பாட்டாளிகளை சந்தித்தேன்... பரவசத்தில் மிதந்தேன்! - மருத்துவர் இராமதாசு அய்யா பெருமிதம். - Agnipuratchi

பாட்டாளிகளை சந்தித்தேன்... பரவசத்தில் மிதந்தேன்! - மருத்துவர் இராமதாசு அய்யா பெருமிதம்.

Share This

பாட்டாளிகளை சந்தித்தேன்...
பரவசத்தில் மிதந்தேன்! - மருத்துவர் இராமதாசு அய்யா பெருமிதம்.

தைலாபுரம் தோட்டம் இழந்த அதன் கலையில் ஒரு பகுதியை இன்று மீண்டும் பெற்றது. கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு வரை எனது தைலாபுரம் தோட்டத்து இல்லம் பாட்டாளிகளால் நிரம்பியிருக்கும் என்பதையும், கொரோனா ஊரடங்கு காரணமாக பாட்டாளிகள் வருகை இல்லாததால் தைலாபுரம் தோட்டம் கலையிழந்து காணப்படுவதாகவும் பல முறை முகநூல் பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். பாட்டாளிகளால் எனது இல்லம் நிரம்பும் நாள் எந்நாளோ? என்று எனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தேன்.

நான் விரும்பிய மாற்றம் இன்று நிகழ்ந்தது.

பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்து இன்று  கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுடன் தைலாபுரம் தோட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தினேன்.

விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ், வடக்கு மாவட்ட செயலாளரும், மயிலம் சட்டப்பேரவை உறுப்பினருமான சிவக்குமார்,  மத்திய மாவட்ட செயலாளர் பாலசக்தி, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் இராசா, மேற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ. மகேஷ்  ஆகியோர் கலந்து கொண்டனர்.  பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் இசக்கி படையாட்சியும் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டார்.

சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் முனைவர் சிவப்பிரகாசமும் இன்று மாலையில் என்னை சந்தித்து பேசினார்.

கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்குப் பிறகு தைலாபுரம் தோட்டத்தில் நடந்த இந்த சந்திப்புகள் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும்,  பரவசத்தையும் அளித்தன. இழந்த உற்சாகத்தையும், மன நிறைவையும் இன்று மீண்டும் பெற்றேன்.

அடுத்தகட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோருடன் நாளை கலந்தாய்வு நடத்தவுள்ளேன். பாட்டாளிகளுடனான சந்திப்புகள் இனி தொடரும். தைலாபுரம் தோட்டம் இனி கலைகட்டும்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages