அக்னிப்புரட்சி இன்றைய (27.02.2022) முக்கிய செய்திகள்.
* SWIFT வங்கி தகவல் பரிவர்த்தனை முறையில் இருந்து ரஸ்யாவை விலக்கி வைக்க அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ஜெர்மனி இட்டாலி,கனடா ஆகிய நாடுகள் முடிவு
ஒரு நாளைக்கு 40 மில்லியன் வங்கி பண பரிவர்த்தனை தகவல் பரிமாற்றம் செய்யப்படும் அமைப்பு தான் இந்த SWIFT.இதில் 200 நாடுகள் உள்ளன
இன்டெல் மற்றும் AMD ஆகியவை ரஷ்யாவிற்கு மைக்ரோசிப்களை வழங்குவதை நிறுத்துகின்றன
* உக்ரைனில் தங்கள் நாட்டை சேர்ந்த 10 பேர் ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்திருப்பதாக கிரீஸ் அரசு அறிவித்துள்ளது
லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா, ஸ்லோவேனியா ஆகிய 4 நாடுகளின் விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடுவதாக ரஷ்யா அறிவிப்பு.
4 நாடுகளும் தனது வான்வெளியை மூடிய நிலையில் ரஷ்யா அறிவிப்பு.
* தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்.
இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: 43,051 இடங்களில் நடக்கிறது.
காலை 7 மணி முதல் 5 மணி வரை.
* இன்று உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 5வது கட்டமாக 61 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடக்கம்
* அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு பெலாரஸ் பச்சைக் கொடி காட்டியுள்ளதாக, பிரான்ஸ் அதிபர் மாக்ரான் கண்டனம்.
* ரஷ்ய துருப்புக்களை பெலாரஸில் இருந்து விரைவாக வெளியேற உத்தரவிடுமாறு அந்நாட்டு அதிபருக்கு பிரான்ஸ் அதிபர் கோரியுள்ளார்.
* ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
* ஜெர்மனி உக்ரைனுக்கு 1,000 டாங்கி எதிர்ப்பு ஆயுத அமைப்புகளையும் 500 ‘ஸ்டிங்கர்’ ஏவுகணைகளையும் வழங்க உள்ளது.
* உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்ய வீரர்கள் தடுமாற்றம்: அமெரிக்க அதிகாரி
உக்ரேனிய படைகளின் எதிர்ப்பு தாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் கடினமாக இருப்பதாக ரஷ்ய வீரர்கள் புகார் கூறுவதைக் கேட்டதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்: ABC செய்தி நிறுவனம்.
* ஹங்கேரியின் புடாபெஸ்ட்டில் இருந்து 240 இந்தியர்கள் 3 ஆவது விமானத்தில் மும்பை வந்தனர்.
உக்ரைனில் இருந்த 240 இந்தியர்கள் ருமேனியா வந்த நிலையில், விமானத்தில் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
* தெலங்கானாவில் பயிற்சி விமானி மகிமா உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்
புஷ் ஆட்சியில், ரஷ்யா ஜார்ஜியாவை ஆக்கிரமித்தது; ஒபாமா ஆட்சியில் ரஷ்யா கிரிமியாவை ஆக்கிரமித்தது பைடன் ஆட்சியில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தது.
* 21ஆம் நூற்றாண்டின் ஒரே அதிபராக நான் நிற்கிறேன், என் கண்காணிப்பின் கீழ் ரஷ்யா வேறொரு நாட்டின் மீது படையெடுக்கவில்லை: டிரம்ப்
* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 20,439 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 243 பேர் உயிரிழப்பு
* ஸ்பேஸ் X நிறுவனத்தின் செயற்கைக்கோள் வெற்றிகரமாக வானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது; இங்கு ரஷ்யாவின் ராக்கெட் உக்ரைன் மக்களை தாக்குகிறது;
எங்களுக்கு ‘ஸ்டார்லிங்க்’ மூலம் இணைய சேவை வழங்கி ரஷ்யாவை எதிர்க்க துணை நிள்ளுங்கள் - எலான் மஸ்க்கிடம் உக்ரைன் துணை அதிபர் கோரிக்கை
* ஸ்டார்லிங்க் சேவை இப்போது உக்ரைனில் செயல் பட துவங்கியது - ஸ்பேஸ் X நிறுவனர் எலான் மஸ்க் ட்வீட்
ரஷ்யாவின் செய்தி நிறுவனமான RT மற்றும் பிற சேனல்களுக்கு விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நிறுத்தியது யூடியூப்
* ஹங்கேரி தலைநகர் புத்தாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்களுடன் 3வது விமானம் டெல்லி வந்தடைந்தது.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் 'ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் 3வது விமானம் டெல்லியில் தரையிறங்கியது.
ஏற்கனவே 2 விமானங்கள் மூலம் 469 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.
* உக்ரைனிலிருந்து கிரிமியாவுக்கு செல்லும் ஆற்றின் இடையே அமைந்துள்ள அணையை வெடி குண்டு மூலம் தகர்த்தது ரஷ்ய ராணுவம்
24 மணி நேரத்திற்குள் வான்வழி ஆதிக்கத்தை கைப்பற்றி
36 மணி நேரத்திற்குள் இராணுவ தகவல் தொடர்புகளை அழித்து
48 மணி நேரத்திற்குள் தலைநகர் Kyiv-வை சுற்றி வளைத்து
72 மணி நேரத்திற்குள் 'பொம்மை அரசாங்கத்தை' நிறுவ, புடினின் திட்டமாக இருந்தது - அமெரிக்க செனட்டர்.
* அவரால், அந்த நான்கையும் அடைய முடியவில்லை.
ரஷ்ய இராணுவத் தலைவர்கள் தாங்கள் 'சமீபத்தில் பெற்ற' உத்தரவுகளைப் பின்பற்றுவதற்கு முன், மிகக் கவனமாக சிந்திக்க வேண்டும்- அமெரிக்க செனட் புலனாய்வுக் குழுவின் துணைத் தலைவர், மார்கோ ரூபியோ
* ஏமன் நாட்டின் சனா விமான நிலையத்தின் மீது சவூதி & ஐக்கிய அரபு அமீரகம் போர் விமானங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது
முன்னதாக இன்று வடகொரியா சந்தேகத்திற்கிடமான ஏவுகணைகளை வீசியதாக தென்கொரியா கூறியிருந்தது ஒருபுறம் உக்ரைன் ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது
* உக்ரைனில் தங்கள் ராணுவப் பணியை வீரமாகச் செய்ததற்காக ரஷ்ய சிறப்புப் படைகளுக்கு புடின் நன்றி தெரிவித்தார்
உக்ரைனின் தெற்கு மற்றும் தென்கிழக்கில் உள்ள, 2 பெரிய நகரங்களை சுற்றி வளைத்ததாக ரஷ்யா கூறியுள்ளது
* Kharkiv நகருக்குள் ரஷ்ய துருப்புக்கள் மற்றும் இராணுவ வாகனங்கள் நுழைந்து வருகின்றன. - சர்வதேச செய்தி நிறுவனம் AFP தகவல்
* அரசு பேருந்து ஓட்டுநர்கள் மரண விபத்து ஏற்படுத்தியிருப்பின் வேறு கிளைக்கு இடமாற்றம் செய்யும் விதி ரத்து - தமிழக அரசு அரசானை வெளியீடு.
அதே கிளையில் வேறு வழித்தடத்தில் ஒட்டுநர்களை மாற்றம் செய்யலாம்.
ஒட்டுநர்கள் வேறு கிளைக்கு இடமாற்றம் செய்யப்படுவதை ரத்து செய்யக்கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்றதால் அரசாணை.
* உக்ரேனியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவின் குழு பெலாரஸ் வந்தடைந்தது.
Gomel நகரில் பேச்சுவார்த்தையை தொடங்க தயாராக உள்ளது.
இப்போது, உக்ரேனியர்களின் முடிவுக்காக ரஷ்யா காத்திருக்கிறது -ரஷ்ய அதிபரின் பத்திரிகை செயலாளர், பெஸ்கோவ்.
* பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மறுப்பு.
வார்சா(போலந்து), இஸ்தான்புல்(துருக்கி), பாகு(அஜர்பைஜான்) - இந்த நகரங்களை பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவுக்கு பரிந்துரைத்திருந்தோம்- ஜெலன்ஸ்கி.
உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தும் பெலாரஸில், பேச்சுவார்த்தை நடத்த முடியாது- உக்ரைன் அதிபர்.
* இந்திய மாணவர்களுக்கு போலந்து அரசு அனுமதி.
உக்ரைனில் இருந்து விசா இன்றி இந்திய மாணவர்கள் எல்லை கடந்து வரலாம் என போலாந்து அரசு அறிவிப்பு.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் தஞ்சம் அடைவோருக்கு உதவ நடவடிக்கை.
* ரஷ்ய வீரர்கள் 4,300 பேர் கொல்லப்பட்டனர்- உக்ரைன் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ஹன்னா மேயர்.
4,300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது - உக்ரைன் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர்.
* மீண்டும் வரும் கொரோனா: ஜூனில் கொரோனா 4வது அலை?
இந்தியாவில் கொரோனா 4வது அலை ஜூன் 22 தொடங்கி அக்டோபர் 24ம் தேதி வரை நீடிக்கும்; ஆகஸ்ட் மாதம் உச்சத்தை தொட்டு படிப்படியாக குறையலாம்- கான்பூர் ஐஐடி கணிப்பு.
* போர் நடைபெற்று வரும் உக்ரைனுக்கு ஜப்பான் நிதியுதவி.
மனிதாபிமான அடிப்படையில் 100 மில்லியன் டாலர் நிதி அளிப்பதாக ஜப்பான் அறிவிப்பு.
* ரஷ்யாவின் அணு ஆயுத சிறப்புப் படையை தயாராக இருக்கும்படி உத்தரவு பிறப்பித்தார் ரஷ்ய அதிபர் புதின்.
* KHARKIV மற்றும் KIEV நகரங்களில் உள்ள இரண்டு அணுசக்தி நிலையங்களுக்கு சேதம், உக்ரைன் அரசு தெரிவித்துள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் தகவல்
No comments:
Post a Comment