அக்னிப்புரட்சி இன்றைய (25.02.2022) முக்கிய செய்திகள்.
* போரை தேர்ந்தெடுத்த ரஷ்யாவும், அந்நாட்டு அதிபர் புதினும் அதன் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும். ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது - ஜோ பைடன்
மேலும் அந்நாட்டு வங்கிகளான விடிபி., உள்ளிட்ட 4 வங்கிகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் சைபர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை.
அவர் முன்னாள் சோவியத் யூனியனை மீண்டும் நிறுவ விரும்புகிறார்.
அவரது இந்த லட்சிய போக்கு, உலக நாடுகளுக்கு முற்றிலும் எதிரானது என்று நான் நினைக்கிறேன்.
உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அமெரிக்காவின் பக்கம் உள்ளதா என நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ‛இதுகுறித்து இந்தியாவுடன் கலந்தாலோசித்து வருகிறோம்'
- ஜோ பைடன்
* ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் பிரதமர் அறிவிப்பு
* உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள சுமியில் கடும் சண்டை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
முதல் நாள் சண்டையில் 137 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்
* ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக தைவான் அறிவித்துள்ளது
ரஷ்யா மீது பல தடைகளை விதிப்பதாக தைவான் அறிவிப்பு; ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் தடை விதிக்க இருப்பதாக தெரிவித்துள்ளன.
* ரஷ்ய தூதரகத்தின் மூத்த அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது அமெரிக்கா.
* ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் நரேந்தர மோடி தொலைபேசியில் உரையாடல்
ரஷ்யா-நேட்டோ படைகள் இடையிலான பிரச்சனையை இருதரப்பு பேச்சு மூலமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தல்
வன்முறையை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் பிரதமர் மோடி வேண்டுகோள்
* தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் என்எஸ்இயின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியன் கைது.
3 நாட்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில் சிபிஐ இன்று கைது செய்தது.
கோ-லோகேஷன் ஊழல் தொடர்பான வழக்கில் ஆனந்த் சுப்ரமணியன் கைது - சிபிஐ தகவல்.
* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,801 க்கும், சவரன் ரூ.38,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70 -க்கு விற்பனையாகி வருகிறது.
* உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை:
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1,104 புள்ளிகள் அதிகரித்து 55,634 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 337 புள்ளிகள் அதிகரித்து 16,585 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
* இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் "தடா" ரஹீம் கைது.
தமிழகத்தில் பூணூல் அறுக்கும் போராட்டத்தை அறிவித்த நிலையில் கைது.
ஹிஜாப் விவகாரத்தை காரணம் காட்டி பூணூல் அறுக்கும் போராட்டத்தை அறிவித்தார் ரஹீம்.
* உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
உக்ரைனில் சுமார் 5000 தமிழ்நாட்டு மாணவர்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான 2 தேர்தல் வழக்குகள் தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.
* இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.
மலேசியா, சிங்கப்பூரிலும் உணரப்பட்டுள்ளது.
கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
* உக்ரைன் தாக்குதலில் 800 ரஷ்ய ராணுவ வீரர்கள் பலி - உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு.
ரஷ்யாவின் 7 போர் விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள், 130 ஆயுத வாகனங்கள், 30 பீரங்கிகள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு.
* 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு தேதிகள் இன்று மாலை அறிவிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.
வான்வழி தாக்குதல் - மக்களுக்கு எச்சரிக்கை: க்ரைன் லிவீவ் நகரத்தில் ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதல் நடத்த வாய்ப்பு.
பாதாள அறைகள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் செல்ல அறிவுறுத்தல். ஒலிபெருக்கி மூலமாக மக்களுக்கு ஏர் சைரன் எச்சரிக்கை.
* அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான மனு தள்ளுபடி.
தண்டையார்பேட்டை போலீசார் அளித்த மனுவை தள்ளுபடி செய்தது ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்.
காவலில் எடுத்து விசாரிப்பதற்கான தேவை இல்லை - நீதிமன்றம்.
* ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கை.
தங்களது வாகனத்தின் முகப்பில் இந்திய கொடியினை ஒட்டி பயணம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்.
