அக்னிப்புரட்சி இன்றைய (24.02.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (24.02.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (24.02.2022) முக்கிய செய்திகள்.

* அருணா ஜெகதீசன் ஆணைய பதவிக்காலம் நீட்டிப்பு.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மே 25ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மேலும் 3 மாதம் நீட்டிப்பு.

* கடல் பகுதியின் பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மையை வலுப்படுத்துவதற்காக 'மரைன் எலைட்' படையை நிறுவி தமிழ்நாடு அரசு அரசாணை.

மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா மற்றும் பால்க் விரிகுடாவில் உள்ள சூழலியல் உணர்திறன் வாய்ந்த கடலோர கடல் பகுதிகளை பாதுகாக்க "மரைன் எலைட்" படை உருவாக்கம்.

கடல் சார் வள பாதுகாப்பு படையை நிறுவதற்கான அரசாணையை வெளியிட்டது சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை.

* செங்கல்பட்டு மாவட்டம் பாலாறு மேம்பாலத்தில் நாளை (பிப்.24) முதல் போக்குவரத்து இயக்கம்.

கடந்த 9ம் தேதி பாலபராமரிப்பு காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் நாளை முதல் போக்குவரத்து இயக்கம்.

* ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று, பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள், தற்போதைய பணியிடங்களில் இருந்து 28ம் தேதி விலகி மார்ச் 1ம் தேதி புதிய பணியிடத்தில் சேர வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை.

* கடலூர்: புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.

மாலை 5 மணி வரை அனைவரும், 5-6 கொரோனா பாதித்தவர்களும் வாக்குப்பதிவு செய்ய அனுமதி.

வாக்கு எண்ணிக்கையின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

6 மணிக்கு வாக்குப்பதிவு மையத்திலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

* நாகை மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, நாகை மாவட்டத்தை சேர்ந்த 22 மீனவர்களை கச்சத்தீவு அருகே கைது செய்து, 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை.

இந்தியா – இலங்கை அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி : லக்னோவில் இன்று நடக்கிறது

* மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நாளை சந்திக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

* ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் வலிமை திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் போனி கபூர், கார்த்திகேயா மற்றும் ஹூமா குரேஷி

* உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுக்க ஆணையிட்டார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.

கிழக்கு உக்ரைனுக்குள் புகுந்து ராணுவ நடவடிக்கைகளை எடுக்க புடின் உத்தரவு.

* உக்ரைனில் கல்வி பயிலும் மாணவர்கள், பணியாற்றும் தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என அயலக தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவிப்பு

044-28515288 / 96000 23645 /
99402 56444
இணையதளம் : nrtamils.tn.gov.in

* உக்ரைன் நாடு முழுவதும் விமான சேவை தடைபட்டுள்ளது.

உக்ரைனில் உள்ள 20,000 இந்திய மாணவர்களை தற்போது வெளியேற்றுவது கேள்வி குறியாகியுள்ளது.

* உக்ரைன் நகரங்களை குறிவைத்து தாக்கி வருகிறது ரஷ்யா.

உக்ரைன் மீது நடக்கும் தாக்குதலில் ஏற்படும் உயிரிழப்புக்கு ராஷ்யாவே காரணம்.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம்.

பேரழிவு தரும் உயிர் இழப்பையும், மனித துன்பத்தையும் ஏற்படுத்தும் திட்டமிட்ட போரை அதிபர் புதின் தேர்வு செய்துள்ளார்.

இந்த தாக்குதலால் ஏற்படும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு. - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றுபட்டு தீர்க்கமான முறையில் ரஷ்யாவுக்கு பதிலளிப்பார்கள். 

உலகமே ரஷ்யாவை பொறுப்பேற்க வைக்கும். - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்டன்

* உக்ரைனுக்கு உதவுங்கள்
எங்கள் நாடு மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த உலக நாடுகள் உதவிட வேண்டும்..

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் வேண்டுகோள்

* 100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய் விலை.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எதிரொலியாக கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 100 டாலரை தாண்டியது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* மாஸ்கோ வர்த்தகச் சந்தை தனது வர்த்தக நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்தி உள்ளது

இந்திய பங்குச்சந்தைகளில் நேரடியாக பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது

* உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியுள்ள நிலையில் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்தியர்களை மீட்க உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI1947 மீண்டும் நாடு திரும்பியது.

உக்ரைன் விமான எல்லை மூடப்பட்ட நிலையில் விமானம் மீண்டும் இந்தியா திரும்பியது.

நம்ப முடியாத வேகத்தில் முன்னேறும் ரஷ்யா, நகரங்களை கைப்பற்ற தொடங்கியுள்ள ரஷ்யா!

உக்கிரைன்னின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள 2க்கும் மேற்பட்ட நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல்

* இந்தியா நடுநிலை வகிக்கும்!
உக்ரைன் - ரஷ்யா போர் சூழல் பிரச்சனையில் இந்தியா நடுநிலை வகிக்கும் எனவும், அமைதியை ஏற்படுத்தும் தீர்வை எதிர்நோக்கி இருப்பதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தகவல்

* பாதுகாப்பாக இருங்கள் - இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்.

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை

+380 997300428, +380 997300483 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

situationroom@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்-இந்திய வெளியுறவுத்துறை.

* உக்ரைன் நாட்டு விமானத்தளங்களை தகர்த்துவிட்டதாகவும், உக்ரைனின் விமான எதிர்ப்பு கட்டமைப்பை அழித்துவிட்டதாகவும் ரஷ்ய ராணுவம் தகவல் அளித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் பல்வேறு விமானத் தளங்கள் மீது ரஷ்ய விமானங்கள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் மட்டுமல்லாமல் சைபர் தாக்குதலையும் தொடுத்துள்ளது ரஷ்யா.

உக்ரைனை சேர்ந்த அரசு இணையத்தளங்களை முடக்கியும், DATA Erasing Tool மால்வேர் மூலம் 100-கணக்கான முக்கிய  இணையதளங்களின் தகவல்களையும் ரஷ்யா அழித்தது.

* பத்திரிகையாளர்களுக்கு அறிவித்துள்ள அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கு பத்திரிகையாளர் நலவாரியக்குழு அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

* டாலருக்கு நிகரான ரஷ்ய ரூபிளின் மதிப்பு ஒரே நாளில் 9% சரிவு.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வரும்நிலையில் ரஷ்ய நாணயத்தின் மதிப்பு கடும் சரிவு.

* எதையும் சந்திப்போம் - உக்ரைன் அதிபர் உறுதி

உக்ரைன் தனது நிலைப்பாட்டிலும், பாதுகாப்பிலும் உறுதியாக உள்ளது ரஷ்யாவின் எத்தகைய மிரட்டலையும் கண்டும் அச்சம் கொள்ள மாட்டோம்.

எத்தகைய சவால்களையும் சந்திப்போம்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி.

* ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக ஆயுதம் ஏந்துமாறு தனது குடிமக்களுக்கு, உக்ரைன் பாதுகாப்புத் துறை அழைப்பு.

போரிட வருவோருக்கு ஆயுதங்களை பாதுகாப்பு அமைச்சகம் வழங்கும் என்று கூறியுள்ளது.

* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் துறையூர் விரைந்துள்ளனர்.

* ஐம்பது ரஷ்ய வீரர்களைக் கொன்றதாகவும், ஆறு விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் கூறுகிறது

இதுவரை 40 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார்

* முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு.

சென்னை ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்து.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,874 க்கும், சவரன் ரூ.38,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40-க்கு விற்பனையாகி வருகிறது.

* வன்னியர் சங்க மாநில செயலாளர் க.வைத்தி, ஜெயங்கொண்டம் பாமக  நகர செயலாளர் மாதவன் ஆகியோர் பாமகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் - இராமதாசு அய்யா பரிந்துரையின் பேரில் ஜி.கே.மணி நடவடிக்கை என்று அரியலூர் மாவட்டச் செயலாளர் ரவி அறிவிப்பு.

இவர்களுடன் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பாமகவினர் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தல்.

* ஆபத்தான சூழலை எதிர்கொள்ளும்போது கூகுள் உதவியுடன் அருகில் உள்ள பதுங்கு குழிகளில் தங்கி கொள்ளுங்கள்.

உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்.

உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த 5000 மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

* உக்ரைனில் இருந்து விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக மாணவிகள்.

வெடிகுண்டு வெடிப்பதை நேரில் பார்த்தோம், பயமாக உள்ளது.
எந்த ஒரு தகவலும் இல்லை, வீட்டிலேயே முடங்கி உள்ளோம்.

இந்திய அரசு விமானங்களை ஏற்பாடு செய்து அழைத்து செல்ல வேண்டும்.
உணவு, பணம் இல்லாமல் தவித்து வருகிறோம் - தமிழக மாணவிகள்.

* உக்ரைனில் உள்ள தமிழர்கள் டெல்லி தமிழ்நாடு இல்லத்தையும் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தொலைபேசி: +91-9289516716
மின்னஞ்சல்: ukrainetamils@gmail.com.

⚡தற்போது | மாஸ்கோவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு.

* செர்னோபில் நகருக்குள் நுழைந்தது ரஷ்யப் படைகள்!

செர்னோபில் அணு உலை அருகே நடந்த சண்டையில் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு அழிக்கப்பட்டதாக உக்ரேனிய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் தகவல்

* ரஷ்ய ஆக்கிரமிப்புப் படைகள் செர்னோபில் அணு உலையை  கைப்பற்ற முயன்று கொண்டிருக்கிறது.

1986 ல் நடந்த பேரழிவு மீண்டும் நிகழாதிருக்க எங்களது வீரர்கள் உயிரைக் கொடுத்து காத்து வருகின்றனர்.

இது முழு ஐரோப்பாவிற்கும் எதிரான ரஷ்யாவின்  போர்ப்பிரகடனம் என உக்ரேனிய அதிபர் தகவல்.

* முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து, தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அறிவிப்பு.

* ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்பாக இரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோதி தொலைபேசியில் பேச்சு.

இரஷ்யா- நேட்டோ படைகள் இடையிலான பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தல்....

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages