உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று காலமானார்.
1973ஆம் ஆண்டு நன்ஹா சிகாரி என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமான பப்பி லஹாரி, இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த பப்பி, திங்கள்கிழமை வீடு திரும்பிய நிலையில் நேற்று நள்ளிரவு திடீர் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவர் தமிழில் பாடும் வாணம்பாடி மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவில் சீலா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* நேரடி அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான கொரோனா சிகிச்சை செலவு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்துக்கு மேல் சிகிச்சைக்கான செலவு உயர்ந்தால், அதை அரசே வழங்கும்.
கூடுதல் சிகிச்சை செலவினத்திற்காக ரூ.1 கோடியை சுழல் நிதியாக விடுவித்தது தமிழக அரசு.
* ஜெயலலிதா மரண விசாரணையை மீண்டும் தொடங்கியது ஆறுமுகச்சாமி ஆணையம்.
சசிகலா மற்றும் அப்போலோ தரப்பு வழக்கறிஞர்களுடன் நீதிபதி ஆறுமுகசாமி ஆலோசனை நடத்திவருகிறார்.
💥 ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோபிடன் எச்சரிக்கை:
உக்ரைன் எல்லையில் மேற்கொண்டு முன்னேறினால் பொருளாதார கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் - ரஷியா இடையிலான போர் பதற்றம் உச்சகட்ட நிலையை அடைந்து வரும் சூழலில், ரஷியா மேற்கொண்டு முன்னேறினால் சர்வதேச அளவில் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோபிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷியாவின் மிக முக்கியமான நிதி அமைப்புகள், முக்கிய துறைகளுக்கு அழுத்தம் கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
ரஷிய படைகளின் லட்சக்கணக்கான துருப்புகள் இன்னும் உக்ரைன் எல்லையில் இருப்பதால் நேட்டோ படைகளின் பயிற்சியும் தொடரும் என்றும் ஜோபிடன் தெரிவித்துள்ளார்.
ரஷியா படைகளை திரும்பப் பெற்றால் அடுத்த கட்டம் குறித்து ஆலோசிப்போம் என்றும் பிடன் கூறியுள்ளார்.
* எடப்பாடி பழனிசாமி நண்பரும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சேலம் அருகே பெத்தநாயக்கன் பாளையத்தில்க் உள்ள இளங்கோவன் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணம் பதுக்கி வைத்துள்ளதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு மாற்றியமைப்பு
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் 6 மருத்துவர்கள் அடங்கிய குழு அமைப்பு
* தேர்தலை முன்னிட்டு அரசு சுவர்களில் பரப்புரை போஸ்டர்கள் ஒட்டக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்.
போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தால் அதை அகற்றும் செலவை வேட்பாளரிடம் இருந்து வசூலிக்கவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.
* ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை கைவிடப்படுவதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
போயஸ் கார்டன் இல்லத்தை விலைக்கு வாங்க செலுத்தப்பட்ட ₹68 கோடி டெபாசிட் தொகையை திரும்பப் பெறுவதாகவும் மனு.
சென்னை வருவாய் கோட்டாட்சியர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 18-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
* வாக்கு எண்ணிக்கையை எங்கு நடத்துவது என மாநில தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும்.
வாக்கு எண்ணும் மையங்களை மாற்றுவது தொடர்பாக தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.
வாலாஜாபேட்டை வாக்கு எண்ணிக்கை மையத்தை சோளிங்கருக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி.
💥 10.5 % உள்ஒதுக்கீடு- உச்சநீதிமன்றத்தில் 2-வது நாள் விசாரணை: பல பகுதிகளில் வன்னியர் சமுதாய மக்கள் பட்டியலின மக்களை போலத்தான் நடத்தப்படுகிறார்கள்.
வன்னியர் சமுதாய பெண்களில் 95% பேர் கூலி வேலைக்கு செல்லும் நிலையில் உள்ளனர்.
குறைந்த பட்ச வருமானம் கொண்டவர்களாகவும், ஏழைகளாகவும் தான் உள்ளனர்-பா.ம.க தரப்பு வாதம்.
வன்னியர்கள் சத்திரிய குல வம்சத்தினர் என அழைக்கப்படுகின்றனர்.
* சென்னை: நந்தனத்தில் 45வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இன்று முதல் மார்ச் 6ம் தேதி வரை 19 நாட்களுக்கு புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.
தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.
* அறநிலையத்துறையின் கோயில்களில் அறங்காவலர் காலியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறை குறித்து விரிவான அறிக்கை தர உயர்நீதிமன்றம் ஆணை.
விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* 4 வயதுக்கும் கீழான குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி மோட்டார் வாகன விதிகளில் திருத்தம்; புதிய விதிகள் அறிவிப்பு.
இரு சக்கர வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளைக் கொண்டு செல்லும்போது மணிக்கு நாற்பது கிலோமீட்டருக்கும் குறைவான வேகத்தில் தான் செல்ல வேண்டும்-மத்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம்.
இரு சக்கர வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்புக் கச்சையும், தலைக்கவசமும் பயன்படுத்த வேண்டும்.
இந்தப் புதிய விதிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் நடைமுறைக்கு வரும்.
* டெல்லியில் நடைபெற்ற குரு ரவிதாஸ் விஸ்ரம்தாம் கோயில் பூஜையில், பக்தர்களுடன் இணைந்து பஜனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி!
* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்.19 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.
50%க்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு சென்றால், அந்த பள்ளிகளுக்கு மட்டும் பிப்.18ஆம் தேதியும் விடுமுறை - பள்ளிக்கல்வி ஆணையர்.
* பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும்.
ஜூன் 11ஆம் தேதி வரை தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடைபெறும்.
ஜூன் 13ஆம் தேதி செய்முறைத் தேர்வும், ஜூன் 22ஆம் தேதி செமஸ்டர் எழுத்துத் தேர்வும் தொடங்கும் - அண்ணா பல்கலை.
💥 உச்ச நீதிமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நேற்றும் இன்றும் தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டு அரசு தரப்பு விவாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று பாமக தரப்பிலிருந்து அனல் பறக்கும் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டு வழங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் பாமக வழக்குரைஞர்கள் குழு அனைத்து தரப்பான புள்ளி விபரங்களையும் ஆணித்தரமான வாதங்களையும் முன் வைத்து. இருந்தபோதிலும் எதிர் தரப்பினர் முன்வைக்கப்பட்டன இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கை வரும் 22 ஆம் தேதி இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒத்திவைத்தது.
No comments:
Post a Comment