* உலகின் சக்தி வந்த நாடான ரஷ்யாவை நேற்று எப்படி தனியாக எதிர்த்தோமோ, அதேபோலதான் 2வது நாளான இன்றும் தனியாக எதிர்த்து வருகிறோம்.
உலகின் பிற சக்திவாய்ந்த நாடுகள் எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது- உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி.
மேற்கத்திய நாடுகள் எங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளது.
இதை எதிர்பார்த்தோம் என்றாலும் கூட அதிக வேதனையை தருகிறது- உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி.
* உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்- ரஷ்யா திடீர் அறிவிப்பு.
உக்ரைன் ராணுவம் சண்டையிடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார்- ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ்.
அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்பதே எங்களின் நோக்கம்.
உக்ரைன் ராணுவம் சண்டையிடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார்-செர்கி லாவ்ரோவ்.
* கோயில் நிர்வாகம் தொடர்ந்து அரசின் கட்டை விரலின் கீழ் இருக்க வேண்டுமா?
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் நிர்வாகம் குறித்து ரெங்கராஜன் அவதூறு பரப்பியதாக பதியப்பட்ட வழக்கையும் ரத்துசெய்து நீதிபதி உத்தரவு.
கோயில்களை யார் நிர்வகிப்பது என்ற அடிப்படை பிரச்னையும் உள்ளது.
தேவாலயங்கள், மசூதிகள் மீது அரசு கடைபிடிக்கும் அதே அளவு நிலைபாட்டை கோயில்கள் மீதும் கடைபிடிக்க வேண்டும் என வாதிடுவது நியாயமானதுதான்- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.
* உக்ரைன் மீது போர்த் தொடுத்த ரஷ்ய ராணுவம் மீது நடத்திய தாக்குதலில் 1,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக உக்ரைன் தகவல்!
ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் தீவிரமாக போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
* ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்கு;
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக வழக்குப்பதிவு.
6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை.
ஜெயக்குமாரின் மகள், மருமகன் மீதும் மோசடி வழக்குப்பதிவு.
* ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை உத்தரவை தொடர்ந்து...
இன்டெல், டெல் மற்றும் லெனோவா நிறுவனங்கள் ரஷ்யாவிற்கு தங்களது பொருட்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளன.
* ரஷ்ய விமானங்கள் தங்களது வான்வெளியை பயன்படுத்தவும் விமான நிலையங்களில் தரையிறங்கவும் தடை விதித்து ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் செக் குடியரசு உத்தரவு.
* முன்னதாக, பிரிட்டன் விமானங்களுக்கு ரஷ்யா தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ள வருமாறு உக்ரைன் ராணுவத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு.
ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய புதின் அறிவிப்பு.
உக்ரைனில் தற்போதைய அரசை அகற்றிவிட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் - புதின்.
உக்ரைனுக்கு ராணுவ, தொழில்நுட்ப மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கிவரும் ஸ்வீடன் அரசுக்கு நன்றி.
ஸ்வீடனின் ஆதரவு புதினுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி.
* உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய ஸ்வீடனுக்கு ரஷ்யா எச்சரிக்கை.
நேட்டோ அமைப்பில் சேர ஸ்வீடன், பின்லாந்து முயற்சி செய்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
* ஐரோப்பிய கவுன்சிலில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டது. ரஷ்யாவின் உறுப்பினர் உரிமை பறிப்பு!
* கடந்த 48 மணி நேரத்தில், 50,000கும் மேற்பட்ட உக்ரேனியர்கள் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேற்றம்.
பெரும்பாலானோர் போலந்து மற்றும் மால்டோவா நாடுகளில் தஞ்சம்.
- ஐநா அமைப்பு
* உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆயுதங்களை வழங்க NATO முடிவு செய்துள்ளது - NATO அமைப்பின் பொதுச் செயலாளர் ஸ்டோல்டன்பெர்க் அறிவிப்பு
* ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தவோ அவர்களின் கொடிகளை காண்பிக்கவோ கூடாது என்று உலகில் உள்ள அனைத்து விளையாட்டு கூட்டமைப்புக்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment