அக்னிப்புரட்சி இன்றைய (28.02.2022) முக்கிய செய்திகள்.
* உக்ரேனில் ரஷ்யா பிடிக்கக்கூடிய இடங்கள் எதுவும் அங்கீகரிக்கப் படாது: ஜி7 நாடுகள் அதிரடி அறிவிப்பு
* உக்ரைன் நெருக்கடி குறித்த சிறப்பு அவசர அமர்வில் UNSC வாக்கெடுப்பில் இருந்து இந்தியா மீண்டும் புறக்கணித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சீனாவும் வாக்களிக்கவில்லை.
* மணிப்பூரில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது.
60 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல்.
இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் மார்ச் 5 ஆம் தேதி 2ஆம் கட்ட தேர்தல்.
* உலகின் மிகப் பெரிய விமானம் 'மிரியா'! சல்லி சல்லியாக நொறுக்கிய ரஷ்ய ராணுவம்.
கொரோனா பேரிடரின்போது பேருதவியாக இருந்த உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமாக "மிரியா" ரஷ்ய ராணுவ தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை தகவல்.
* தலைநகர் கீவ்வில் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தப்போவதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ராணுவத்திற்கு உக்ரைன் அரசு அறிவுறுத்தல் செய்துள்ளது.
* உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்.
இந்தியர்களை மீட்டெடுக்க அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் செல்வது குறித்து ஆலோசனை.
* அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம்.
அதிமுக தமிழகத்தில் ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது; எதிர்க்கட்சி மீது பொய் வழக்குப் போடுவதை திமுக வழக்கமாக கொண்டுள்ளது - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
* உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது"
கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன" - உக்ரைன் ராணுவம் அறிக்கை.
* மறைமுக தேர்தலை தள்ளிவைக்கும் திட்டமில்லை.
மறைமுக தேர்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும்-மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
* தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்படும்.
தேர்தலை தள்ளிவைக்கும் திட்டமில்லை -மாநில தேர்தல் ஆணையம்.
* உக்ரைன் தலைநகர் கீவ்-வில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது - இந்திய தூதரகம்.
தலைநகர் கீவ்-வில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மூலம் இந்தியர்கள் மேற்கு பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தல் - இந்திய தூதரகம்.
* உக்ரைன் நாட்டை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையுங்கள்.
உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் உரிமையை வழங்க வேண்டும்-அதிபர் ஜெலென்ஸ்கி.
4,500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகிறார்
* ரஷ்யாவிற்கு எதிரான ஒருதலைப்பட்ச தடைகளை பெய்ஜிங் எதிர்க்கிறது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது
* உக்ரைனுடன் கூடிய விரைவில் சமாதான ஒப்பந்தத்தை எட்ட ரஷ்யா ஆர்வமாக உள்ளது: ரஷ்ய பிரதிநிதி
இந்திய நேரப்படி, பிற்பகல் 2:30 மணிக்கு பெலாரஸில் பேச்சுவார்த்தை தொடங்குகிறது.
* உக்ரைன் வான்வெளி மீதான ஆதிக்கத்தை கைப்பற்றியதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
* உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது
கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன" - உக்ரைன் ராணுவம் அறிக்கை.
* உக்ரைனில் சிறையில் உள்ள கைதிகளுக்கு ராணுவ அனுபவம் இருந்தால் அவர்களை உடனே விடுதலை செய்ய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முடிவு
ஆனால் ஒரே நிபந்தனை விடுதலை செய்யப்படும் கைதிகள் ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஈடுபட வேண்டும்
* நாளை முதல் ( O1.03.2022 ) முதல் ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசன கட்டணம் மாற்றம்.
* உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கரிடம் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தார்.
* உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்தார்.
சென்னை வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
* உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்.
ரஷ்யா- உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பெலாரஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தன் வரலாற்று நூலான உங்களில் ஒருவன் - பாகம் 1 ஐ ராகுல்காந்தி வெளியிட்டார்;
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பெற்றுக்கொண்டனர்.
* தமிழ்நாட்டின் சமூக நீதி இயக்கத்தால் கவரப்பட்டவர் லாலு பிரசாத் யாதவ்; பீகாரிலும் அதை அமல்படுத்த முயற்சித்தார்- பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்.
சரித்திரம் படைப்பவர்கள் வரிசையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
தமிழ்நாடு தனித்துவமான சமூகமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பார்க்கும் போது சமூக நீதி, மக்கள் ஒற்றுமை குறித்து ஆச்சரியமாக இருக்கும்.
தமிழகத்தில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது-உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் தேஜஸ்வி யாதவ் உரை
* காஷ்மீருக்காக தமிழ்நாடு குரல் கொடுத்து, தோளோடு தோள் நின்றதை மறக்க மாட்டோம் - ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா பேச்சு.
இந்தியாவிலேயே முதல் முறையாக மாநிலம் ஒன்று யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.
எங்கள் மக்களிடம் எந்த கருத்தும் கேட்கப்படாமலேயே அது நடந்தது.
மொழி, மதம், ஆடை, உணவு சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.
ஹிஜாப் அணிவது, தாடி வைப்பதெல்லாம் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. நாட்டின் மத சுதந்திரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது;
நான் என்ன உடை அணிய வேண்டும், எதன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது எனக்கும் என்னுடைய இறைநம்பிக்கைக்கும் இடையிலானது.
ஸ்டாலினின் உழைப்பை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்னை போல, ஸ்டாலினும் சிறை வாசத்தை அனுபவித்துள்ளார்
நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல் என தொடர் வெற்றிகளை குவிக்கிறார் ஸ்டாலின்
மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டவை என்ற கருத்து உருவாக்கப்பட்டு வருகிறது.
காஷ்மீருக்கு வந்த நிலை தமிழ்நாட்டுக்கோ, கேரளாவுக்கோ வராது என்பது என்ன நிச்சயம்? - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா உரை.
* கூட்டாட்சிக்கு ஆபத்து வரும் போது மாநில சுயாட்சியை காக்க முதல் ஆளாக நிற்பவர் மு.க.ஸ்டாலின் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
நாட்டை பிரித்தாளும் சக்திகளுக்கு எதிரானவர்களை ஒருங்கிணைத்து வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மலையாளிகளும், தமிழர்களும் ஒரே மண்ணின் மைந்தர்கள்; இரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சகோதர, சகோதரிகள்- உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரை.
* ஒரு அருமையான புத்தகத்தை வழங்கியதற்காக நான் என்னுடைய மூத்த சகோதரர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன். - ராகுல் காந்தி பேச்சு.
அவரது வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம் கொண்டது- உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் ராகுல்காந்தி உரை.
ஸ்டாலினுக்கு எத்தனை வயது இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று எனது தாயாரிடம் கேட்டேன்.
ஒரு 58 அல்லது 60 இருக்கும் என அவர் சொன்னார்.
69 வயது என்று சொன்னேன், அவர் கூகுளில் சர்ச் செய்து பார்த்துவிட்டுதான் ஆம் என ஒத்துக்கொண்டார்.
இளமையாக இருப்பது எப்படி என்பது பற்றி ஸ்டாலின் ஒரு புத்தகம் எழுத வேண்டும் - ராகுல் காந்தி
தமிழ்நாடு வருவது எனக்கு எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது; இதனை நான் மேலோட்டமாக சொல்லவில்லை, மனதின் அடி ஆழத்திலிருந்து சொல்கிறேன்.
என்னை அறியாமலேயே பலமுறை தமிழ்நாட்டைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன்.
அந்த பத்திரிகையாளர் கேட்ட போதுதான் அதை உணர்ந்தேன். அப்போதுதான் “நானும் தமிழனே” என்றேன்
நாடாளுமன்ற உரைக்குப் பின்பு நானும் தமிழ்தான் என சொன்னதற்கு காரணம், எனது ரத்தம் இந்த மண்ணில் கலந்துள்ளதாலேயே- ராகுல் காந்தி பேச்சு.
* உங்களால் உருவாக்கப்பட்டவன் நான், என்றும் உங்களில் ஒருவனே- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கலைஞர் போல எனக்கு பேசவோ, எழுதவோ தெரியாது, ஆனால் முயன்று பார்ப்பேன் எனத் தெரிவித்தேன்; அப்படி முயன்று பார்த்ததுதான் உங்களில் ஒருவன் நூல்.
நான் என்றும் மக்களில் ஒருவன் என்பதை சொல்லவே, உங்களில் ஒருவன் என நூலுக்கு பெயர் வைத்துள்ளேன்.
என்னுடைய முதல் 23 ஆண்டுகால வாழ்க்கைதான் உங்களில் ஒருவன் புத்தகம்; விளையும் பயிர் முனையிலேயே தெரியும் என்பார்கள், நான் அரசியல் பயிராகவே வளர்ந்தேன்.
அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னவாகி இருப்பீர்கள் என என்னிடம் கேட்டார்கள்;
நான் அரசியலில்தான் இருந்திருப்பேன் என பதில் சொன்னேன்; அரசியல் என்பது எனது ரத்தத்தில் கலந்தது -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கல்லூரி படித்தபோது நாடகம் போட்டது, திருமணம் செய்தது, திருமணமான 5 மாதத்தில் சிறை சென்றது என எல்லா திருப்பங்களையும் 23 வயதிற்குள் பார்த்தவன் நான்.
மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும்
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள் ஆதரவு தர வேண்டும்.
திராவிட ஆட்சி முறைதான் எங்களது கோட்பாடு; திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் - முதல்வர் மு.க. ஸ்டாலின்.
* ரஷ்யா - உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டில் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது
* பெலாரஸ் நாட்டில் உள்ள தனது தூதரகத்தின் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தியது அமெரிக்கா
பெலாரஸில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தற்காலிகமாக மூடவும் உத்தரவு.
* ரஷ்யாவில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவு.
* 2022- ஆடவர் உலகக் கோப்பை மற்றும் 2022-பெண்கள் யூரோ கோப்பை உள்ளிட்ட அனைத்து வகை போட்டிகளிலும் ரஷ்ய தேசிய அணிகள் மற்றும் club அணிகள் பங்கு பெறுவதற்கு தடை - UEFA மற்றும் FIFA கால்பந்து விளையாட்டு அமைப்புகள் அறிவிப்பு.
No comments:
Post a Comment