அக்னிப்புரட்சி இன்றைய (22.02.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.02.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.02.2022) முக்கிய செய்திகள்.

* அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையை ஏற்று உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ நா பாதுகாப்பு குழுவின் நெருக்கடி கால கூட்டம்  இன்று கூடுகிறது.

* இந்த மாத ஐநா பாதுகாப்பு குழுவின் தலைவரான ரஷ்யாவின் தலைமையிலேயே இந்த கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.

ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளிகிருஷ்ணன் முன் ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் 15 நாட்கள் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.

* சென்னை புறநகர் பகுதிகளான பொத்தேரி, காட்டாங்குளத்தூர் உள்ளிட்ட இடங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் போக்குவரத்து பாதிப்பு!

* திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரமாக இந்த வெற்றியை பார்க்கிறேன் - தமிழக முதல்வர் ஸ்டாலின்.

திமுக மீதான மக்களின் நம்பிக்கையை 100% காப்பாற்றுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வெற்றியை தேடி தந்த தமிழக மக்களுக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்.

சிறப்பான வெற்றிக்கு முழு காரணம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான்.
வெற்றி பெற்றவர்கள் தங்கள் மீது புகார் வராமல் நடந்து கொள்ள வேண்டும்.

* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி! - டிடிவி தினகரன் ட்வீட்

* ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் பதற்றம்:

உக்ரைனில் இருந்து 242 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது ஏர் இந்தியா விமானம் இன்று இரவு 10 மணியளவில் டெல்லி வருகிறது

வரும் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மேலும் 2 விமானங்களை அனுப்பி அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது

* மக்கள் விருப்பப்படி அதிமுக மீண்டும் வெற்றி பெறும் - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். அறிக்கை

* நகர்ப்புற தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி
எத்தனை இன்னல்கள் வந்தாலும் மக்கள் பணியில் அதிமுக தொடர்ந்து பாடுபடும் - அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி

* பணம், அதிகார அடக்குமுறையை மீறி கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை பாமக பெற்ற வெற்றி மகத்தானது

பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்

பாமகவை பொறுத்த வரை வெற்றி, தோல்விகள் தற்காலிகம்; மக்கள் பணிதான் நிரந்தரம் - மருத்துவர் இராமதாசு அய்யா

* தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி சொந்தங்கள் அனைவரின் கடுமையான உழைப்பின் முதல் கட்ட  பலன் இந்த தேர்தலின் முடிவில் காணக்கிடைக்கிறது; என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

* பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றியை உறுதி செய்த மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி சொன்ன நிகழ்வில் கலந்துகொண்டேன்; அண்ணா-கலைஞரின் நினைவிடம், கோபாலபுரம் இல்லத்தில் மரியாதை செய்தோம். - உதயநிதி

* கடலூர் : புவனகிரி பேரூராட்சி 4வது வார்டின் 4AV வாக்குச்சாவடியில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திர பழுது காரணமாக மறுவாக்குப்பதிவு அறிவிப்பு - மாநில தேர்தல் ஆணையம்

* நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், திமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் கூட்டணியின்றி, தனித்தனியாக போட்டியிட்டதால், வாக்குகள் அதிகளவில் பிரிவதற்கு காரணமாக அமைந்தது" -  தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை!

* திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் சுயேட்சை யாக வெற்றி பெற்ற 5 வேட்பாளர்களும் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் ஆகியோரை சந்தித்து திமுகவிற்கு தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages